உன் தீய பழக்கங்களை அடியோடு விட்டொழிக்க 2 தந்திரங்கள்.
1. நல்லதோ கெட்டதோ ஒரு செயலை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது அது ஒரு பழக்கமாக மாறி உங்கள்மனதில் பதிந்து விடும் அவ்வாறு ஆழ்மனதை அடைந்ததும் அது உங்கள் மூளையின் கட்டுப்பாட்டையும் தாண்டி தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கும். இதனையே நாம் பழக்கம் என்கிறோம். உங்களிடம் உள்ள அனைத்து பழக்கங்களும் உங்களது ஆழ்மனதில் இருந்தே வெளிப்படுகின்றன.
அதன் காரணமாகவே ஒரு தீய பழக்கத்தை நீங்கள் விட்டுவிட வேண்டுமென எவ்வளவு தான் நீங்கள் விரும்பினாலும் அதற்கான நேரம் வரும் பொழுது அப்பழக்கம் உங்களது மூளையின் கட்டுப்பாட்டையும் உடைத்துக்கொண்டு வெளிப்பட்டுவிடும். நீங்கள் கைவிட நினைக்கும் ஒரு செயலை எப்போது செய்கின்றீர்கள். இத்தருணத்தில் அந்தச் செயலை அதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்றுகின்றது.
பொதுவாக அது ஒரு குறிப்பிட்ட நேரம் ஆகவோ சூழல் ஆகவோ அல்லது உங்கள் மூளையில் அதிக சோர்வு இருக்கும் போதோ நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போதோ தோன்றும். நிச்சயம் இந்த நேரத்தையோ சூழலையோ அல்லது சோர்வையோ ஒரு சாமானிய மனிதனால் தடுக்க முடியாது. இதன் காரணமாகவே இங்கு சுயகட்டுப்பாட்டுபாட்டிற்காக கூறப்படும் பல யுத்திகளை தினசரி வாழ்வில் அமல்படுத்துவது நமக்கு கடினமாகத் தோன்றுகின்றது.
எனில் நமது தீய பழக்கங்களை நம்மால் மாற்றவே முடியாதா நிச்சயம் முடியும் உங்களிடம் எவ்வளவு மோசமான தீய பழக்கம் இருந்தாலும் அதை ஒரே நாளில் உங்களால் கைவிட்டுவிட முடியும் அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை அப்பழக்கத்தை ஏன் விட வேண்டும் என்பதற்கு ஒர் மிக வலுவான காரணத்தை கண்டறிவது. அக்காரணம் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கின்றதோ அத்தனை எளிதாக உங்களால் அத் தீய பழக்கத்தை கைவிட முடியும்.
வாழ்வில் எவ்வித இலக்கும் இன்றி போதை பழக்கத்திற்கு அடிமையாகி ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்த எத்தனையோ மனிதர்கள் மனைவி குழந்தைகள் என தங்களுக்கு ஒரு குடும்பம் வரும்பொழுது தங்களது இயல்பை ஒரே நாளில் மாற்றிக்கொள்கிறார்கள். ஏனெனில் அப்போது போதை பழக்கத்தை விட தன் குழந்தையின் எதிர்காலமே அவர்களுக்கு முக்கியமாக தோன்றுகின்றது. அப் பழக்கத்தை கைவிட அவர்களிடம் குழந்தை என்னும் மிக மிக வலுவான காரணம் இருந்தது. அதனால் அதை அவர்கள் மிக எளிதாக கைவிட்டார்கள்.
அவ்வாறு நீங்களும் உங்களது தீய பழக்கங்களை எதற்காக அல்லது யாருக்காக விட வேண்டுமென என்பதற்காக ஒரு வலுவான காரணத்தை கண்டறிய வேண்டும்.
2. இரண்டாவது உங்களது சூழலை மாற்றுங்கள். பொதுவாக நாம் ஒரு தீய செயலை செய்கின்றோம் எனில் நமது சூழலின் தாக்கம் அங்கு மிக மிக அதிகமாக இருக்கும். இன்னும் கூறப்போனால்
ஒரு குறிப்பிட்ட சூழல் உருவாகும்போது பலருக்கு ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய வேண்டும் என்று எண்ணமே தோன்றுகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளருக்கு தன் வேலையின் போது அதிகம் இனிப்புகளை உண்ணும் பழக்கம் இருந்தது அதன் விளைவாக அதன் விளைவாக அவர் உடல் எடையும் தாறுமாறாக அதிகரித்தது கொண்டே சென்றது. இப்பழக்கத்தை கைவிடும் அவர் விரும்பினார். தான் எந்த நேரத்தில் அதிக இனிப்புகளை உட் கொள்கின்றேன் என்பதை அவர் அவதானிக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது தினமும் மதியம் மூன்று மணிக்கு அவர் மூளையில் ஒரு சோர்வு தோன்றுகின்றது. எனவே அதை போக்க அவர்தான் அலுவகத்தில் இருந்து கீழே இறங்கி அங்கிருக்கும் உணவகத்தில் இனிப்புகளை வாங்கி உண்டவாரே தனது நண்பர்களிடம் சில நிமிடம் அரட்டை அடிக்கின்றார்.
பின்னர் மீண்டும் வேலைக்கு திரும்புகிறார் அதில் அவர் அவதானித்த உண்மை யாதெனில் உணவகத்தில் நண்பர்களை சந்திக்கும் போது மட்டுமே இனிப்புகளை உண்ண வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தோன்றுகின்றது. எனவே அவர் அச் சூழலை மாற்றினார். தனது நண்பர்களை அவரது அலுவலகத்திற்கு உள்ளேயே சந்தித்தார். சில காலங்களிலேயே அவர் இனிப்புகளை உண்ணும் பழக்கம் அடியோடு அழிந்து போனது.
இன்று நீங்கள் ஒரு தீய செயலை கைவிட எண்ணினாள் நான் மேலே கூறிய இரண்டையும் தவறாது கடைபிடிக்க வேண்டும். முதலாவது அச்செயலை நீங்க ஏன் விட வேண்டும் என்பதற்கு மிக மிக வலுவான காரணம். இக்காரணம் எவ்வளவு தூரம் உறுதியாக இருக்கின்றதோ அவ்வளவு எளிதில் உங்களால் அந்தச் செயலை கைவிட்டுவிட முடியும்.
இரண்டாவது அச் செயலை செய்வதற்கு எவ்வாறான சூழல் உங்களை தூண்டுகின்றது என்பதை கண்டறிந்து. அச்சு சூழலுக்குள் நுழையாதபடி உங்களது தினசரி வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இவ்விரண்டு யுக்திகளையும் நீங்கள் சரியாக பின்பற்றினால் மிகக் குறைந்த காலத்திலேயே எத்தனை பெரிய பழக்கத்தையும் உங்களால் மாற்றிவிட முடியும்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.