|
Horror Story Tamil |
திகில் பேய் கதை - Horror Story Tamil
நந்தபுரம் என்ற பெயர் கொண்ட ஒரு கிராமம். அந்த கிராமத்தில் அதிகமாக மாடுகள் வளர்ப்பார்கள். அங்கே இருக்கிற ஜனங்கள் எல்லாவகையான மாடு பசுமாடு, எருமை மாடு, இப்படி நிறைய மாடுகள் வளர்க்கறாங்க. ஒவ்வொரு வருஷமும் வெயில் காலத்துல நந்தபுரம் கிராமத்தில ஒரு சந்தை நடக்கும். அந்த சந்தைக்கு ரொம்ப தூரத்தில் இருக்கிற மக்கள் எல்லாரும் அந்த சந்தைக்கு மாடு விற்க வாங்க மக்கள் வருவாங்க. நந்தபுரம் கிராமத்தை விட்டு ரொம்ப தூரத்தில ஆலடியூர் என்ற ஒரு கிராமம் இருந்துச்சி அங்க ராகுல் என்ற ஒரு ஸ்வீட் கடைக்காரன் இருந்தான். ராகுல் ஓட மாட்டுக்கு வயசாயிடுச்சு அதோட உடம்பு சரி இல்லை. அவன் ரொம்ப நாளா ஒரு புது மாடு வாங்கணும் நினைச்சிட்டு இருந்தான்.
ராகுல் தன் மனைவியிடம் நந்தபுரம் கிராமத்திற்கு போகணும் என்று நினைக்கிறேன். அடுத்த மாதம் அங்கே மாட்டு சந்தை நடக்கும். நம்ம வயதான மாட்ட வெச்சு எந்த வேலையும் பார்க்க முடியலை. அதனால இந்த மாட்ட வித்துட்டு புது மாடு வாங்கலாம் என்று நினைக்கிறேன். அதற்கு அவன் மனைவி சரி போயிட்டு வாங்க. போயிட்டு வரும்போது எனக்கு ஒரு டஜன் வளையல் வாங்கிட்டு வாங்க. நந்தபுரம் இருக்கிற வளையல் ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விபட்டிருக்கேன். சரி வளையலும் வாங்கிட்டு வரேன். ராகுல் ஓட கிராமத்திலிருந்து நந்தபுரம் போகறதுக்கு இரண்டு நாட்கள் ஆகும். அந்த கிராமத்திற்கு காட்டு வழியா தான் போகணும் அதனால நடந்து தான் போகனும். ராகுல் ஓட மனைவி அவனுக்கு தேவையான இரண்டு நாள் காண சாப்பாடு கட்டிக் கொடுத்தா. ராகுல் சாப்பாடு மூட்டை அதோட அவன் பழைய மாட்டை கூட்டிகிட்டு நந்தபுரம் கிராமத்துக்கு போக ஆரம்பிச்சேன்.
நந்தபுரம் கிராமத்து கிட்ட இருக்கிற நதி கிட்ட போறதுக்குள்ள ராத்திரி ஆயிடுச்சு. நதிகரை கிட்ட ஒரு மாட்டு கொட்டாய் இருந்துச்சு. அன்னைக்கு ராத்திரி அந்த மாட்டு கொட்டாய் இருக்கலாம்னு ராகுல் முடிவு பண்ணினான். அப்புறம் விடிஞ்சதும் அந்த நதியைத் தாண்டி தனது பயணத்தை தொடரலாம் என்று நினைத்தான். ராகுல் அந்த மாட்டு கொட்டாய் கிட்ட போனப்ப அந்த மாட்டு கொட்டாய் குள்ள நிறைய மாடுகளும் எருமைகளும் கெட்டி இருந்துச்சு. அங்க நிறைய ஜனங்க வேற தூங்கிகிட்டு இருந்தாங்க. இவங்களும் நந்திபுர கிராமத்துக்கு போறவங்க போல இருக்கு என்று நினைத்துக்கொண்டு அங்கு இருக்கிற மாடுகளோட அவனோட மாட்டையும் சேர்த்து கட்டி போட்டான். அதுக்கப்புறம் அவன் மனைவி கட்டிக்கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு சாப்பிட்டு முடிச்சதும் தூங்கி விட்டான். அது வெயில் காலம் இல்லையா அதனால ராகுலுக்கு தாகம் எடுத்துச்சு. அவன் தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தான். எழுந்து பார்த்தபோது அந்த மாட்டு கொட்டாய் படுத்திருந்த ஜனங்கள் யாரையுமே காணும்.
இங்க நிறைய ஆட்கள் இருந்தாங்களே எங்க போயிட்டாங்க என்று வெளியே போய் பார்த்தான். வெளியையும் அங்க யாருமே இல்ல. ஒருவேளை அவங்க திருடர்களா இருப்பாங்களோ. நிச்சயமா அவங்க திருடர்களாக இருப்பாங்க அதனாலதான் என்னை பார்த்ததும் அவங்க ஓடி போயிட்டாங்க. ராகுல் மறுபடியும் மாட்டு கொட்டாய் குள்ள போனான். ஆனா அவன் கையும் காலும் நடுநடுங்கியது. அவன் பார்த்தபோது இரண்டு பெரிய பெரிய கொம்புகள் கொண்ட ஒரு மாடு அதோடு கண்கள் ரெண்டும் இரத்தத்தால நெறஞ்சு இருந்திச்சி. அது அவனை நோக்கி ஓடி வந்துட்டு இருந்துச்சு. வேகமா ஓடிவந்து ராகுல் ரொம்ப மோசமா அது முடிச்சு. அந்த மாடு ராகுல முட்டு முட்டுல ராகுல் ரெண்டு மூன்று அடி தள்ளி போய் அவன் விழுந்தான். முட்டியது அதுக்கப்புறம் அது திரும்பவும் அந்த மாட்டு கொட்டாய் உள்ளேயே போயிடுச்சு.
ராகுல் ஓட கால்ல பலமா அடிபட்டிச்சு இவ்வளவு மோசமான மாடு நான் பார்த்ததே இல்ல. நம் மாட்டு கொட்டாய் தூங்கும்போது அந்த மாடு அங்க இல்லவே இல்லையே. விடிவதற்கு வேற கொஞ்ச நேரம் தான் இருக்கு. என்னோட மாட்ட கூட்டிட்டு போறதுக்கு அந்த மாட்டு கொட்டாய் நான் நுழைந்து தான் ஆகணும் இப்ப நான் உள்ள போகாம விட்டுட்டு அண்ணா எனக்கு 25 ஆயிரம் வரை நட்டம் ஆகிடுமே. ராகுல் கொஞ்சநேரம் வெளியவே நின்னிட்டிருந்தான் வெளியே நமக்கு யாராவது உதவி பண்ண வருவாங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தான். ரொம்ப நேரம் நின்று பார்த்தான் அங்க யாருமே வர மாதிரி இல்ல. ராகுல் மெதுமெதுவாய் நோண்டிக்கிட்டு அந்த மாட்டு கொட்டாய் உள்ள போனான்.
உள்ள போய் பார்த்தபோது அவனோட மாடு மட்டும் தான் இருந்துச்சு. அந்த மாடு பக்கத்துல ஒரு பேய் நின்னுகிட்டு இருந்திச்சி அது அவனோட மாட்டுக்கு வெட்டப்பட்ட தலையை மாலையாய் போட்டு இருந்துச்சு. நீயும் வா உன்னோட தலையையும் வெட்டி மாலையா போடறேன் அப்படின்னு சொல்லி ராகுல் கிட்ட அந்த பேய் வந்துச்சு. ராகுல் பின்னாடி போனா கால் தடுக்கி கீழ விழுந்துட்டான். பின்னாடி திரும்பி பார்த்தபோது அவன முட்டின மாடு அவன் பின்னாடி இருந்துச்சு. ஒரு பக்கம் பேய் இன்னொரு பக்கம் பயங்கரமான மாடு ராகுல் அங்கிருந்து ஓட்டுவதற்கு எந்த வழியும் இல்லை. ராகுல் ரொம்ப பயந்து போய்ட்டான் கடவுள் கிட்ட காப்பாற்றுமாறு வேண்டினான். அங்கு ஒரு குதிரை காரன் வந்தான் கீழே விழுந்து கிடந்த ராகுல அவன் குதிரை மேல தூக்கிட்டு போட்டு ராகுல கூட்டிட்டு போய் விட்டான். ரொம்ப தூரம் போனதுக்கு அப்புறம் குதிரைக்காரன் குதிரை நிறுத்தினான். ரொம்ப நன்றி அண்ணே நீங்க மட்டும் சரியான நேரத்துக்கு வந்து என்ன காப்பாத்த இல்லன்னா அந்தப் பேய் என அடித்துக் கொண்டிருக்கும். ரொம்ப நன்றி அண்ணா. நன்றிய விடு ஆமா நீ நந்தபுரம் கிராமத்துக்கு மொதமொதல்ல போறியா.
ஆமாம் முதல்முறையா தான் போறேன் அதற்கு அந்த குதிரை வண்டிக்காரன் அதனாலதான் நீ அந்த மாட்டு கொட்டாய் பத்தி தெரியாம போயிட்ட. ஏன்னா இந்த வழியா போற எல்லாருக்கும் இந்த மாட்டு கொட்டாய் பத்தி ரொம்ப நல்லாவே தெரியும். ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி கங்காராம் எனும் பெயர்கொண்ட ஒரு ஆளு தன்னோட மகளை கூட்டிகிட்டு கூடவே அவரோட மாட்டையும், எருமையும் விக்கிறதுக்கு நந்தபுரம் கிராமத்துக்கு போய்க்கிட்டு இருந்தாரு. அன்னைக்கு ராத்திரி நதி கிட்ட இருக்கிற மாட்டு கொட்டாய் ல தங்கலாம் என்று முடிவெடுத்தாரு. அன்னைக்கு ராத்திரி அங்க சில கொள்ளைக்காரக வந்தாங்க. கொள்ளை காரங்கராம் ஓட பொண்ண டான்ஸ் ஆட சொல்லி கேட்டாங்க. கங்கா ராம் ஓட பொண்ணு ஆட மறுத்ததால் கங்காராம் அவரோட பொன்னையும் அவங்க கூட்டிட்டு வந்தா மாட்டையும் கொன்னு போட்டுட்டாங்க.
அன்னையிலிருந்து அவங்களோட ஆத்மா எல்லாம் அந்த மாட்டு கொட்டாய் ல தான் அடங்கி இருக்கிறது. அந்த ஆத்மாக்கள் தான் இந்த மாதிரி மனுசங்க தூங்குற மாதிரி பிரம்மையை உருவாகிறது. அதுக்கப்புறம் அந்த குதிரைக்காரர் ராகுல அவருடைய கிராமத்தில் கொண்டு விட்டாரு. அதுக்கு அப்புறம் அவரு போயிட்டாரு. ராகுலுக்கு அவரோட மாடு கிடைக்கவே இல்லை.
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.