Positive Energy Story in Tamil - உன்னை நிரந்தரமாகத் தோற்கடிக்கும் 5 பழக்கங்கள் Motivational Story in Tamil

Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

உன்னை நிரந்தரமாகத் தோற்கடிக்கும் 5 பழக்கங்கள் Positive Energy Story in Tamil


வணக்கம் நண்பா என்ன தான் வாழ்வில் நீங்கள் ஒரு மிகப்பெரும் வெற்றியை அடைய விரும்பினாலும் அதற்காக போராடினாலும் உங்களிடம் சாதாரணமாக இருக்கும் சில பழக்கங்கள் உங்களது மொத்த உழைப்பையும் போராட்டத்தையும் வீணடித்து விடுகின்றன. அப் பழக்கங்கள் சாதாரணமானவை அனைவருக்கும் பொதுவானவை ஆனால் அவை உங்களது வெற்றிக்கு மிகப் பெரும் எதிரியாகும். அவ்வாறான சில பழக்கங்களை நாம் இனி காணவிருக்கிறோம்.


1. முதலாவது சோம்பேறித்தனம் :


சோம்பேறித்தனம் தீயது என்பதை அனைவரும் அறிவார்கள். ஆனால் பல நேரங்களில் அது தங்களது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். சோம்பேறித்தனம் வரும்மனே உங்களது நேரத்தை வீணடிக்கும் ஒன்றல்ல. அது உங்களது மூளையின் செயல் திறனை வெகுவாக குறைக்கின்றது. உங்கள் கண்முன்னே இருக்கும் வெற்றி வாய்ப்புகளை மறைக்கின்றது. காலப்போக்கில் அது உங்களை வாழ்க்கை மீதே ஒரு பிடிப்பற்ற மனிதனாக மாற்றி விடுகின்றது. அதன்பின் நீங்கள் என்னதான் பல வெற்றி கனவுகளைக் கண்டாலும் அவை அனைத்தும் வெறும் கனவுகளாக மட்டுமே இருக்கும். எனவே இன்னொரு முறை நீங்கள் சோம்பேறித்தனத்தால் நீங்கள் ஒரு வேலையைச் செய்யாமல் விடும்போதோ அல்லது பின்னே தள்ளி போடும்போதோ. அக்கணம் உங்களது தோல்வியை நோக்கி நீங்கள் ஒரு படி முன்னே செல்கின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


2. அதிகமாக அறிவுரை கேட்பது :


வெற்றியாளர்கள் அறிவுரை கேட்பார்கள். ஆனால் முட்டாள்கலோ அதை அனைவரிடமும் கேட்பார்கள். அறிவுரை கேட்பது நல்ல விடயம் தான் ஆனால் அதை யாரிடம் எந்த நேரத்தில் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் எதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நீங்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அந்த தெளிவு உங்களிடம் இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு காண்பவர்கள் இடமெல்லாம் நீங்கள் அறிவுரை கேட்டுக்கொண்டிருந்தால் உங்களது முடிவுகளுக்கு அவர்களிடம் அங்கீகாரத்தையும் ஆதரவையும் எதிர் பார்த்திருந்தால் நிச்சயம் உங்களது வாழ்க்கையை ஒரு மிகப் பெரும் குழப்பமாக மாறுவதைத் தவிர வேறு எதையும் கண்டு கொள்ள மாட்டீர்கள்.


3. தாழ்வு மனப்பான்மை :


தன்னை தாழ்வாக என்னும் ஒருவனால் வாழ்வில் எதையும் சாதித்துவிட முடியாது. நிச்சயம் உங்களது வாழ்வில் பல்வேறு வாய்ப்புகள் தொடர்ந்து தோன்றிக்கொண்டே இருக்கும். ஆனால் வாய்ப்புக்களை பயன்படுத்த உங்களிடம் கொடுத்து இருக்க வேண்டும். தன்னம்பிக்கை இருக்க வேண்டும். நிச்சயம் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். அதற்காக எந்த வாய்ப்பை பயன் படுத்தலாம் என்ற தேடல் இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மலை மலையாக உங்கள் முன்னே வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அதன் அருகில் கூட நீங்கள் நெருங்க மாட்டீர்கள். உங்களது வாழ்வில் என்றும் முன்னேற்றம் இருக்காது.


4. அடுத்தவரை குற்றம் சாட்டுதல் :


நீங்கள் உண்மையிலேயே திறமையானவராகவும் ஒரு செயல் வீரனாகவும் வாழ விரும்பினால் வாழ்வின் எத்தருணத்திலும் யாரையும் குற்றம் கூறாதீர்கள். எக்காரணம் கொண்டும் உங்களது இயலாமைக்கான   பழியை வேற ஒருவர் மீது சுமத்தாதீர்கள். ஒரு வெற்றியாளன் வெற்றியடைவதற்கு அவனுக்கு எவருடைய உதவியும் தேவையில்லை. அவன் தன்னிடம் இருப்பதை வைத்து எவ்வாறு வெற்றி அடைவது என்பதை நன்கறிவான். தன்னிடம் இல்லாத திறமைகளை வளர்த்துக் கொள்ள தயாராக இருப்பான். ஆனால் சோம்பேறிகள் தங்களது குறைகளை மறைக்க பிறர் மீது பழி சுமத்துகிறார்கள். அதனால் அவர்கள் ஒரு சிறு திருப்தியை அடைந்து கொள்ளலாம். ஆனால் அவர்களது வாழ்க்கை என்றும் இருளிலே மூழ்கிக் கிடக்கும். எனவே வாழ்வின் எத்தருணத்திலும் யாரையும் குறை கூறாதீர்கள். வெற்றியோ தோல்வியோ எதற்கும் நான்தான் பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அப் ப் பொறுப்பு உங்களிடம் தோன்றும் ஆனால் உங்களது கனவுகளுக்காக போராடுவதில் அது ஒரு மிகப் பெரும் பங்களிப்பைச் செய்கின்றது .


5. காரியங்களை பின்னே தள்ளி போடுதல் :


உங்களது வாழ்க்கையை வின் அடிப்பதற்கான மிகச் சிறந்த வழி எது தெரியுமா ? அது உங்களது காரியங்களை பின்னே தள்ளி போடுவதாகும். வெற்றியாளர்கள் செய்ய நினைத்த காரியத்தை செய்ய நினைத்த நேரத்தில் செய்து முடிப்பார்கள். அவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது திட்டங்களை பின்னே தள்ளி போடுவதில்லை. பயத்தில்லோ அல்லது தேவையற்ற சிந்தனைகளிலோ தங்களது நேரத்தை வீணடிப்பதில்லை. அவர்கள் ஒரு வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டால் வேறு எது குறித்தும் சிந்திக்காமல் அதைச் செய்து முடிப்பார்கள். இந்த பண்பின் காரணமாக வேறு எவராலும் நெருங்க முடியாத மிகப் பெரும் சாதனைகளை கூட அவர்கள் மிக இலகுவாக செய்து முடிக்கிறார்கள். எனவே வாழ்வின் எத்தருணத்திலும் எச்செயலையும் பின்னே தள்ளி போடாதீர்கள். அவ்வாறு நீங்கள் பின்னே தள்ளி போடும் காலமெல்லாம் உங்களது வெற்றியும் பின்னே தள்ளி போடப்படுகின்றது.

நண்பா நாம் மேலே சொன்ன பழக்கங்களில் எது உங்களிடம் இருந்தாலும் அதை இன்றுடன் திருத்திக்கொள்ளுங்கள். இந்த பழக்கங்கள் பார்வைக்கு சாதாரணமாக தோன்றினாலும் இவற்றின் தாக்கம் மிகக் கொடூரமானது. அது உங்களது எதிர்காலத்தையே சிதைத்து விடும் அளவிற்கு சக்திவாய்ந்தது. எனவே உங்களிடம் இருக்கும் தீய பழக்கங்களை தூர வீசுங்கள் நிச்சயம் ஒரு சிறப்பான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.


நன்றி


No comments:

Post a Comment