தன்னம்பிக்கை கதைகள் | Positive Energy Story in Tamil

தன்னம்பிக்கை கதைகள் | Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

தன்னம்பிக்கை கதைகள் | Positive Energy Story in Tamil


J. K. Rowling தனது Harry Potter கதையை புத்தகமாக வெளியிட முயற்சித்தபோது இது எல்லாம் ஒரு கதை என மதித்து இதை தூக்கிக்கொண்டு எங்களிடம் வருகின்றாயா என துரத்தி அடித்தார்கள். அன்றைய பிரபல நிறுவனங்கள். Elon Musk மின்சாரத்தில் ஓடும் சூப்பர் கார்களை உருவாக்க போகின்றேன் எனக் கூறியபோது மின்சாரத்தில் ஓடும் ஆட்டோக்கள் வேண்டுமானால் நீ உருவாக்கலாம் ஆனால் சூப்பர் காரை உருவாக்க முடியாது என கிண்டல் அடித்தார்கள் அங்கு இருந்த மீடியாக்கள். நண்பா கோழிகளோடு வளர்ந்த கழுகின் கதையை நீ அறிந்திருப்பாய் அக் கழுகுக்கு அந்தக் கோழிகள் நண்பர்களாக இருக்கலாம் உறவினர்களாக இருக்கலாம் அதற்கு அக் கோழிகள் மீது அளவு கடந்த பாசமும் இருக்கலாம். ஆனால் அக் கோழிகள் கூறும் அறிவுரையும் விமர்சனங்களையும் அக் கழுகு செவிமடுத்து ஏற்றுக்கொள்ளும் ஆயின் அதன் வாழ்நாள் முழுவதும் அதுவும் ஒரு கோழி ஆகவே வாழ்ந்து மடியும். கோழி கூட்டத்தோடு வாழும் அக் கழுகு எப்போது தனக்கான வாழ்க்கையை இதுவல்ல என்பதை உணர்ந்து தனது பாதையை தேடுகின்றதோ. அப்போது அதன் எண்ணங்களுக்கு முட்டுக்கட்டை போட அந்த முழுக்கோழி கூட்டமுமே விரைந்து வரும். ஒரு கோழியாக அவை தங்களது அனுபவத்தையும் அறிவுரையையும் கூறும். ஆனால் ஒரு கழுகுக்கு அந்த அறிவுரைகள் எக்காலத்திலும் பயன்படாது. ஏனெனில் நிலத்தில் புழுக்களை மேய்ந்து கூட்டினுள் அடைப்பட்டு கிடப்பது அக் கழுகின் குணம் அல்ல. மாறாக வான் உயர பறந்து தன்னை விட பலம்மிக்க உயிர்களையும் வேட்டையாடுவதை அக் கழுகின் குணமாகும்.

நண்பா எக்கணம் நீ உன்னை உன் உணர்கின்றாயோ உனது பாதையை தேர்ந்தெடுக்கிறாயோ அக்கணமே உன்னை விமர்சிக்க ஒரு கூட்டமும் உருவாகிவிடும். அக்கூட்டம் முன் முயற்சிகளில் குறைகாணும் அவற்றை மட்டம் தட்டும் உன் தன்னம்பிக்கையை தகர்த்து விட போராடும். நிச்சயம் நீ தோற்று விடுவாய் என்பதை உறுதியாக கூறும். ஆனால் அக்கூட்டத்தின் இரைச்சல்களை எல்லாமே உன் காதில் வாங்கிக் கொள்ளாதே அவர்களது எண்ணங்களை மாற்றுவதற்கோ அவர்களுக்கு உன்னை புரிய வைப்பதற்கோ முயற்சிக்காதே. மாறாக அவர்களை அவர்களது போக்கிலேயே விட்டு விட்டு உன் பாதையில் நீ நம்பிக்கையோடு பயணிக்கத் தொடங்கு முயற்சி செய்யும் போராடு உன் முயற்சியும் போராட்டங்களும் வெற்றி அடையும் தருணத்தில் நீ ஒரு கோழி அல்ல கழுகு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். எனவே கூண்டில் அடைபட்டு தன் தலையை குனிந்தவாறே நிலத்தில் பூச்சிகளை தேடும் ஒரு கோழியாக வாழப் போகிறாயா அல்லது உனது தனித்துவத்தை உணர்ந்து வான் உயர பறந்து அவனையே ஆட்சி செய்யும் ஒரு கழுகாக நீ வாழ போகிறாயா முடிவு உன் கையில்.


No comments:

Post a Comment