சிங்கத்திடம் கற்றுக்கொள் - positive energy story in tamil

சிங்கத்திடம் கற்றுக்கொள் - positive energy story in tamil

positive energy story in tamil
positive energy story in tamil

சிங்கங்களே விலங்குகளில் அதிக பலம் கொண்டவை அல்ல. வேகமாக ஓடக் கூடியவை அல்ல. நிச்சயம் அவற்றிற்கு எந்த தனித்துவ திறமைகளும் இல்லை. இருந்தும் சிங்கங்களே காட்டின் அரசனாக கருதப்படுகின்றான. ஏனெனில் அவை எப்போதும் ஒரு அரசனை போலவே சிந்திக்கின்றன. ஓர் அரசனை போலவே செயல்படுகின்றனர். எப்படிபட்டது நெருக்கடியான சூழ்நிலையிலும் சிங்கங்கள் சரண் அடைவதே இல்லை. அவை தங்களது போராட்டத்தை விட்டு பின்வாங்குவதில்லை. ஒரு கழுதைப் புலி கூட்டமே தன்னைச் சுற்றி வாளைத்தாலும் கொடூரமாக தாக்கினாலும் அதன் எண்ணிக்கையை கண்டு சிங்கங்கள் தளர்வதில்லை. அவை தனித்து நின்று போராடுகின்ற. தனது இறுதி மூச்சு வரை போராடிக் கொண்டே இருக்கின்றன. நண்பா உன் வாழ்வில் பல சோதனைகளை உன்னை சூழ்ந்து கொள்ளலாம். இடைவிடாது நெருக்கடி தரலாம். அப்போது இந்த சிங்கம் போல நிமிர்ந்து நிற்க வேண்டும். உன் இறுதி மூச்சு வரை மனம் தளராது போராடுவோம். ஏனெனில் நீ உன் முயற்சியைக் கைவிடாத நொடி வரைக்கும் வெற்றிக்கான ஓர் வாய்ப்பு உன் முன்னே இருந்து கொண்டே இருக்கும். சிங்கங்கள் எப்போதும் உறுதியின் அடையாளமாகத் திகழ்கின்றன. அவை ஒரு காரியத்தை ஆரம்பித்து விட்டால் அதில் முழு நம்பிக்கையோடு குதிக்கும். தன்னை விட உருவத்தில் பெரிய விலங்குகளை கூட உறுதியோடு வேட்டையாடும். அவை என்றும் தன் மீது தன் பலத்தின் மீது நம்பிக்கை அவ கொள்வதில்லை. எத்தனை பெரிய போராட்டமாக இருந்தாலும் தன் உறுதியை இறப்பதில்லை. நண்பா சிங்கத்தின் உறுதியுடன் நீ வாழவேண்டும். உனது உள்ளுணர்வுகளை நம்ப வேண்டும். இங்கு உனக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை உறுதியோடு தீர்மானிக்கவேண்டும். அந்த முடிவுகளின் படி செயல்பட வேண்டும். நிச்சயம் சுதந்திரமே அனைத்திலும் மேலான பொக்கிஷம் ஆகும். சிங்கங்கள் எப்போதும் சுதந்திரமாக வாழும் அந்த சுதந்திரத்தை அவற்றிற்கு யாரும் வழங்குவதில்லை. அதை அந்த சிங்கங்களே எடுத்துக் கொள்கின்றன. தன் சுதந்திரத்திற்கு எதிராக இருக்கும் அனைத்தையும் அவை போராடி வீழ்த்துகின்றன. உன் விருப்பங்களை வெளிப்படையாக கூறும் சுதந்திரம் உன்னிடம் இருக்க வேண்டும். நீ வாழ விரும்பும் வாழ்க்கையை வாழும் சுதந்திரம் இருக்க வேண்டும். நிச்சயம் சுதந்திரத்தினாள் மட்டுமே உன்னை தனித்துவமானவன் ஆக்க முடியும். உனது ஆற்றலை முழுமையாக வெளிக் கொண்டுவர முடியும். நண்பா காட்டில் வாழும் அச்சிங்கங்களை பார் அவை அனைத்தையும் மனிதருக்கு பல பாடங்களை கற்றுத் தருகின்றன.

முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment