எதற்கெடுத்தாலும் சோம்பேறித்தனம் கொள்கின்றாயா Motivational Story in Tamil

 எதற்கெடுத்தாலும் சோம்பேறித்தனம் கொள்கின்றாயா Motivational Story in Tamil

Motivational Story in Tamil

அவன் ஒரு சோம்பேறி இளைஞன் வாழ்வில் முன்னேற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு மிக அதிகம் ஆனால் அதற்காக உழைக்க அவன் என்றும் தயாராக இருந்ததில்லை கஷ்டப்படாமல் முன்னேறும் வாய்ப்புக்காக அவனிடமும் இயங்கிக் கொண்டிருந்தான். அயலூரில் இருந்து பொருட்களை வாங்கி வந்து தனது ஊரில் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் அவனும் அவனது குடும்பத்தினரும் பசியாற்றி வந்தார்கள் மிக விரைவாக கஷ்டமின்றி அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவனது எண்ணம். ஆனால் என் வேலையை எடுத்தாலும் அதில் கடினமாக உழைத்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நிலை அதற்கு இவன் தயாராக இல்லை இவ்வாறு இவனது வாழ்க்கையே பெரும் குழப்பத்தில் கழிந்து கொண்டிருந்தது ஒருநாள் தன் நண்பன் மூலம் ஒரு முனிவர் குறித்து அறிந்து கொண்டான் அவன் அவரிடம் சென்றால் உன் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நண்பன் கூற வேகவேகமாக முனிவர் வசிக்கும் இடத்தை நோக்கி விரைந்தான். அவன் அது ஒரு காட்டின் நடுவே அமைந்திருக்கும் குகையாகும் உள்ளே அம்முனிவர் பல காலம் வசித்து வருகின்றார். அந்த இளைஞனும் காட்டினுள்ளே  நுழைந்து அந்தக் குகையை அடைந்து முனிவரிடம் தனது மனக் குறைகள் அனைத்தையும் கொட்டித் தீர்த்து சுவாமி நீங்கள் தான் என் வாழ்க்கையே கஷ்டம் இல்லாமல் வாழும் வழியை எனக்கு காட்ட வேண்டும் என்றான். அதற்கு முனிவர் இங்கு இருந்து திரும்பிச் செல்லும்போது உனது கேள்விக்கான பதிலை அடைந்து கொள்வாய் என்றார். அவருக்கு நன்றி கூறி விட்டு வீடு திரும்பினார் அந்த இளைஞன் காட்டின் வழியாக பயணித்து கொண்டிருக்கும் போது ஒரு கால் முழுமையாக துண்டிக்கப்பட்ட நரி ஒன்று ஒரு குகை முன்னால் படுத்து இருப்பதை அவதானித்தால் அவன் அதை கண்டதும் அடடா எத்தனை துர்பாக்கியமான உயிரினம் இது வரும் மூன்று காலை வைத்துக்கொண்டு இதனால் எவ்வாறு வேட்டையாடி உணவு உண்ண முடியும் மிக விரைவிலேயே இது இறக்கத்தான் போகின்றது என எண்ணியவாறே அதை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு உறுமல் சத்தம் கேட்டது அங்கு ஏதோ மிருகம் வருகின்றது என்பதை சுதாகரித்துக் கொண்ட அவன் உடனே அருகில் இருந்த புதரில் மறைந்து அவ்விடத்தை நோட் விட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு புலி தன் வாயில் பெரியதொரு இறைச்சித் துண்டை கவ்விக்கொண்டு வந்து அந்த நரி முன்னே போட்டுவிட்டுச் சென்றது. அந்த நரியோ இறைச்சியை உண்ண ஆரம்பித்தது. அந்த முனிவர் கூறியது அவன் கண்முன்னே தோன்றியது நிச்சயம் என் கேள்விக்கான பதில் இதுதான் கடவுள் எவ்வாறு எங்கு படுத்திருக்கும் நரிக்கு ஒரு புலியின் மூலம் உணவளித்தார் ஓ அது போலவே நான் எந்த வேலையும் செய்யாமல் விட்டாலும் எனக்கும் உணவு அளிப்பார் என எண்ணிக்கொண்டான். வீட்டிற்குச் சென்றதும் அதுவரை தான் செய்து கொண்டிருந்த வியாபாரத்தையும் விட்டுவிட்டு தன் விருப்பம் போல வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் நாட்கள் கடந்தன ஆனால் அவன் எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை பதிலாக குடும்பத்தின் வறுமை மென்மேலும் அதிகரித்தது மூன்று வேளை உணவிற்கே அவர்கள் திண்டாடும் நிலை தோன்றியது. அவ்விளைஞன் கோபத்தின் உச்சத்தை அடைந்து அந்த முனிவரிடம் முன்னேற வழி கேட்டால் அவர் நம்மை இப்படி அகல பாதாளத்தில் தள்ளி விட்டார் என எண்ணி வெறுப்பு அடைந்தான். 

Motivational Story in Tamil

உடனே மீண்டும் அந்த முனிவரை சந்திக்கச் சென்றால் அவர் முன் போய் நின்று நீங்கள் எல்லாம் ஒரு முனிவராக நீங்கள் கூறிய அறிவுரையை கேட்டதால் தான் இன்று என் வாழ்க்கையே சீரழிந்து விட்டது என கத்த ஆரம்பித்தான். அவனை பொறுமையோடு பார்த்துக் கொண்டிருந்த முனிவர் மகனே உனக்கு நடந்ததை கூறி என அன்போடு வினவினார் அதற்கு அவளும் அந்த காட்டில் தான் கண்ட நிகழ்வையும் அதன் மூலம் தான் கற்றுக்கொண்ட பாடம் பற்றியும் முனிவரிடம் கூறினால் அதற்கு அவரோ மகனே அன்று நீ கண்ட சம்பவமும் அதற்குப் பின்னால் இருந்த தத்துவமும் உண்மையானதுதான் ஆனால் அதை நீ புரிந்து கொண்ட முறையை தவறானதாகும் அச்சம்பவத்தை  கண்டதும் நீ உன்னை அந்த நரியின் இடத்தில் வைத்துக் கொண்டாய் நீ எந்த முயற்சியும் செய்யாவிட்டாலும் கடவுள் உனக்கு வெற்றியைத் தருவார் என எண்ணிக் கொண்டாய் ஆனால் நானோ உன்னை அந்தப் புலியாக வாழ சொன்னேன் உன் அறிவையும் பலத்தையும் கொண்டு உன் முன்னே இருக்கும் பலவீனமான அவர்களை வாழ வைக்க சொன்னேன் மகனே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு பலவீனமான உயிராக வாழ்வதில் எவ்விதச் சிறப்பும் இல்லை அவ் வாழ்க்கையில் நாம் என்றும் அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டும் இன்று அவ்வாழ்க்கை உனக்கு சொகுசாக தோன்றலாம் ஆனால் மிக விரைவிலேயே அது நரகமாக மாறிவிடும். கடவுளின் இன்று பலமிக்க இளைஞனாக படைத்துள்ளார் அவர் உன்னிடம் எதிர்பார்ப்பது அந்தப் புலியின் வாழ்க்கையே நீ உனது அறிவையும் பலத்தையும் கொண்டு உனது குடும்பத்திற்கும் உன்முன்னே இருக்கும் பிற மக்களுக்கும் ஓர் அழகிய வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும். என்பதையே அன்று வாழ்வில் முன்னேற வழி கேட்டாய் அல்லவா நிச்சயம் ஒரு சோம்பேறி யால் வாழ்வில் முன்னேறவே முடியாது உனக்கு ஒரு சிறப்பான வாழ்க்கை வேண்டுமெனில் உன் மனதில் இருக்கும் சோம்பேறித்தனத்தை நீ மூட்டை கட்ட வேண்டும் அது எவ்வாறு என்பதை கூறுகிறேன் கேள் என்று உன் மனதில் உன்னை தூங்க விடாத கனவுகள் உருவாகின்றன அக்கணமே சோம்பேறித்தனம் உன்னை விட்டு நீங்கிவிடும் வாழ்வில் அவ்வாறானதொரு கனவினை நீ கண்டறியவேண்டும் அதையே உன் வாழ்க்கை ஆக்கிக்கொள்ள அந்த கனவினால்  நீ மட்டும் அல்லாது உன்னை சார்ந்தவர்களும் பயனடைய வேண்டும் உன்னால் அவர்களது வாழ்க்கையும் சலிப்படைய வேண்டும் அவ்வாறானதொரு மனிதனாக வாழ முடிந்தால் வெற்றியையும் தாண்டி எவருமே அடையாத ஒரு மன அமைதியை நீ அடைந்து கொள்வாய் என கூறி முடித்தார் துறவி.



முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment