How Coronavirus enters the body

coronavirus explain in tamil

coronavirus
coronavirus explain in tamil

மேலும் படிக்க :



Coronavirus பற்றி நமக்கு என்ன தெரியும்? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் தும்மல் அல்லது இருமல் மூலம் வெளியாகும் நீர்த்துளிகள் நாம் சுவாசிக்கும் போது மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று விட்டாலோ அல்லது அந்த நீர்த்துளிகள் இருக்கும் இடத்தை கவனிக்காமல் தொட்டு விட்டு கை நமது கண் மூக்கு அல்லது வாய் மீது வைத்தால் கொரோனா பரவும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் நிபுணர்கள் நாம் அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும் எனக் கூறுகிறார்கள். மேலும் ஒவ்வொருவரிடமிருந்தும் இரண்டு அடி தூரமாவது தள்ளி இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்கிறார்கள். ஆனால் இது எதுவுமே வேலைக்கு ஆகாமல் நமக்கு ஒரு   கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால். இந்த பதிவில் நான் உங்களுக்கு Covid 19 தொற்று ஏற்பட்டால் உடலில் Exactly என்ன நடக்கும் என்பதை விளக்கப் போகிறேன். இது நுரையீரலை பதம்பார்க்கும் வைரஸ் என்பதால் முதலில் தொண்டையை பாதிக்கும். இந்த வைரஸ் இனப் பெருக்கம் அடைய நம்முடைய உயிர் அணுக்களின் தொகுப்பு தேவை ஆகவே நமது தொண்டை, மூக்கு, ஆகியவற்றில் உள்ள சளிச் சவ்விலும் உள்ள உயிர் அணுக்களுடன் இணைகிறது. அங்கு சென்றதும் சவ்வின் மேற்பரப்பில் நீட்டிக்கொண்டிருக்கும் புரதங்களை பயன்படுத்தி உயிரணுக்களின் சவ்வுகுள் நுழைகிறது. ஒருமுறை உயிரணுக்கள் சென்ற பிறகு நிறைய வைரஸை உற்பத்தி செய்யுமாறு உயிர் அணுவுக்கு சொல்லும். கொஞ்ச நேரத்தில் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான வைரஸ்கள் பிறவி எடுக்கப்படும். அங்கு வைரஸ் தனது வேலை முடிந்தவுடன் அந்த உயிரணுவை அழித்து விட்டு வெளியேறி அருகில் உள்ள உயிரணுக்களை பாதிக்க துவங்கும். வைரஸ் இருப்பதை நமது உடல் உணர்ந்து விட்டால் அதன் பின்னர் எதிர்வினையாக அலர்ஜியை ஏற்படுத்தி அந்த வைரஸை எதிர்த்துப் போராட முயற்சி செய்யும். இதனால் தொண்டையில் வலி அல்லது அலர்ஜி போன்ற அசவுகரியத்தை உணர்வோம். அங்கிருந்து வைரஸ் மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குச் செல்லும் இதனால் மூச்சுக் குழாயில் உள்ள சளி சவ்வுகளின் அலர்ஜி ஏற்படத் துவங்கும் இதனால் இப்பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு நாம் இரும தொடங்குவோம். நாம் இரும ஆரம்பித்தவுடன் உடல் வைரஸை எதிர்த்தும் வேகமாகப் போராடும் துவங்குவதால் அலர்ஜி தீவிரமாகும். இதன் விளைவாக காய்ச்சல் ஏற்படத் துவங்கும். இந்தப் புள்ளியில்தான் நமது உடல் நலமாக இல்லை என்பதை நாம் உணர துவங்குவோம். பசி குறையும் இங்கே ஒரு விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உலக சுகாதார நிறுவனம் சொல்வதன் படி Corona வால் பாதிக்கப்பட்டவர்களில் 80% சதவீதம் பேருக்கு காய்ச்சல் இருமல் சில பேருக்கு நிமோனியா என விதமான அறிகுறிகள் மட்டுமே காணப்படுகிறது. 14 சதவீதம் பேருக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படுகிறது. 6 சதவீதம் பேருக்கு நுரையீரல் செயலிழப்பு மற்றும் மற்ற சில உறுப்புகள் செயலிழப்பு போன்றவை ஏற்படுகின்றன. Covid 19 வைரஸால் பாதிக்கப்பட்டு அவர்களில் பெரும்பாலானவர்கள் எந்தவித சிறப்பு சிகிச்சையும் தேவைப்படுவதில்லை. ஓய்வு எடுப்பது போதுமான அளவு நீர் பொருட்களை உட்கொள்வது பாரசிட்டமால் ஆகியவையே போதுமானது. ஆனால் மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலுக்குள் வைரஸ் செல்லும் போதுதான் நிலைமை மோசமாகும். ஏனெனில் அழற்சி ஏற்படும். இதைத்தான் உயிரணு நிமோனியா என அழைக்கிறோம். இங்கே பிரச்சனை வெறும் வைரஸ் பாதிப்பு மட்டுமல்ல நமது உடல் அது காட்டும் எதிர்வினை புரிந்து கொள்ள வேண்டும். நமது உயிரணுக்களை வைரஸ் கடுமையான பாதிப்பை தடுக்க நமது உடலை சற்று தீவிரமான ரசாயனங்களை உற்பத்தி செய்யும். ஒரு வேளை நிமோனியா எனில் நமது நுரையீரல் அமைப்பின் மிக முக்கியமான பகுதியான Aveoil உள்ள சிறிய காற்று பாதையில் நெரிசலை உண்டாகிறது. இந்த பகுதியை மிக முக்கியமானது ஏனெனில் இங்கே தான் வாயுப் பரிமாற்றம் நடக்கிறது. ஆக்ஸிஜன் நுரையீரலுக்குச் செல்லும் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்ற படுவதும் இங்கே தான் நடக்கிறது. ஒருவேளை Aveoil பகுதியில் வைரஸ் தொற்று சீல் உண்டாகி இறந்த உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமானால் இயக்கம் தடைபட்டு நமது நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் சரிவர கிடைக்காது. இதனால் நுரையீரல் செயல் இழப்பு ஏற்படும். இதன் விளைவாக இதயத்துக்கு ரத்தம் ஓட்டம் வாயிலாக ஆக்சிஜன் கிடைக்காமல் போய் அதன் செயல்பாடும் முடங்கிப் போகும். உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காத போது அந்த நோயாளி நிச்சயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு வென்டிலேட்டர் வைக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒரு நிபுணர் பிபிசியிடம் பேசிய போது நமது உடல் வைரசுக்கு எதிராக போரிட உண்டாகும் அளர்ச்சியை ஒரு போர் இடம் ஒப்பிடுகிறார். அதாவது இரு எதிரிகள் கடுமையாக சண்டையிட்டுக் கொள்வது போன்றதுதான் ஆனால் போரில் சில சமயங்களில் எதிரியின் மீது குண்டுகள் விழாமல் பொது மக்கள் மீதோ மருத்துவமனைகள் மீதோ கண்காட்சியகம் மீதோ கூட வில நேரிடலாம். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமாயின் வைரசுக்கு எதிராக நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் பதிலடி கடுமையாக இருக்கும். இதனால் வைரஸ் இருக்கும் பகுதிகளில் உள்ள திசுக்களையும் அது சேந்தமங்கலம். இதன் விளைவாக உடலின் மற்ற உறுப்புக்கள் உதாரணமாக சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் பாதிப்படைய நேரிடலாம். பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் மரணத்திற்கு வழிவகுக்கும் Coronavirus தொற்றை நேரடியாக வெல்வதற்கு நம்மிடம் எந்த ஆயுதங்களும் இதுவரை இல்லை. ஆனால் அரசும் மருத்துவர்களும் உலக சுகாதார நிறுவனமும் சொல்வதை கடைபிடித்தால் பாதிப்பை தவிர்க்கலாம் அல்லது பாதிப்புகளை குறைக்க முடியும் எனவே பயம் தேவையில்லை முன்னெச்சரிக்கையுடன் இருப்போம்.



முடிந்தவரை பகிரவும்



நன்றி

No comments:

Post a Comment