இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - Tender Coconut Water In Tamil
|
Tender Coconut Water In Tamil |
மேலும் படிக்க :
வணக்கம் மக்களே கோடை காலம் ஆரம்பித்து விட்டாலே இயற்கையாகவே உடல் உஷ்ணம் அதிகரிக்கும். இதனை தணிப்பதற்கும் தாகத்தை போக்குவதற்கும் மக்கள் குளிர்பானங்களையும் பழச்சாறுகளை அதிகம் பருக ஆரம்பிப்பாங்க. அப்படி பார்க்கக்கூடிய பானங்கள் உடலுக்கு உகந்ததாகவும் எந்த விதத்திலும் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத ஒன்றாகவும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அந்த வகையில் எந்த ஒரு செயற்கை கலப்படமும் இல்லாத இயற்கையான பானம் இளநீர். 100% சுத்தமானதும் உடலுக்கு எந்த விதத்திலும் தீங்கு ஏற்படுத்தாத ஒரு தூய்மையான பானம் Coconut Water. 3 வயது குழந்தை முதல் யார் வேண்டு மானாலும் இளநீரைத் தாராளமாகக் குடிக்கலாம். இளநீரில் பார்த்தீங்கன்னா அதிக அளவிலான நீர்ச்சத்து மட்டுமில்லாம கனிமச்சத்துக்கள் தாதுச்சத்துக்கள் மற்றும் விட்டமின் சத்துக்களான வைட்டமின் A,B,C சோடியம், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் என ஏராளமான நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கிய ஒரு அற்புதமான பானம் இளநீர். இன்னைக்கி இந்த பதிவில் இவ்வளவு சத்துக்கள் அடங்கிய இந்த இளநீரை குடிக்கும் போது நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன அதிலும் குறிப்பாக கோடைக்காலத்தில் இளநீரை ஏன் அவசியம் அனைவரும் சாப்பிட வேண்டும். அதற்கான விடை இந்த இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1. உடலில் நீர்ச்சத்து இழப்பை வந்து தடுக்கும் :
பொதுவாக வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே உடல் வறட்சி காரணமாக நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக பாத்தீங்கன்னா அதிக தாகம் களைப்பு சோர்வு போன்ற பிரச்சனைகள் வந்து உண்டாக்கும். இன்னும் ஒரு சில பேர் பார்த்தீங்கன்னா உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் போட்டு விழுந்து விடுவது வந்து பார்க்க முடியும். இது போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க மிகவும் உதவக் கூடிய ஒரு பானம் இந்த இளநீர். இளநீர் உடல் Dehydration ஆகாமல் தடுப்பது மட்டுமல்லாமல் உடலுக்கு நல்ல எனர்ஜி புத்துணர்ச்சி வந்து கொடுக்கும். இதன் காரணமாகத்தான் இளநீரை வந்து Oral Dehydration Drink என்று அழைக்கிறார்கள்.
2. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் :
100ml இளநீரில் பாத்தீங்கன்னா 250 மில்லிகிராம் பொட்டாசியமும் 105 மில்லி கிராம் சோடியமும் இருக்கு. இது இருதய துடிப்பை சீராக்குவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வந்து உதவி செய்யும். அது மட்டுமில்லாமல் உடல் முழுவதுமே வந்து ரத்த ஓட்டமும் சீராக இருக்க வந்து உதவி செய்யக்கூடிய ஒரு பானம் இந்த இளநீர். மேலும் கார்டிசால் சொல்லக்கூடிய Stress கார்மோனை கட்டுபடுத்தும் என்பதனால் மனம் சார்ந்த பிரச்சினை வந்து வராமல் தடுக்கும். அதிக ரத்த அழுத்தம் எப்போதும் எரிச்சல் கவலை போன்ற மனம் சார்ந்த பிரச்சினை இருக்கிறவங்க இளநீர் குடித்து வர இது வயிற்றையும் மனதையும் குளுமையாக வைத்திருக்க வந்து உதவி செய்யும்.
3. சிறுநீரக கற்கள் வந்து வராமல் தடுக்கும் :
சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதற்கு காரணமாக இருக்கக்கூடிய குளோரின் போன்ற உப்புகளை வெளியேற்றும் ஆற்றல் இந்த இளநீருக்கு உண்டு மற்றும் சிறுநீரை நன்கு பெருக்கி அதிக அளவில் வந்து வெளியேற உதவி செய்யும். இதன் மூலமாக சிறுநீரக கற்கள் வந்து வருவது தடுக்கப்படும். அது மட்டுமல்ல உடல் உஷ்ணம் காரணமாக உண்டாகக் கூடிய சிறுநீர் எரிச்சல், கடுப்பு, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் போன்ற சிறுநீரகங்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
4. வயிற்று வலியை குணமாக்கும் :
வெயிலினால் உண்டாகக்கூடிய உஷ்ணம் அதிகரிக்க அதிகரிக்க உடல் சூடு இயற்கையாகவே வந்து அதிகரிக்க ஆரம்பிக்கும். இதன் விளைவாக வயிற்று வலியால் பலரும் அவதிப்படுவார்கள். அதுமட்டுமில்லாம நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம் ,செரிமானம் ஆவதில் தாமதம், மலச்சிக்கல் என செரிமானம் தொடர்பான பல்வேறு பிரச்சினை இருந்து அவதிப்படுவார்கள். அப்படிப்பட்டவங்க தினமும் இளநீரை பருகுவது மட்டுமில்லாம இளநீரில் இருக்கக்கூடிய இளம் தேங்காய் வழுக்கையும் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் வயிற்றில் வந்து இன்பர்மேஷன் உண்டானது என்று தடுத்து வயிறு சார்ந்த பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
Coconut Water ல் பார்த்தீங்கன்னா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான ரிபோஃப்ளோவின், நியாசின், தயாமின் மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கு. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவி செய்யும் மற்றும் இளநீரில் பாத்தீங்கன்னா ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் வந்து மிகவும் அதிகம். இதன் மூலமாக பல்வேறு வைரஸ் தொட்டிலில் இருந்து நம்மைப் பாதிக்கக்கூடிய ஆற்றல் இளநீருக்கு உண்டு. வைரஸ் தொற்றுகள் அதிகம் பரவக்கூடிய இந்தக் காலத்தில்கூட தினமும் ஒரு இளநீர் பருகுவது மிகவும் ஆரோக்கியமான ஒன்று.
6. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது :
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் ஏற்படக்கூடிய பசியின்மை, குமட்டல், தொடர் வாந்தி, என கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும் ஆற்றல் இளநீருக்கு உண்டு. அது மட்டுமில்லாம உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன் களைப்பைப் போக்கி புத்துணர்ச்சியாக இருக்கும் உதவி செய்யும். கர்பிணி பெண்கள் இளநீர் குடித்து வர அவர்களுக்கு மட்டுமல்ல வயிற்றில் வளர கூடிய குழந்தைக்கு வந்து மிகவும் நல்லது. இதன் காரணமாகதான் டாக்டர் வந்து தினமும் ஒரு இளநீர் வந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியம் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள்.
7. சருமம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுக்கும் :
சருமம் சார்ந்த பிரச்சினைகளான சரும வறட்சி, எரிச்சல், காந்தல், புண்கள், கருவளையம், என கோடை காலங்களில் மக்கள் வந்து அதிகம் வந்து அவதிப்படுவார்கள். இதுபோன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கணும் அப்படின்னா தினமும் வந்து இளநீர் வந்து குடிக்கணும். இளநீரில் பார்த்தீங்கனா சரும ஆரோக்கியத்துக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், மற்றும் ஆன்டி ஏஜிங் பண்புகள் வந்து அதிகளவு இருக்கு. இது கோடை காலங்களில் ஏற்படக்கூடிய சருமம் சார்ந்த பாதிப்புகள் வராமல் தடுக்கிறது வந்து உதவி செய்யும்.
8. எலும்புகள் மற்றும் பற்களை வந்து பலமாக்கும் :
இளநீரில் பார்த்தீர்களா எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துகள் நல்ல அளவில் இருக்கு. இளநீரில் இருக்கக்கூடிய மெக்னீசிய சத்து எலும்புகளை வந்து கால்சியம் போய் சேர்வதற்கு வந்து உதவியாக இருக்கும். இதன் மூலமா பார்த்து இதனால் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக் கூடிய ஒரு பானம் இளநீர்.
9. புற்றுநோய் வராமல் தடுக்கும் :
ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் நிறைந்த ஒரு பானம் இளநீர். இது உடலில் ஆக்சிடென்ட் ஸ்ட்ரெஸ் அளவை குறைத்து புற்றுநோய்க்கு காரணமாக இருக்கக்கூடிய பிரீ ரடிகல்ஸ் செல்கள் உடலில் உருவாக உள்ள வந்து தடுக்கும். இதன் மூலமாக புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். குறிப்பாக குடற்புற்று ஏற்படாமல் பாதுகாக்கும் ஆற்றல் இளநீருக்கு உண்டு. என விலங்குகள் மீது உண்டு மேற்கொண்ட ஆய்வில் நிரூபித்து இருக்காங்க.
10. தசை பிடிப்பு குணமாகும் :
பொதுவாக உடலின் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்படும் போது தசைப்பிடிப்பு வந்து உருவாக்கும். Coconut Water தசைப்பிடிப்பு காரணமாக இருக்கக்கூடிய சத்துக் குறைபாட்டைப் போக்கி தசைப்பிடிப்பை குணமாக்குவதோடு மீண்டும் மீண்டும் ஏற்படாமல் தடுக்கும். உடல் பலவீனம் தசை பிடிப்பு போன்ற பிரச்சினை இருக்கிறார்களோ அந்த இளநீரை குடிச்சிட்டு வரலாம் மிகவும் நல்லது.
என நண்பர்களே இளநீர் இவ்வளவு நன்மைகளை தருவது மட்டுமில்லாமல் கோடைக் காலங்களிலேயே ஏற்படக்கூடிய பல்வேறு பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதிக்கக்கூடிய அந்த இளநீரை அவசியம் சாப்பிட்டு பயன் பெறுவோம்.
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.