Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil 

என் வறுமையை போக்க ஒரு வேலையை தேடிக் கொள்வதிலேயே என் இளமைக் காலம் முழுவதையும் கழித்தேன். பல வருடங்கள் முயற்சித்தேன் 30க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு விண்ணப்பித்தேன் ஆனால் அவைகள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டன. வேறு வழியில்லை என்ற நிலையில் வெறும் பத்து டாலர்கள் மாத சம்பளத்திற்கு ஆங்கிலம் கற்பித்தேன். அன்று என்னை அனைவருமே ஒரு தோல்வியாக கண்டார்கள். எந்த வேலைக்கும் லாயக்கில்லாத ஒரு உதவாக்கரையாக கண்டார்கள். சில வருடங்கள் கழித்து இணையத்தை பயன்படுத்தி வணிகம் செய்யப் போகின்றேன் எனக் என் நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் அனைவருமே அதை விமர்சித்தார்கள். 


இது ஒரு முட்டாள்தனமான செயல் என கிண்டல் அடித்தார்கள். தேவையற்ற கனவுகளை விடுத்து இருப்பதை வைத்து வாழுமாறு அறிவுறுத்தினார்கள். அன்று என்னைச் சுற்றியிருந்த ஒருவர்கூட வாழ்வில் நான் வெற்றி பெறுவேன் என்பதை நம்பவில்லை. அவர்கள் என்னை ஒரு நிரந்தர தோல்வியாகவே கருதினார்கள். இருந்தும் நான் ஓய்ந்துவிடவில்லை எப்பாடுபட்டாவது என் வணிகத்தை ஆரம்பித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு  அலைந்தேன். ஆனால் அன்று என் கைகளில் ஒரு டாலர் கூட பணம் இருக்கவில்லை. வங்கிகளிடம் கடன் கேட்டு சென்றேன் மூன்று மாதங்கள் அலைக்கழித்த பின்னர் உனக்கு எந்த நம்பிக்கையில் கடன் தருவது எனக் கூறி என்னைத் துரத்தி விட்டார்கள். அதன் பின்னர் முதலீட்டாளர்களை அணுகினேன் குறைந்தது 40 முதலீட்டாளர்களை அணுகிஇருப்பேன் அவர்களிடமிருந்து எனக்கு கிடைத்த ஒரே பதில் முடியாது என்பது மட்டுமே. பல வருட போராட்டத்தின் பின் 1999இல் அலிபாபா நிறுவனத்தை ஆரம்பித்தேன். மீண்டும் அனைவரும் என்னை விமர்சிக்க ஆரம்பித்தார்கள். உன்னால் அலிபாபா வில் இருந்து ஒரு டாலர் கூட சம்பாதிக்க முடியாது. இது ஓர் வணிகமே இல்லை என கடுமையாக எச்சரித்தார். ஆனால் அவர்களின் விமர்சனங்களின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. 


நிச்சயம் ஒரு மிகப்பெரும் வெற்றி எனக்காக காத்திருக்கின்றது என்பதை நான் முழுமையாக நம்பினேன். அதை அடைந்து கொள்ள கடின உழைப்பு ஒன்றே வழி என்பதையும் நான் உணர்ந்து கொண்டேன். இரவு பகல் பாராது கடினமாக உழைத்தேன். முதல் மூன்று வருடங்கள் அலிபாபா வில் இருந்து நாங்கள் ஒரு டாலர் கூட சம்பாதிக்க வில்லை. இருந்தும் மனம் தளராது உழைத்துக் கொண்டே இருந்தோம் ஆனால் இன்று பல வருடங்கள் கடந்து எவராலும் வெல்ல முடியாத ஒரு சாம்ராஜ்யமாக அலிபாபா வளர்ந்து நிற்கின்றது. இன்று எங்களிடம் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொன்றிலிருந்தும் வருடத்திற்கு பல பில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டுகின்றோம். 


இன்று எங்களை அனைவருமே மேதைகள் என்கின்றார்கள். மிகச் சிறந்த தொழில் அதிபர்கள் என்கின்றார்கள். இப்படி ஒரு சாம்ராஜ்யத்தை எவ்வாறு உருவாக்கினீர்கள் என வியப்போடு கேட்கின்றார்கள். பில்கேட்ஸ், வாரன் பஃபெட் என இன்று உலகையே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கோடீஸ்வரர்கள் அனைவரும் இதுபோன்ற விமர்சனங்களை கேலி கிண்டல்களை எதிர் கொண்டவர்களே. ஆனால் அவர்கள் அந்த விமர்சனங்களுக்குள் மூழ்கிவிடாது. தங்களது எதிர்காலத்தை நோக்கி நகர்த்திக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் தங்களது குறைகள் குறித்தும் துரதிஷ்டம் குறித்தும் எண்ணி புலம்பி கொண்டிருக்கவில்லை.  பதிலாக தங்கள் முன்னே இருந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் முன்னேறி கொண்டே இருந்தார்கள்.


இன்று நான் உங்களிடம் கூறுவதும் அதைத்தான். உலகமே உங்களை முட்டாள் என கூறினாலும் துச்சமென எண்ணினாலும். உங்களை ஒரு நிரந்தர தோல்வி என கூறினாலும். அது குறித்து நீங்கள் ஒரு கணம்கூட வருந்தத் தேவையில்லை. அது எண்ணி புலம்பிக் கொண்டிருக்க தேவையில்லை. மாறாக இன்று உங்களிடம் இருக்கும் வளங்களை கொண்டு உங்களது வெற்றிப் பயணத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதை சிந்தியுங்கள். வெறுமனே திட்டம் விடுவதோடு நிறுத்தி விடாது. உங்கள் திட்டங்களை செயற்படுத்த ஆரம்பியுங்கள். என்றும் ஒன்றை மறந்துவிடாதீர்கள் வாழ்வில் வெற்றி அடைய வேண்டுமெனில் முயற்சி செய்ய வேண்டும். உங்கள் வெற்றியை நோக்கி நீங்கள் முன்னரே ஆரம்பித்தால் அவ் வெற்றியும் உங்களை நோக்கி நகர்ந்து வர ஆரம்பிக்கும். நிச்சயம் அம்முயற்சியில் சிறிது பெரிது என்ற பாகுபாடு கிடையாது. முயற்சித்தால் வெற்றி பெறுவீர்கள். முயற்சித்தால் மட்டுமே வெற்றி பெறுவீர்கள்.


நன்றி

No comments:

Post a Comment