நுரையீரல் பலம் பெற 10 உணவுகள்
நுரையீரல் நம் உடலில் இருக்கும் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று நுரையீரல். நம் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கக்கூடிய ஆக்சிஜனை காற்றில் இருந்து பிரித்து எடுத்து உடலுக்கு கொடுக்கும் அற்புதமான பணியை செய்கிறது நுரையீரல். ஒரு நாளைக்கு சுமார் 22,000 முறை சுவாசிக்கும் நாம் 255 கனமீட்டர் காற்றினை சுவாசிக்கின்றோம். சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் காற்றில் இருக்கக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற தொற்றுக் கிருமிகள் நாளும் நுரையீரல் எளிதில் பாதிக்கப்படுகிறது. இது தவிர புகைப்பிடித்தல் மற்றும் உடலில் இருக்கக்கூடிய பலசிதே மாற்றத்தினால் உண்டாகக் கூடிய பல நோய்களினாலும் நுரையீரல் பாதிக்கப்படும். தற்போது சூழலில் வேகமாக பரவி வரும் வைரஸ் காட்டின் வழியாக நுரையீரலுக்குள் சென்று மிக எளிதில் பாதிப்பை உண்டாகின்றது. இது போன்ற வைரஸ் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நுரையீரலை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
இன்றைய இந்த தொகுப்பில் நுரையீரலின் ஆற்றலையும் பலத்தையும் அதிகரிக்கக்கூடிய 10 சிறந்த உணவு பொருட்கள் என்னென்ன அதைப்பற்றி காண்போம்.
1. மஞ்சள்
நுரையீரலைப் பலப்படுத்த கூடிய உணவுகளில் முதன்மையானது மஞ்சள். மஞ்சள் ஒரு சிறந்த ஆன்டி பயோடிக் ( antibiotic ) மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற அதன் வேதிப் பொருள் தான் அதன் மருத்துவ குணத்திற்கு காரணம் மஞ்சளில் இருக்கும் அதிகப்படியான ( anti oxygen ) மற்றும் அலச்சிதைபு பண்புகள் நுரையீரலில் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற பிற கிருமிகள் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதோடு காயங்களையும் ஆற்றும். அதுமட்டுமில்லாமல் நுரையீரல் சார்ந்த பாதிப்புகளான ஆஸ்துமா, COPD, Lungs injury போன்ற நுரையீரல் சார்ந்த நோய்கள் ஏற்படாமலும் தடுக்கக்கூடியது மஞ்சள்.
2. இஞ்சி
இஞ்சி ஒரு பவர்ஃபுல்லான ( anti oxygen ) நுரையீரலில் படிந்து இருக்கக்கூடிய சளியை கரைத்து வெளியேற்றம் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. இந்திர இருக்கக்கூடிய ஜிஞ்சர்ஆல் என்னும் சத்து நுரையீரலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றும் மற்றும் சுவாச பாதையை விரிவடையச் செய்து சுவாசத்தை சீராக்கும். காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு இஞ்சி கலந்து குடித்து வர நுரையீரல் சுத்தமாகும்.
3. பூண்டு
பூண்டில் ஏற்கக்கூடிய ( phytonutrients ) ஆன அல்லிசின் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பி இது நுரையீரலை பாதிக்கக்கூடிய வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அளிக்கக்கூடியது மற்றும் நுரையீரல் வீக்கத்தை குறைத்து சுவாசத்தை சீராக்கும். சமைக்கும் உணவுகளில் பூண்டு அதிகம் சேர்த்து சாப்பிட்டுவர நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
4. கிரீன் டீ
கிரீன் டீயில் இருக்கக்கூடிய அதிகபடியான ( Antioxidant ) மற்றும் பாலிதினால்கள் நுரையீரல் சார்ந்த புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கும் மற்றும் கிரீன் டீயில் இருக்கக்கூடிய தியோஃபிலிம் என்னும் வேதிப்பொருள் ( bronchodilator ) ஆகவும் செயல்படக்கூடியது. தினமும் ஒரு Cup கிரீன் டீ குடித்து வர சுவாசம் சீராகும் மற்றும் நுரையீரலின் ஆற்றலும் அதிகரிக்கும்.
5. கீரைகள்
கீரைகளில் இருக்கும் பைட்டோ கெமிக்கல்கள் நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது நுரையீரலில் ஆக்ஸிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றிற்கு எதிராக சிறப்பாக செயல்படக் கூடியது கீரைகள். நுரையீரல் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் உணவில் கீரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
6. ஒமேகா 3 ( Omega 3 )
ஒமேகா 3 ஃபேட்டி Acid உணவுகள் ஒமேகா 3 ஃபேட்டி Acid உடலில் அனைத்து உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது ஒமேகா 3 ஃபேட்டி Acid நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கவும் நுரையீரலில் ஏற்படக்கூடிய இன்ஃப்லேஷன் நெயும் குறைக்கும் ஒமேகா 3 உணவுகளான மீன், பாதாம் ஆளி விதைகள், போன்ற உணவுகளை அதிகம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
7. குருசிஃபெபிரஸ் காய்கறிகள்
குருசிஃபெபிரஸ் காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிபிளவர் காய்கறிகள் போன்றவற்றில் ( Antioxidant ) அடங்கியுள்ளது இது நுரையீரலில் இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்றி நுரையீரலை சுத்தம்ஆகும் மற்றும் இதில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் நைட் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் காரணிகளை அழிக்கும் மற்றும் நுரையீரலில் இருக்கக்கூடிய செல்களையும் சேதமடையாமல் பாதுகாக்கக் கூடியது இந்த குருசிஃபெபிரஸ் காய்கறிகள். இந்த வகை காய்கறிகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
8. ஆப்பிள்
ஆப்பிளில் சக்தி வாய்ந்த பைட்டோகெமிக்கல் சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளது. இது நுரையீரலைத் தாக்கக் கூடிய தொட்டு நோய்களையும் இன்ஃப்லேஷன் குறைத்து நுரையீரல் மண்டலம் சிறப்பாக செயல்பட உதவி செய்யும்.
9. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்கொடி போன்ற பழங்களில் Vitamin C நடுநிலை வைக்கிறது இது நுரையீரலில் ஆக்சிஜன் பரிமாற்றம் சீராக இருக்க உதவும் மற்றும் ஆஸ்துமா, நிமோனியா போன்ற நோய்கள் வராமலும் தடுக்கக்கூடியது இந்த சிட்ரஸ் பழங்கள்.
10. அவகாடோ
அவகாடோ பாத்தீங்கன்னா வைட்டமின் K, E ,B6 போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. நல்ல கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்ட அவகாடோ நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது சமீபத்திய ஆய்வில் தொடர்ந்து அவகாடோவை உணவில் சேர்த்து சாப்பிட்டுக் கொள்பவர்களுக்கு நுரையீரல் சார்ந்த பிரச்சனை தடுக்கப்படும் என ஆய்வில் வெளிவந்துள்ளது.
இது தவிர புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி, மற்றும் யோகா பயிற்சி செய்வதன் மூலமாக நுரையீரலை ஆரோக்கியமாகவும் பலமாகவும் வைத்திருக்க முடியும்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.