அமெரிக்காவை ஓடவிட்ட ஏழை நாடு - positive energy story in tamil

positive energy story in tamil
positive energy story in tamil

ஒரேயொரு தந்திரம் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் ஓடவிட்ட ஏழை நாடு - positive energy story in tamil

மேலும் படிக்க :


அன்று இரண்டாம் உலகப் போர் முடிவுற்று 10 வருடங்கள் கடந்திருந்தன. அமெரிக்கா தனது அணு ஆயுத பலத்தோடும் பிற கம்யூனிச நாடுகளை அடக்கிய திமிருரோடும் வலம் வந்து கொண்டிருந்தது. அப்போது வியட்நாமில் ஓர் உள்நாட்டுப் போர் மூண்டது சீனா, ரஷ்யா ஆதரவோடு மீண்டும் கம்யூனிஸ்டுகள் அதில் தலை தூக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் வியட்நாமின் வடக்குப் பகுதியையும் கைப்பற்றிக் கொண்டார்கள். 

ஆசியாவில் மீண்டும் கம்யூனிசம் தலைதூக்கி விடுமோ என்ற பயத்தில் அப்போதிருந்த தெற்கு வியட்நாம் அரசுக்காக வடக்கு வியட்நாம் போராளிகளை எதிர்த்து களத்தில் குதித்தது அமெரிக்கப்படை. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த ஹிட்லரையே வீழ்த்தி விட்டோம். சீனா ரஷ்யா போன்ற வல்லரசுகளை வென்றுவிட்டோம். இந்த வியட்நாம் நமக்கு எம்மாத்திரம் என்ற இறுமாப்போடு களத்தில் குதித்த அமெரிக்க படைக்கு அப் போர்க்களம் ஒரு புரியாத புதிராகவே இருந்தது.

அங்கு அவர்கள் 19 வருடங்கள் போரிட்டார்கள் தங்களது தரைப்படை விமானப்படை, கடற்படை என அனைத்தையும் கொண்டு சென்றார்கள். தங்களது நட்பு நாடுகளின் படைகளை கூட அழைத்துச் சென்றார்கள். ஆனால் வியட்நாமின் போராட்டக்காரர்களை அவர்களால் நெருங்கவே முடியவில்லை. அங்கிருந்த அடர்ந்த காடுகளும் மலைப் பிரதேசங்களிலும் நகர வாழ்க்கை பழக்கப் பட்டிருந்த அமெரிக்க வீரர்களை திண்டாட செய்தது. 

அக் காடுகளில் மறைந்து இருந்த வியட்நாம் கொரில்லா போராளி களின் கையில் அவர்கள் கொத்துக்கொத்தாக பலியாகி கொண்டிருந்தார்கள். 19 வருட போராட்டத்தின் பின் அமெரிக்கா போரில் இருந்து பின்வாங்கியது. இது அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரும் கருப்பு புள்ளியாக மாறியது. வியட்நாம் மீண்டும் கம்யூனிஸ்டுகளின் கைகளுக்கு சென்றது. வியட்நாம் அமெரிக்காவை வீழ்த்தியது எவ்வாறு என்ற விவாதம் பல இடங்களிலும் சூடுபிடித்தது. அதில் அனைவரும் ஒப்புக் கொண்ட ஒரு உண்மை யாதெனில் வியட்நாம் வீரர்கள் தங்களது பலம் என்னவென்பதையும் தன் எதிரியின் பலவீனம் என்னவென்பதையும் தெளிவாக தெரிந்து இருந்தார்கள். 

அவர்கள் தங்களது முடியும் எது முடியாது என்பதையும் தெளிவாக புரிந்து இருந்தார்கள். அதன் காரணமாகவே காடுகளில் மறைந்து தாக்கும் கொரில்லா போர் முறையை கையாண்டு அன்று உலகையே தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த அமெரிக்கா என்ற வல்லரசு நாட்டையே ஓட விட்டார்கள். நண்பா வாழ்வில் நீ வெற்றி அடைய விரும்பினால் அதை உன் தனித்துவத்தை கொண்டே அடைந்து கொள்ள முடியும். நீ உன் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை தெளிவாக கண்டறிந்து அதற்கேற்ப உன் முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும் உன் இலக்குகள் எத்தனை கடினமானதாக இருந்தாலும் அதை கச்சிதமாக திட்டமிட்டு அடைந்து கொள்ள வேண்டும். 

அது தவிர்த்து வேறு எவ் வழியில்  நீ முயற்சி செய்தாலும் அம் முயற்சிகளில் உனக்கு எந்த பலனும் கிட்டப் போவதில்லை. எனவே இன்றிலிருந்து உனது தனித்துவத்தை தேடு. அதை அடையும்வரை பின்வாங்காதே அதை அறிந்த பின்னர் என்றும் உன் பயணத்தை நிறுத்தி விடாதே.


மேலும் படிக்க :



முடிந்தவரை பகிரவும்



நன்றி

No comments:

Post a Comment