என்னால் முடியாது - ஓர் தவளையின் கதை - positive energy story in tamil


positive energy story in tamil
positive energy story in tamil

என்னால் முடியாது - ஓர் தவளையின் கதைpositive energy story in tamil

ஒரு நாள் இரு தவளைகள் இறை தேடி ஒரு பண்ணைக்குள் நுழைந்தன. அப்பண்ணை முழுவதும் உணவு தேடிக் கொண்டிருக்கையில் அவையிரண்டும் பால் சேகரிக்கும் ஒரு தொட்டியில் கால் தவறி விழுந்தன. அந்தத் தொட்டியின் முக்கால்வாசிக்கு பாலால் நிரப்பப்பட்டிருந்தது. அங்கு அந்த தவளைகளால் ஒரு நிமிடம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை. உடனடியாக தொட்டியின் சுவர்களில் ஏறி தப்பித்துவிட முயன்றன. ஆனால் அச்சு சுவர்ரோ மிக வழுவழுப்பாக இருந்தது. அதில் அத் தவளைகள்லால் ஒரு சென்டிமீட்டர் உயரம் கூட ஏற முடியவில்லை. 


வெளியில் இருந்து யாராவது தங்களை தூக்கி விட்டால் மட்டுமே உயிர் தப்ப முடியும் என்ற நிலை. இரு தவளைகளும் பயத்தில் உறைந்தன. ஏதும் உதவி கிடைக்கும் வரை அப்பால் தொட்டியிலேயே தொடர்ந்து நீந்தலாம் என முடிவெடுத்தன. பல மணி நேரம் கடந்தது எந்த உதவியும் கிடைக்கவில்லை. ஆனால் அத் தொட்டியில் இருந்த பாலோ சிறிது சிறிதாக உறைய ஆரம்பித்தது. அப்பால் உறைய உறைய அதில் நீந்துவதும் பெரும்பாடாக மாறியது. அவற்றில் ஒரு தவளை இயலாமையின் உச்சத்தை அடைந்தது. அது தனது நண்பனை நோக்கி நண்பா பலமணிநேரம் இத் தொட்டியிலேயே நாம் நீந்தி கொண்டிருக்கின்றோம். எனினும் இதுவரை எவ்வித உதவியும் நமக்கு கிடைக்கவில்லை. மாறாக இப்பால் தொடர்ந்து உறைந்துகொண்டே வருகின்றது. 


இன்னும் சிறிது நேரத்தில் இது முழுமையாக உறைந்து இதில் அகப்பட்டு நாம் இறந்துவிடுவோம். அப்படி கஷ்டப்பட்டு உடல் வருத்தி இருப்பதற்குப் பதிலாக நான் இப்போதே நீச்சல் அடிப்பதை நிறுத்திவிட்டு இத் தொட்டியில் மூழ்கியிருக்க இறக்க போகின்றேன் எனக் கூறியது. இதைக்கேட்ட அதனது நண்பன் பதறிப் போனது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதே நம்மால் முடிந்தவரை இங்கு போராடுவோம். சிலவேளை நாம் தப்பிக்க வேறு ஏதும் வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறியது. ஆனால் அத் தவலையோ அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை. ஏற்கனவே இங்கு போராடி எனக்கு சக்திகள் அனைத்தையும் இழந்துவிட்டேன். உடல் முழுவதையும் வழிகளால் ஆட்கொண்டு விட்டன. இதற்கு மேல் என்னால் இவ் வலிகளை தாங்கிக்கொள்ள முடியாது ஆகையால் நான் இப்போதே இத் தொட்டியில் மூழ்கி எனது உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன் என்னை மன்னித்துவிடு என கூறிக்கொண்டே அப்பால் தொட்டியில் முழுமையாக மூழ்கிப் போனது. மற்ற தவலையோ தனது நண்பன் தன் கண்முன்னே மூழ்கி இறந்து போவதை மனமுடைந்து பார்த்துக்கொண்டிருந்தது. 


தனது நண்பனை தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் அதனைச் சூழ்ந்து கொண்டது. வருவது வரட்டும் என்ற வைராக்கியத்துடன் தொடர்ந்து நீந்த ஆரம்பித்தது. தொட்டியில் இருந்த பால் உறைந்து கொண்டே இருந்தது. அதில் நீந்துவதும் பெரும் சவாலாக மாறியது. அத் தவளையின் உடலெங்கும் வலி எடுக்க ஆரம்பித்தது. தனது கால்களை அதனால் உணர முடியவில்லை கண்கள் இருட்ட ஆரம்பித்தன. தனது நண்பன் கூறியது போலவே தானும் இப்பால் தொட்டியில் உறைந்து இறக்க வேண்டியதுதாநோ என்ற பயம் அதன் மனம் எங்கும் பரவியது. இப்படியே சில மணிநேரம் நீந்திக் கொண்டிருந்த அத் தவளையின் கண்களில் அப்பால் தொட்டியில் ஒரு பகுதியில் உள்ள பால் மட்டும் வேகமாக இறுகி திண்மமாக மாறி இருந்தது தென்பட்டது. 


அப்பகுதியை நோக்கி விரைந்த அத் தவளை அந்த மேற்பரப்பில் ஏரி அமர்ந்து கொண்டது. சிறிது நேரத்திலேயே அத் தொட்டி முழுவதும் இருந்த பாலும் இறுகி திண்மம் ஆனது. பெருமூச்சு விட்ட அத் தவளை மேலே அண்ணாந்து பார்த்தது. அதன் கண்களுக்கு பரந்து விரிந்த வானுடன் சேர்த்து ஒரு மிகப் பெரும் நம்பிக்கையும் தென்பட்டது. கண்ணை மூடி தனது நண்பனை எண்ணிக்கொண்டது. இத்தனை மணி நேரம் தான் பட்ட கஷ்டங்களை எண்ணிக் கொண்டது. மூச்சை இழுத்து தனது முழு சக்தியையும் ஒன்று சேர்த்து எம்பிக் குதித்தது. அது குதித்த வேகத்தில் அந்த தொட்டியில் தாண்டி பறந்து சென்று ஒரு புல்தரையில் விழுந்து. எழுந்து நின்று அத் தொட்டியை திரும்பி பார்த்தது. அதனுள் மாண்டுபோன தனது நண்பனை எண்ணிக் கொண்டது. அப்போது அதன் மனம் எங்கும் ஒரு எண்ணம் தோன்றியது. 


ஒரு வேலை அத் தொட்டியில் இருந்த பால் மட்டும் உறையாமல் இருந்திருந்தால் நிச்சயம் நாம் அதில் மூழ்கியே இறந்திருப்போம். இருந்தும் அப்பால் உறைந்து கொண்டிருந்தது. இறுதிவரை நம் கண்களுக்கு ஒரு சோதனையாகவே தென்பட்டது. என்று அந்த சோதனையின் பின்னால் மறைந்துள்ள வாய்ப்பினை நாம் அடையாளம் கண்டோமோ அதன் பின்பே அத் தொட்டியிலிருந்து நம்மால் வெளியேர முடிந்தது. ஒவ்வொரு சோதனையின் பின்னாலும் ஒரு வாய்ப்பு இருக்கின்றது. எனினும் நம்மில் பலரது கண்களுக்கு அந்த வாய்ப்பு தென்படுவதில்லை. என்வே அவர்களை அந்த சோதனைகளைக் கண்டு பயம் கொள்கின்றார்கள் பின் வாங்குகின்றார்கள். தங்களது முயற்சிகளை கை விடுகின்றார்கள். அதனால் என் நண்பனைப் போலவே பால் தொட்டியில் மூழ்கிய தவளையாக அவர்கள் வாழ்க்கையும் உறைந்து போகின்றது. நிச்சயம் என் வாழ்வில் அத்தவறை நான் என்றும் இழைக்க மாட்டேன் என எண்ணிக்கொண்டு அந்த இடத்திலிருந்து நகர ஆரம்பித்தது.



நன்றி


No comments:

Post a Comment