உன் நேரத்தை அதிகம் வீணடிக்கிறாயா உனக்கான ஓர் குட்டி கதை Motivational Story in Tamil

உன் நேரத்தை அதிகம் வீணடிக்கிறாயா உனக்கான ஓர் குட்டி கதை Motivational Story in Tamil


அது ஒரு ஆற்றங்கரையோரம் இருக்கும் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமம் ஆகும். அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் வாழ்வில் எக்குறையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள் இப்படியே காலம் கடக்க ஒரு நாள் அப்பகுதியில் மழைக்காலமும் ஆரம்பமானது. அம்முறை பழமைக்கு மாறாக அங்கு கனமழை விடாது பெய்து கொண்டே இருந்தது. நாட்கள் பல கடந்தும் அம்மழை ஓய்ந்தபாடில்லை அதனால் அந்த ஊரில் ஓடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக அவ்வூரில் உள்ளே நுழைய ஆரம்பித்தது. 

அதனால் அங்கு வசித்து இருந்த மக்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். அக்கிராமத்தில் ஒரு மதகுரு வாழ்ந்து வந்தார் உலக இன்பங்களை துறந்து தினமும் கடவுளை வணங்கி அவர் தனது வாழ்வை முழுமையாக அவர் கடவுளுக்கு அர்ப்பணித்தார். அப்பொழுது அந்த மத குருவிடம் ஒரு இளைஞன் ஓடி வந்து ஐயா ஆற்றுநீர் நம் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டது நேரம் செல்ல செல்ல அந்த ஆற்று நீர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.


இச்சூழல் தொடருமானால் நாளை காலை விடிவதற்குள் நம் கிராமம் முழுவதும் ஆற்றுநீரில் மூழ்கிவிடும். அதனால் நாங்கள் அனைவரும் இங்கு இருந்து ஒரு பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்கின்றோம் நீங்களும் எங்களுடன் வரவேண்டும் என்றான்.

அதற்கு அந்த மதகுரு ஏ இளைஞனே நான் உன்னைப் போல் கடவுள் நம்பிக்கை அற்றவன் அல்ல. நான் தினமும் கடவுளை வணங்குகின்றேன் என் வாழ்க்கையே அவருக்காக அர்ப்பணித்து உள்ளேன். நிச்சயம் நான் வணங்கும் கடவுள் என்னைக் காப்பாற்றுவார். நீ இங்கிருந்து வெளியேறு ஆனால் எங்கும் வருவதாக இல்லை என்றார். அந்த இளைஞனும் அங்கிருந்து வெளியேறி ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றான். தண்ணீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றது அந்த மதகுருவும் தன் வீட்டில் இருந்த உயரமான மேஜை மீது ஏறி அமர்ந்து கொண்டார். 

அப்போது ஒரு படகோட்டி வேகவேகமாக படகை செலுத்தியபடி அவர் வீட்டை நோக்கி வந்து ஐயா நீங்கள் உங்கள் வீட்டிற்கு உள்ளேயே மாட்டிக் கொண்டதாக ஊர் மக்கள் கூறினார்கள். அதன் காரணமாகவே நான் உங்களை மீட்க வேகவேகமாக இங்கு வந்தேன் தயவு செய்து எனது படகில் ஏறிக் கொள்ளுங்கள் நான் உங்களை ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கின்றேன் என்றான்.
 

அதற்கு அந்த மதகுரு முன்பு கூறிய அதே காரணத்தை கூறி அந்தப் படகில் ஏற மறுத்து இங்கிருந்து நீ செல் கடவுள் என்னைக் காப்பாற்றுவார் அப் படகோட்டி இடம் கூறினார். அப் படகோட்டியும் வேறு வழியில்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றான். இருந்தும் தண்ணீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது அதனால் அந்த மத குருவும் தன் வீட்டில் இருந்த கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டார். பொழுதும் விடிந்தது தண்ணீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் அவ்வீட்டின் கூரைக்கே வந்தது. மதகுருவும் தன்னைக் காப்பாற்றுமாறு கடவுளுடன் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தார்.


மிக விரைவாக ஒரு ஹெலிகாப்டர் அவ்விடத்திற்கு வந்தது அதிலிருந்த மீட்பு படையினர் ஒரு ஏணியை கீழே இறக்கி அதில் ஏறி வருமாறு அந்த மதகுருவை வேண்டினார்கள். அதற்கு அந்த மதகுரு கடவுள் என்னைக் காப்பாற்றுவார் அதில் எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு எனக்கு வேறு எவரது உதவியும் தேவை இல்லை நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள் எனக்கூறி அவை ஏணியில் ஏற மறுத்து விட்டார். மீட்பு படம் எனது கெஞ்சி கேட்டும் அவர் மனம் மாறவில்லை.

எனவே அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு அடுத்தவர்களுக்கு உதவி செய்ய சென்றார்கள். அடுத்த சில மணி நேரங்களிலேயே தண்ணீர் மட்டம் பல அடிகள் ஆக உயர்ந்து ஆம் முழு ஊரைமே மூழ்கடித்தது அடித்தது. அப்பொழுது அந்த தண்ணீரில் மூழ்கி தத்தளித்து படியே கடவுளை திட்ட ஆரம்பித்தார் அந்த மதகுரு கடவுளே என் வாழ்நாள் முழுவதையும் உன்னை வணங்குவதில்யே கழித்தேன் உன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தேன். ஆனால் எனக்கு ஒரு கஷ்டம் வரும்போது நீ என்னை காக்க வரவில்லையே எனக்கு உதவ வில்லையே என புலம்ப ஆரம்பித்தார்.

அப்போது திடீரென ஒரு குரல் கேட்டது ஓ முட்டாள் மனிதனே நான் முதலில் உன்னை காப்பாற்ற ஒரு இளைஞனை அனுப்பினேன் நீ அவனை துரத்தி விட்டாய் இரண்டாவதாக ஒரு படகோட்டியின் அனுப்பினேன் நீ அவனது படகில் ஏற மறுத்து விட்டாய் மூன்றாவதாக ஒரு மீட்பு படையை அனுப்பினேன் ஆனால் அவர்களுடனே செல்வதற்கு மறுத்து விட்டாய். 

உனக்கு ஒரு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள பல வாய்ப்புகளை வழங்கினேன். ஆனால் அவை எதையுமே நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என கூறிவிட்டு வேறு எவ்வித முயற்சி இன்றி உன் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாய் நான் உனக்கு அளித்த பொன்னான நேரத்தை வீன் அடித்தாய்.

இன்று ஒன்றை உணர்ந்து கொள் மனிதா உன் வாழ்க்கையில் மாற்றம் நிகழும் என்பதை வெறுமையான நம்புவதால் உன் வாழ்க்கை மாறப்போவதில்லை. அது மாற வேண்டுமெனில் மாற்றத்திற்காக நீ உழைக்க வேண்டும் கஷ்டப்பட வேண்டும் உன்னால் முடிந்தால் முயற்சிகள் அனைத்தையும் செய்ய வேண்டும்.
அனைத்திலும் மேலாக தேவையற்ற நேரத்தை வீணடிக்காமல் உன் முன்னே இருக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். 

ஆனால் நீயோ என் மீது உள்ள குருட்டு நம்பிக்கையை வைத்து கொண்டு உன் கையிலுள்ள பொன்னான நேரத்தை வீண் அடித்தாய் வாய்ப்புகளை புறக்கணித்தாய் அதன் விலை வினையை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறாய் இதற்கு நான் என்று பொறுப்பாக மாட்டேன் என்று அந்தக் குரல் மறைந்தது



Infinizy Smart Watch 1.3'' Full Touch Men Women Fitness Tracker Blood Pressure Heart Rate Monitor Lite Waterproof Exercise Smartwatch for All Boys & Girls (Black)









Time is Gold

முடிந்தவரை பகிரவும்

நன்றி

No comments:

Post a Comment