உன் வாழ்வை சீரழிக்கும் ஒரே குணம்! அது எது தெரியுமா? Thannambikkai Story in Tamil

Thannambikkai Story in Tamil
Thannambikkai Story in Tamil


வணக்கம் நண்பா ஒரு நேர்காணலில் Jack Ma கூறினார் மனிதர்களிடம் ஒரு குணம் உண்டு அது அவர்களது வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து அவர்களை ஒரு மூலையில் முடக்கி போடுகின்றது. அவர்களது மனதில் எத்தனை பெரிய லட்சியம் இருந்தாலும் அதை ஒரே நொடியில் தகர்த்தெறிகின்றது. அவர்கள் எத்தனை கடினமாக உழைத்தாலும் அவ் உழைப்பை மண்ணோடு மண்ணாகின்றது அக்குணம் எது தெரியுமா அதுவே பயமாகும். அளவான பயம் எப்போதும் நம்மை நிதானமாக இயங்கவைக்கும். ஆனால் அப்பயம் உன்னிடம் அளவுகடந்து தோன்றும் ஆக இருந்தால் அது நீ செய்ய விரும்பும் காரியங்களைச் செய்ய விடாமல் தடுக்கும் ஆக இருந்தால் அப்பயத்தை உன் மனதை விட்டு துரத்தி அடிப்பது இன்று நீ செய்ய வேண்டிய முதல் காரியம் ஆகும். 

நண்பா இன்று உன் மனதில் பல தீராத கனவுகள் இருக்கலாம் ஆசைகள் இருக்கலாம் என் வாழ்க்கை இவ்வாறு அமையவேண்டும் என்ற கற்பனை இருக்கலாம். இவை அனைத்திற்கும் விடாது போராட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கலாம். ஆனால் உன் மனதில் இருக்கும் தேவையற்ற பயம் இவற்றை அடைவதில் இருந்து உன்னை தடுத்து வைத்திருக்கும். ஒரு முயற்சியை நீ செய்ய ஆரம்பிக்கும் முன்னதாகவே ஒருவேளை இம் முயற்சி தோல்வியடைந்தால் அதோடு என் வாழ்க்கை நாசமாகிவிடுமோ சக மனிதர்கள் என்னை கேலி செய்வார்களோ புறக்கணித்து விடுவார்களோ போன்ற எண்ணங்கள் உன் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். அவ் எண்ணங்கள் பயமாக மாறிய அக் காரியத்தை செய்வதிலிருந்து உன்னை தடுக்க ஆரம்பிக்கும். தேவையில்லாத முயற்சிகளில் ஈடுபட்டு மூக்குடைக்காமல் ஏதோ கிடைத்த வாழ்க்கையையாவது பாதுகாப்பாக வாழ்ந்துமுடித்தாள் போதுமானது என்ற எண்ணம் மனதில் தோன்ற ஆரம்பிக்கும். ஆனால் உண்மை எது தெரியுமா உன் மனதில் எழும் பயத்தின் சொல் கேட்டு அது இழுத்த இழுப்பிற்கு எல்லாமே நீ செல்வாயாக இருந்தால் உன் வாழ்க்கை என்றும் நீ நினைத்தபடி மாறப்போவதில்லை. அதில் நீ கண்ட கனவுகள் பலிக்கப் போவதில்லை. இவ்வுலகம் உன்னை வியந்து பார்க்கும் ஒரு காலம் வரப் போவதில்லை மாறாக நீ விரும்புகிறாயோ இல்லையோ யாரோ ஒருவர் உனக்களித்த ஒரு வாழ்க்கையில் அவர் போடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து அவரது கனவுகளுக்காக நீ உழைத்து கொண்டிருப்பாய் உன் உழைப்பில் பலர் தங்களது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொள்வார்கள். ஆனால் உனது ஆசைகள் என்றும் ஓர் எட்டா கனியாகவே இருக்கும். அவற்றை அடைய முடியவில்லையே என்ற வருத்தமும் இயக்கமும் உன் வாழ்நாள் வரை உன்னை துரத்திக்கொண்டே இருக்கும் உன் நிம்மதியை அழித்துக்கொண்டே இருக்கும். எனவே இப்போது முடிவெடு தேவையற்ற பயத்தில் மூழ்கி உனது சுயத்தை இழந்து யாரோ ஒருவரது கனவுகளுக்காக நீ உழைக்க போகிறாயா அல்லது மலையையும் பிளக்கும் ஓர் திடமான மனதுடன் உன் பயத்தை தூக்கி தூர வீசிவிட்டு உன் கனவுகளுக்காக உழைக்க போகிறாயா முடிவு உன் கையில்.

No comments:

Post a Comment