The Rock Dwayne Johnson Motivational Story in Tamil

The Rock Dwayne Johnson Motivational Story in Tamil

The Rock Dwayne Johnson Motivational Story in Tamil

என் இளமை காலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நிறைந்ததாகவே இருந்தது என் தாயும் தந்தையும் விவாகரத்து பெற்றார்கள். ஒரு வேளை உணவிற்கு வழியில்லாமல் நாங்கள் திண்டாடிக் கொண்டிருந்தோம் எனது 14வது வயதில் எங்களை நாங்கள் குடியிருந்த வீட்டை விட்டே துரத்தினார்கள். உதவிக்கு யாரும் இன்றி நானும் எனது தாயும் வீதியில் நின்று கொண்டிருந்தோம் என் இளமைக் காலத்தில் நான் கற்றுக் கொண்ட ஒரே மந்திரம் பணம் மட்டுமே என் கஷ்டங்களை போக்க பணம் தேவை ஆனால் அப்பணத்தை நேர்மையாகச் சம்பாதிக்க எனக்குத் தெரியவில்லை. வாழ்க்கையுடன் கஷ்டப்பட்டு போராடும் தைரியமும் எனக்கு இருக்கவில்லை எனவே நான் ஒரு திருடனாக மாறினேன் அதற்காக 8 முறை  சிறை சென்றேன்  அப்போதே நான் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டேன் இவ்வாழ்க்கை மிகமிகக் கடினமானது போராட்டமாகும் ஒருவன் நல்வழியில் செய்கின்றானோ அல்லது தீய வழியில் செய்கின்றானோ நிச்சயம் அவன் வாழ்க்கை பெரும் நெருக்கடியை தாங்கித்தான் ஆகவேண்டும் இதிலிருந்து எவராலும் தப்பித்துவிட முடியாது. எனவே அன்றிலிருந்து இவ் வாழ்க்கை யை கண்டு பயந்து ஒதுங்காமல் தைரியமாக எதிர்கொள்ள ஆரம்பித்தேன் உதைபந்தாட்டத்தில் எனது நிரந்தர தொழிலாக மாற்றிக் கொண்டேன் சில காலங்களுக்கு வாழ்க்கை மிக மிக மகிழ்ச்சியாக நகர்ந்து சென்றது அந்த மகிழ்ச்சியே என் வாழ்நாள் முழுவதும் தொடரும் என நான் எண்ணினேன் ஆனால் அது முற்றிலும் தவறாகும். என் வாழ்வில் போராட்டங்கள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தன நான் விளையாடிக் கொண்டிருந்த உதைபந்தாட்ட Club லிருந்தே என்னை துரத்தி விட்டார்கள் கையில் வரும் ஏழு டாலர்கள்லோடு  வீதியில் நின்று எனது எதிர்காலம் வெறும் இருள்கள் நிறைந்ததாகவே தென்பட்டது. வாழ்க்கை மீது மீண்டும் பயம் தோன்ற ஆரம்பித்தது இப்போராட்டங்களில் விரைந்து ஓடி ஏதாவது ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது. மனம் பதட்டத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது ஆனால் அதைச் செய்வதாக இல்லை நானே வாழ்க்கையுடன் மீண்டும் போராட முடிவு எடுத்தேன். 

The Rock Dwayne Johnson Motivational Story in Tamil

இந்த சோதனைகளை தைரியமாக எதிர்கொள்ள முடிவெடுத்தேன் அதனால் Wrestling விளையாட்டில் இணைந்து கொண்டேன் தொடர்ந்து போராடினேன் வெற்றி பெற்றேன் அந்த வெற்றியினால் இருண்டு கிடந்த  என் எதிர்காலத்திற்கு ஒளியூட்ட ஆரம்பித்தன இன்று என் வாழ்க்கை மகிழ்ச்சியானது ஒரு பயணமாக மாறிவிட்டது இருந்தும் எனது போராட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றேன் நிச்சயம் வாழ்க்கை உங்களை அடித்து கீழே தள்ளும் அதிலிருந்து நீங்கள் சுதாரிப்பதற்கு முன்பாக உங்கள் மீது ஒரு கல்லை வீசும் ஆனால் அது எத்தனை கடினமாக உங்களை சோதித்தாலும் மனம் தளராது முன்னரும் ஒரு தைரியசாலியாக நீங்கள் மாற வேண்டும் மாறாக வாழ்க்கையைக் கண்டு பயந்து ஒளியும் ஒரு கோழையாக நீங்கள் வாழ்வீர்களாக இருந்தால் நிச்சயம் என்றும் உங்களது வாழ்வில் ஒளி பிறக்க போவதில்லை. உங்கள் மனதில் இருக்கும் பயம் நீங்கப் போவதில்லை என்று வெற்றிக்கான ஒரு மந்திரத்தை நான் உங்களுக்கு கூறப்போகிறேன். வாழ்வில் எப்போதும் உங்கள் கஷ்டத்தை நினைவில் கொள்ளுங்கள் அன்று நீங்கள் அனுபவித்த சோதனைகளை நினைவில் கொள்ளுங்கள் நினைவுகளோடு உங்களது நிகழ்கால முயற்சிகளை ஆரம்பியுங்கள் ஏனெனில் அன்று நீங்கள் அனுபவித்த கஷ்டங்கள் இன்று உங்களது முயற்சிகளுக்கான உந்து சக்தியாகும் அச்சத்தை முறையாக பயன்படுத்தினால் வாழ்வில் நீங்கள் எண்ணிய உயரங்கள் அனைத்தையும் அடைந்து கொள்ளலாம் அன்று நான் வெறும் 7 டாலர்கள் பணத்தோடு இருண்ட எதிர்கால தோடு வீதியில் நின்றேன் அதனால் இன்று எனது படத் தயாரிப்பு நிறுவனம் விளம்பர நிறுவனம் உட்பட நான் ஆரம்பித்த அனைத்து வணிகம்களுக்கும் 7 டாலர்கள் என்ற பெயரையே வைத்துள்ளேன். நிச்சயம் எனது இறந்தகால வலிகலே எனக்கு ஒரு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தந்த அவை வாழ்க்கையோடு போராடும் தைரியத்தை எனக்கு தந்தன இன்று அந்த யுக்தியை நான் உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன் உங்கள் கஷ்டங்களை எண்ணிக் கொள்ளுங்கள் வழிகளை எண்ணிக்கொள்ளுங்கள் அவமானங்களை எண்ணிக்கொள்ளுங்கள் அந்த எண்ணங்களோடு உங்களது வெற்றிக்காக களத்தில் இறங்குங்கள் இந்த நொடியிலிருந்து உங்களது வெற்றியும் ஆரம்பமாகிவிடும்.



முடிந்தவரை பகிரவும்



நன்றி












No comments:

Post a Comment