ஓர் போர்க் குதிரையாய் இரு Motivational Story in Tamil

ஓர் போர்க் குதிரையாய் இரு Motivational Story in Tamil

Motivational Story in Tamil


ஒரு கொடூர போர்க்களத்தில் ரத்த வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கையில் அங்கு உள்ள வீரர்கள் அனைவரும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கையில் குதிரைகள் மட்டும் தன் கண்களில் துளி கூட பயமின்றி தன் முன்னே பாய்ந்து கொண்டிருக்கும். அம்புகளையும் பொருட்படுத்தாது தனது இலக்கினை நோக்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கும் அப்போது அவ்வாறு பாய்ந்து வரும் அம்புகளில் ஒன்று அதை தாக்கி விடும் அதன் கண் முன்னே இன்னும் ஒரு குதிரை உடல் துண்டிக்கப்பட்டு இறந்துபோகும். அப் போர்க்களமே  தீப்பிடித்து எரியும் ஆனால் குதிரை மட்டும் தனது பயணத்தை நிறுத்தாது. தனது இலக்கினை அடையும் வரை ஓயாது  தன் அரசனை பின் வாங்கினாலும் அது பின்வாங்காது குதிரைகள் எப்போதும் மன உறுதியின் அடையாளமாக பார்க்கப் படுகின்றன அவை எவ்வளவு மோசமான சூழலிலும் தன் மன உறுதியை கைவிடுவதில்லை முயற்சியிலிருந்து பின்வாங்குவதில்லை நண்பா இக் குதிரைகளைப் பார் அவை போராட்டத்தின் மகிமையைக் கூறும். தன்னை சுற்றி இருக்கும் சூழல் எவ்வளவு மோசமாக இருந்தாலும் தனது பாதையில் எத்தனை கொடூரங்கள் தடைகள் தோன்றினாலும் தனது வாழ்க்கையை பெரும் போராட்டமாக மாறினாலும் அவை அணுவளவும் மனம் தளர்வதில்லை. தனது இலக்கிலிருந்து தன் கவனத்தை திருப்புவது இல்லை அந்த இலக்கை அடையும் வரை தனது போராட்டத்தை நிறுத்துவதில்லை உன் வாழ்வில் நீ ஒரு மகத்துவமிக்க வெற்றியை அடைய விரும்பினால் குதிரை போன்றதொரு போராட்ட வீரனாக நீ மாற வேண்டும். இவ்வுலகம் உன் முன்னே எத்தனை தடைகளை வீசினாலும் உன் வாழ்க்கையே கொழுந்துவிட்டு எரிந்தாலும் உனக்கு உதவ எவருமே முன்வராத விட்டாலும் உன் முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டே இருந்தாலும் உன் இலக்கை நோக்கி பயணிப்பதில் இருந்து நீ சிறிதும் பின்வாங்கக் கூடாது. உன் முயற்சியை எவர் விமர்சித்தாலும் உனக்கு உதவ மறுத்தாலும் தனி ஒரு மனிதனாக போராடி கற்றுக்கொள்ளவேண்டும் கடினமாக உழைக்க கற்றுக்கொள்ள வேண்டும். உன் மனதினுள் எத்தனை பெரிய வலி இருந்தாலும் அதை ஒரு மூலையில் வீசிவிட்டு சுறுசுறுப்புடன் கனவுகளுக்காக உழைக்க வேண்டும். நண்பா போர்க்களத்தில் பாய்ந்து செல்லும் அந்தக் குதிரைகளை பார் மகிமையையும் கடின உழைப்பின் பெருமையையும் மன உறுதியின் முக்கியத்துவத்தையும் உனக்கு கூறும்.




முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment