உன்னைச் செல்வந்தனாக்கும் 4 தந்திரங்கள் - positive energy story in tamil
|
positive energy story in tamil |
Warren Buffet இன்று பங்குச்சந்தையின் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்பவர். வெறும் ஆயிரம் டாலர்கள் இல் ஆரம்பித்த இவரது முதலீட்டு பயணம் இன்று பல பில்லியன் டாலர்களையும் தாண்டி வளர்ந்து நிற்கின்றது. இங்கு தானே முன்நின்று கஷ்டப்பட்டு பணம் சம்பாதிப்பவர்கள் ஒரு ரகம் தனது சாதுரியத்தை கொண்டு அடுத்தவரது உழைப்பில் முதலீடு செய்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் இரண்டாவது ரகம். Buffet இந்த இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர். அவர் வெறுமனே முதலீடுகளை கொண்டே இத்தனை கோடிகளை சம்பாதித்தவர். அவ்வாறு இன்று உங்களிடம் இருக்கும் ஒரு சிறு தொகைப் பணத்தையும் சாதுரியமாக பெருக்கிக் கொள்ள Buffet கூறும் நான்கு முக்கிய யுத்திகளை நாம் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்.
1. முதலாவது சேமிக்காதே முதலீடு செய் :
இங்கு பலர் பணத்தை சேமித்து வைக்கவே விரும்புகிறார்கள். ஆனால் அவ்வாறு பணத்தை சேமிப்பதால் காலப்போக்கில் அதன் பெறுமதி குறைந்து கொண்டுதான் செல்லுமே தவிர அது என்றும் அதிகரிக்கப் போவதில்லை. நீங்கள் உங்களிடம் உள்ள பலத்தை பெருக்கிக் கொள்ள விரும்பினால் அதை ஆக்க பூர்வமான முதல் களில் முதலீடு செய்ய வேண்டும். அது ஒரு வணிகமாக இருந்தாலும் சரி நிலையான சொத்துக்கள் ஆக இருந்தாலும் சரி அல்லது பங்குகள் போன்ற எதுவாக இருந்தாலும் சரி. ஒரு சில வருடங்களில் முதலீட்டின் பெறுமதி அதிகரித்து அதில் நீங்கள் முதலீடு செய்த பணமும் வளர்ந்து கொண்டே செல்ல வேண்டும்.
2. இரண்டாவது உங்களது எல்லைக்குள்ளேயே நின்று கொள்ளுங்கள் :
பணம் சம்பாதிக்க இவ்வுலகில் உள்ள அனைத்தும் உங்களுக்கு திறமை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் நீங்கள் ஒரு பணக்காரர் ஆக விரும்பினால் உங்களுக்கு துறைகளில் திறமை இருக்கின்றது எதில் திறமை இல்லை என்பதை தெளிவாக அடையாளம் கண்டு அந்த எல்லைக்கு உட்பட்டே உங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்தவன் கூறுகின்றான் என்பதற்காக உங்களுக்கு திறமை இல்லாத துறைகளில் பணத்தையும் நேரத்தையும் முதலீடு செய்வீர்கள் ஆக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு நஷ்டத்தையே அளிக்கும். அப்படியானதொரு துறையில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் முதலில் முழுமையான அனுபவத்தை பெற்ற பின்னர் அதில் முதலீடு செய்யுங்கள்.
3. மூன்றாவது வாய்ப்புக்களை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் :
வாழ்வில் உங்களை செல்வந்தன் ஆகும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காது. அவ்வாறானதொரு வாய்ப்பு உங்கள் முன்னே தோன்றினால் அதை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்றும் சோம்பேறித்தனம் கொண்டு ஒரு மிகச் சிறந்த வாய்ப்பை சிறிய அளவில் பயன்படுத்தி வீணடிக்காதீர்கள் அனைத்திலும் முக்கியமாக ஒரு காரியத்தில் உங்களது பணத்தையும் நேரத்தையும் முதலீடு செய்வதற்கு முன்பாக அது சரியானதொரு முதலீடு தானா என்பதை ஒன்றுக்கு பல முறை சிந்தித்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு தவறான முதலீட்டில் சிக்கிக்கொண்டால் அக்கணமே உங்கள் பலத்திலிருந்து ஒரு பகுதி காணாமல் போகின்றது. உங்களது வாழ்வில் தவறான முதலீடுகளை தொடரும் ஆனால் மிக விரைவிலேயே உங்கள் கையில் இருக்கும் பணத்தையும் இழந்து வங்குரோத்து நிலையை அடைந்து விடுவீர்கள்.
4. நான்காவது உங்களில் முதலீடு செய்யுங்கள் :
வாழ்வில் நீங்கள் நஷ்டமே அடையாத முதலீடு எது தெரியுமா. அது உங்கள் மீது நீங்கள் மேற்கொள்ளும் முதலீடாகும் இன்று நீங்கள் ஒரு ஆளுமையை வளர்த்துக்கொண்ட அல்லது ஒரு புதிய திறமையை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் இதன் பின்னரே உங்களிடம் இருந்து எவராலும் பிடுங்கிக் கொள்ள முடியாது. எனவே முடிந்தவரை உங்கள் வாழ்க்கைக்கும் வணிகத்திற்கும் தேவையான புதிய விடயங்களை கற்றுக் கொள்வதிலும் அனுபவங்களை சேகரிப்பதிலும் நல்ல பழக்கங்களை பழகுவதிலும் உங்களது நேரத்தை செலவு செய்யுங்கள். ஏனெனில் உங்களது தனிப்பட்ட அறிவும் திறமையும் வாழ்வில் உங்களால் எவ்வளவு தூரம் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை தீர்மானிக்கின்றன அவற்றை முடிந்தவரை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின் நீங்கள் எண்ணிய அனைத்தையுமே அடைந்து கொள்வீர்கள்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.