ஓநாயிடம் இருந்து கற்றுக் கொள் - Motivational Story in Tamil
|
Motivational Story in Tamil |
ஓநாயிடம் இருந்து நீ கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறிய Motivational Story in Tamil இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.
மேலும் படிக்க :
ஒரு சர்க்கசில் சிங்கம், புலி, யானை போன்ற பல்வேறு விலங்குகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் என்றாவது ஒரு ஓநாயை அங்கு நீங்கள் பார்த்ததுண்டா. ஓநாய்கள் பிற விலங்குகளைக் காட்டிலும் நுண்ணறிவு மிக்கவை தன் குடும்பத்தின் மீதும் கூட்டத்தின் மீது அதிக அன்பு கொண்டவை அவர்களுக்காக தொடர்ந்து போராடுபவை என்றும் ஓநாய்கள் திட்டமிட்டு செயலாற்றுகின்றன. அத்திட்டத்தை வெற்றி ஆக்குவதில் தங்களது முழு சக்தியையும் மிகத் துல்லியமாக பிறயோகின்றன பிற மிருகங்களைப் போல அவை தேவையற்று தங்களது இரையைத் துரத்தி ஓடுவதில்லை. அவை வேட்டைக்காக ஒரு கச்சிதமான திட்டத்தை தீட்டி அதை சிறிதளவும் பிசை இல்லாமல் நேர்த்தியாக செய்து முடிக்கின்றன. ஓநாய்கள் என்றும் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. அது கிடைக்கும் வரை காத்திருப்பதும் இல்லை. எப்போதும் அவை தங்களது உழைப்பின் மூலமும் ஒற்றுமையின் மூலமே தங்களது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. தினமும் கடுமையாக உழைக்கின்றனர் போராடுகின்றன தங்களது சிறுவயதிலிருந்தே போராட்டத்திற்காக தயாராகின்றன தொடர்ந்து பயிற்சி செய்கின்றனர். ஓநாய்கள் மிகப்பெரும் பொதுநல எண்ணம் கொண்டவை. அவை எப்போதும் தன் நலனை காட்டிலும் தனது குடும்பத்தின் நலனுக்கும் கூட்டத்தின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும். அவர்களுக்காக முன் நின்று போராடும். எத்தருணத்திலும் தன்னை நம்பியிருக்கும் பலவீனமானவர்கள் கைவிடாமல் பாதுகாக்கும். இவ் ஒற்றுமையின் விளைவாக அவை காட்டில் எவராலும் வீழ்த்திவிட முடியாத ஒரு சக்தியாக வளர்ந்து நிற்கின்றன. அவரிடம் இருக்கும் நுண்ணறிவாழும் கடுமையான போராட்ட குணத்தை நாளும் ஒரு ஓநாயை கொள்வது ஒரு புலிக்கு கூட சவாலான விடயமாகும். அதன் காரணமாக பிற மிருகங்கள் இவற்றின் அருகில் நெருங்குவதற்கு கூட அச்சம் கொள்கின்றனர். தொடர் பயிற்சியும் கடின உழைப்பும் திட்டமிடுதலும் அசைக்க முடியாத ஒற்றுமையே உருவத்தில் சிறியதாக இருக்கும் இந்த ஓநாய்களை கண்டு யானைகள், சிங்கங்கள், கரடி, புலி என அனைத்து விலங்குகளும் பயந்து ஒதுங்கும் அதற்கு காரணமாக உள்ளன. அதன் விளைவாகவே காட்டில் எந்த விலங்கிற்கும் கிட்டாத மகத்துவமும் நிம்மதியும் இந்த ஓநாய்களுக்கு கிட்டி இன்றுவரை அசைக்கவே முடியாத ஒரு சக்தியாக காட்டில் வலம் வருகின்றன.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.