நீயொரு அறிவாளி என்பதற்கான ஐந்து அடையாளங்கள் - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil 


நீயொரு அறிவாளி என்பதற்கான ஐந்து அடையாளங்கள் - Positive Energy Story in Tamil


இவ்வுலகில் உள்ள முக்கால்வாசிக்கும் அதிகமானவர்கள் தங்களை அறிவாளிகள் என்றே எண்ணுகின்றார்கள். ஆனால் மிகுதி இருக்கும் கால் வாசிக்கும் குறைவானவர்களே உண்மையான அறிவாளிகளாக இருக்கிறார்கள். ஒரு மனிதன் உண்மையிலேயே அறிவாளி இல்லையா என்பதை அவனிடம் இருக்கும் சில பழக்கங்களை வைத்தே கணித்து விடலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அவ்வாறு அவர்கள் சுட்டிக் காட்டும் அறிவாளிகளின் ஐந்து முக்கிய அடையாளங்களையும் நாம் இனி காண இருக்கின்றோம்.


1. அவர்கள் அதிகம் கற்பனை வளம் கொண்டவர்கள் :


கிரியேட்டிவிட்டி என்பது அறிவாளிகளின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாகும். அவர்கள் எப்போதும் புதுமையாக சிந்திப்பார்கள். புதுமையான பல முயற்சிகளைச் செய்து பார்ப்பார்கள். அவர்களது செயல்களும் சிந்தனைகளும் என்றும் ஒரு எல்லைக்குள் கட்டுப்படாது. அவர்கள் எப்போதும் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்காமல் புதிய முயற்சிகளை செய்ய வேண்டும் அல்லது தனது முயற்சிகள் பல புதுமைகளைப் புகுத்த வேண்டும் என விரும்புவார்கள். அதற்கேற்றார்போல அவர்களிடம் அதீத கற்பனை வளம் இருக்கும். இப்படியானதொரு மனநிலை உங்களிடம் இருந்தால் நீங்கள் எப்போதும் புதிய விடயங்களை மேல் ஈர்ப்பு உள்ளவராகவும் பல காலமாக இவ்வுலகிலுள்ள வளமுடன் ஒத்துப்போகாத வராக இருந்தால் ஓர் அறிவாளி காண முதல் அடையாளம் உங்களிடம் உள்ளது என்று பொருள்.


2. அவர்களிடம் அதிக ஆர்வம் இருக்கும் :


நாம் முன்பு கூறியது போல அறிவாளிகள் புதியதை கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் எந்த விடயத்தையும் மேலோட்டமாக கற்றுக் கொள்ளாது. அதன் வேர் வரை சென்று அதை முழுமையாக கற்றுக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் எப்போதும் புதுமையை வரவேற்பார்கள். சவால்களை ஏற்றுக் கொள்வார்கள். பணம் சம்பாதிப்பது வேலை கிடைப்பது போன்ற எந்த பிற காரணங்களும் இன்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே பல புதிய விடயங்களை தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பார்கள். அதற்கான ஆர்வமும் தேடலும் அவர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும்.


3. அவர்கள் அடுத்தவர்களை புரிந்து கொள்வார்கள் :


இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட பார்வை உண்டு. நான் பார்க்கும் உலகை இன்னொருவர் பார்ப்பதில்லை. நான் இருக்கும் மனநிலையிலேயே அனைவரும் இருக்க மாட்டார்கள் என்பதை அறிவாளிகள் நன்கறிவார்கள். அதனால் அவர்கள் எப்போதும் அடுத்தவர்களை அவர்களது மன நிலையில் இருந்தே புரிந்து கொள்ள முனைவார்கள். அவர்களது எண்ணங்களுக்கு மரியாதை அளிப்பார்கள். கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இருப்பினும் அறிவாளிகள் அடுத்தவர்களின் சொல் கேட்டு நடப்பவர்கள் அல்ல. அவர்கள் அடுத்த அவர்களது உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பார்கள். அவர்களது பேச்சை காது கொடுத்து கேட்ப்பார்கள். ஆனால் அதில் எதை எடுத்துக் கொள்வது எதை புறக்கணிப்பது என்பதை அவர்கள் நன்கறிவார்கள். அறிவாளிகள் எப்போதும் தனது வாழ்க்கைக்கான முடிவை தானே எடுப்பார்கள். அதற்கான தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும்.


4. சுயகட்டுப்பாடு :


அறிவாளிகள் தன்னை கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். அவர்கள் தனக்குத் தேவையானது எது தேவையில்லாதது என்பதை தெளிவாகக் கண்டறிந்து. அத் தேவையில்லாததை இலகுவாக தவிர்த்து விடுவார்கள். அவர்கள் அதிகம் பொறுமை ஆனவர்கள். எத்தனை கடினமான சூழலிலும் தங்களது முயற்சிகள் கைகூடும் வரை பொறுமையாக இருப்பார்கள். தங்களது கனவுகள் நிறைவேறும் வரை காத்திருப்பார்கள். இப்படியானதொரு பொறுமையும் சுய கட்டுப்பாடும் காத்திருக்கும் மனநிலையும் உங்களிடம் இருந்தால் ஓர் அறிவாளி கான மிக முக்கிய அடையாளம் உங்களிடம் உள்ளது என்று பொருள்.


5. தான் ஒரு அறிவாளி என்ற எண்ணம் அவர்களிடம் இருக்காது :


ஒரு முட்டாள் தன்னை அறிவாளி என எண்ணுகின்றான். ஆனால் ஒரு அறிவாளி தான் ஒரு முட்டாள் என்பதை நன்கறிவார். ஓர் அறிவாளி தனது குறைகளை நன்கறிவார். இயலாமையை நன்கறிவான். தான் இன்னும் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நன்கறிவான். அதனால் அவன் தன்னிடம் இருக்கும் மறைவுக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அந்த இயல்பை அவனை மென்மேலும் அறிவாளியாக மாற்றுகின்றது. அவனது சிந்தனையை தெளிவாக்குகின்றது ஓர் அறிவாளி அனைவரிடமும் அறிவு இருக்கும் என்பதை நம்புவான். ஒரு முட்டாள் லோ தன்னிடம் மட்டுமே அறிவு இருக்கின்றது என்பதை நம்புவார்.


இதில் நீங்கள் எந்த ரகம் நண்பா அறிவு என்பது சிலருக்கு பிறப்பின் மூலம் கிடைக்கின்றது. சிலருக்கு முயற்சியின் மூலம் கிடைக்கின்றது. அது எப்படி கிடைத்தாலும் அது மகத்துவமானதே அந்த மகத்துவத்தை அடையும் வாய்ப்பை கடவுள் பலருக்கு வழங்குவதில்லை. இந்த ஐந்து இயல்புகளில் உங்களிடம் இருப்பதை மேலும் மெருகேற்றி இல்லாததை உருவாக்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்களும் மகத்துவத்தை அறிந்து கொள்வீர்கள்.



நன்றி


No comments:

Post a Comment