பயம் உன்னை தடுக்கிறதா Motivational Story in Tamil
அது அப்பகுதியிலேயே பிரபல்யம் வாய்ந்தது ஒரு சர்க்கஸ் ஆகும் அங்கு தினமும் சிங்கம் புலி யானை குரங்குகள் என பலவகையான மிருகங்களை கொன்று சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெறும். அந்த சர்க்கஸில் ஒரு சிங்கமும் குரங்கு மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தன இவை இரண்டையும் குட்டிகளாக இருக்கும் போதே அவ்விடத்திற்கு கொண்டுவந்தார்கள். அன்றிலிருந்து அவை இரண்டும் எப்போதும் ஒன்றாக ஒரே கூட்டிலேயே வசித்து வந்தன வருடங்கள் பல கடந்தும் நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது தினமும் மாலை சர்க்கஸ் ஆரம்பிக்கும் போது அதில் இவை இரண்டும் பங்குகொண்டு பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் கைதட்டல்களை வாங்கும். சர்க்கஸ் முடிந்ததும் மீண்டும் தங்களது கூட்டின் உள்ளே அடைக்கப்பட்டுவிடும் தினமும் தரமிக்க சுவையான உணவுகளை உண்ணும் பகல் முழுவதும் நன்றாக உறங்கும் மாலை மீண்டும் சர்க்கசில் கலந்துகொள்ளும் அச்சிங்கமும் குரங்கும் அவ் வாழ்க்கைக்கு மிகவும் பழக்கப் பட்டிருந்தன. அதனால் அவை அதைத் தாண்டி வேறெதையும் சிந்திக்கவில்லை. இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன ஒரு மதிய வேளை வயிறார உண்டு விட்டு தங்களது கூட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது என் நண்பா உன் கண்களைத் திறந்து என்னைப் பார் என்ற சத்தம் கேட்டதே சத்தத்தை கேட்டு திடீரென கண்விழித்த குரங்கும் சிங்கமும் அது வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தன.
அப்போது இவர்களது கூட்டிட்டு வழியே ஒரு கழுகு நின்று கொண்டிருந்தது அதை கண்ட சிங்கமோ நீ யாரு நண்பனே எதற்காக எங்களை தூக்கத்திலிருந்து எழுப்பினாய் என வினவியது? அதற்கு அந்த கழுகு நண்பா சில நாட்களாக நான் உங்கள் கூட்டிற்கு அருகில் இருக்கும் மரத்தில் தான் வசித்து வருகின்றேன். இந்த மனிதர்கள் உங்களை அடைத்து வைத்திருப்பதையும் சர்க்கசில் அடிமை போல நடத்துவதை நான் தினமும் அவதானிக்கிறேன் நீங்கள் விரும்பினால் இந்த கஷ்டத்திலிருந்து நான் உங்களை விடுவித்து அருகில் இருக்கும் காட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். அது செழித்து வளர்ந்த ஒரு பெரும் காடாகும் நிச்சயம் அங்கு உங்களைக் கேள்வி கேட்க யாரும் இருக்கமாட்டார்கள் அங்கு நீங்கள் சுதந்திரமாக வாழலாம் என்றது அதைக்கேட்டு சிங்கமும் குரங்கும் குழப்பத்தில் விழி பிதுங்கி நின்றன. நாம் பல வருடங்களாக இவ்விடத்திலேயே வசித்து வருகின்றோம் இங்கு நேரத்திற்கு உணவு தருகின்றார்கள் நன்றாக பராமரிக்கிறார்கள் ஆனால் நம்மை கூண்டின் உள்ளே அடைத்து வைத்துள்ளார்கள் இங்கிருந்து வெளியேறிய காட்டில் நாம் சுதந்திரமாக வாழலாம் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய நேரத்தில் செல்லலாம். ஆனால் அக்காட்டில் நமக்கான உணவை நாம் தான் தேடிப் பெறவேண்டும் வேட்டையாட வேண்டும் போராட வேண்டும் நிச்சயம் இங்கிருக்கும் சொகுசு அங்கு இருக்காது. ஆனால் அங்கு சுதந்திரம் இருக்கும் எனில் இவ்விரண்டில் நாம் எதைத் தேர்ந்தெடுப்பது என அவை சிந்தித்த அப்போது அக்குரங்கு சிங்கத்தை நோக்கி நண்பா நாம் இங்கிருந்து தப்பித்து கழுகுடன் காட்டிற்குச் செல்லலாம். அவ்விடத்திலேயே நமக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருப்பதை நான் உணர்கின்றேன் என்பதே ஆனால் அச்சிங்கமும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அது தனது நண்பனை நோக்கி நண்பா இங்கு நமக்கு என்ன குறை இருக்கின்றதே பல வருடங்களாக நாம் கூண்டின் உள்ளே வசிக்கிறோம் நமக்கு வாய்க்கு ருசியாக உணவு தருகின்றார்கள் நம்மை நன்றாக பராமரிக்கிறார்கள் இந்த சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு அந்த அறிமுகமில்லாத காட்டிற்குச் சென்று கஷ்டப்பட நான் தயாராக இல்லை. அக்காட்டில் நமக்கு நல்லதொரு வாழ்க்கை அமையும் என்பதற்கு என்ன உத்தரவாதம் அங்கு சென்றவுடன் நம் வாழ்க்கை பெரும் போராட்டமாக மாறி நாம் உணவுக்கே திண்டாடும் நிலை உருவானால் என்ன செய்வது. அதனால் நான் இங்கிருந்து வருவதாக இல்லை நீ விரும்பினால் அக் கழுகு உடன் செல் எனக் கூறியது எவ்வளவு வற்புறுத்தியும் அதை அச்சிங்கம் கேட்பதாக இல்லை. எனவே தன் நண்பனை விட்டு பிரிய முடிவெடுத்து அக்குரங்கு அதே நாள் மாலை இவற்றை சரக்கு கொண்டு செல்லும் வழியில் யாருக்கும் தெரியாமல் அவ்விடத்தில் இருந்து தப்பித்து அக் கழுகின் உதவியோடு காட்டிற்குள் நுழைந்தது. தன் நண்பனின் பிரிவை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை இருந்தும் என்ன பயன் அவன் எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பான் என தனக்குத் தானே ஆறுதல் கூறிக்கொண்டு. அந்தக் கூண்டின் உள்ளேயே வாழ ஆரம்பித்தது வருடங்கள் பல கடந்த அந்த சிங்கத்தின் இளமையும் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது. உடலில் பலம் குன்றிப் போய் இதற்குமேல் சர்க்கசில் பங்கெடுக்க முடியாது என்ற நிலையும் தோன்றியது எனவே அச்சிங்கத்தை அவ்விடத்தில் வீணாக பராமரித்துக் கொண்டிருந்த அங்கு இருந்தவர்கள் விரும்பவில்லை. அவர்கள் அறிய காட்டினுள் பிடித்தார்களோ மீண்டும் காட்டினுள்ளே கொண்டுவந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த பலவீனமான தோற்றத்தோடு அக்காட்டில் நுழைந்தது அந்த சிங்கம் அந்த நொடியே அது தன் வாழ்வில் இழைத்த தவறை எண்ணிக் கொண்டது
தன் நண்பனை எண்ணிக்கொண்டது அந்தக் கழுகு தனக்களித்த வாய்ப்பின் பெறுமதியை உணர்ந்து கொண்டது அந்த அடர்ந்த காட்டில் ராஜாவாக வாழ்வதை விடுத்து இத்தனை காலம் ஓர் கூண்டினுள் அடிமையாக தன் இளமையை வீணடித்து விட்டோமே என எண்ணி நொந்து போனது இனியாவது தனக்கான ஒரு கூட்டத்தை தேடுவோம் தள்ளாடியபடியே நடந்தவாறு அங்கு சிங்கங்கள் வசிக்கும் இடத்தை வந்தடைந்தது ஆனால் அங்கு இருந்த சிங்கங்கள் இதை தங்களது கூட்டத்துடன் சேர்த்துக்கொள்ளவில்லை. அவை அச்சிங்கத்தை அடித்துத் துரத்தினான் உடலில் பலத்த காயங்களோடு மீண்டும் காட்டினுள் ஓடியது அந்த சிங்கம். ஓடி ஓடி களைத்து போய் காட்டின் நடுவே இருந்த ஒரு மரத்தடியில் விழுந்தது அவ்விடத்தில் அதற்கு நண்பர்கள் கிடையாது குடும்பம் கிடையாது எந்த உதவியும் கிடையாது. அன்று அதன் கண் முன்னே இருந்ததெல்லாம் வரும் ஏமாற்றங்கள் மட்டுமே அன்று என் நண்பன் என்னை எவ்வளவு வற்புறுத்தினான் எனக்கு ஒரு சுதந்திரமான வாழ்க்கையை காட்டினான் ஆனால் நானோ என்னுள் இருந்த தேவையற்ற பயத்தினாலும் சோம்பேறித்தனத்தை வாய்ப்பினை புறக்கணித்தேன். புதிய முயற்சிகளை செய்யாமல் நாம் இருக்கும் இடத்திலேயே இருந்து விடலாம் என முடிவெடுத்தேன். இன்று அந்த முடிவிற்கான பலனையே அனுபவித்து கொண்டிருக்கிறேன். என எண்ணியபடியே அந்த மரத்தினடியில் தன் மரணத்திற்காக காத்திருந்தது அச்சிங்கம்.
பயம் உன்னை தடுக்கிறதா Motivational Story in Tamil
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.