புலிகளிடமிருந்து கற்றுக்கொள் - positive energy story in tamil
|
positive energy story in tamil |
மேலும் படிக்க :
உன்னைச் செல்வந்தனாக்கும் 4 தந்திரங்கள் Warren Buffet Self Motivational Stories in Tamil
நண்பா உன் வாழ்வில் என்றாவது ஒருநாள் புலிகள் கூட்டமாக வேட்டையாடியதை பார்த்ததுண்டா ? புலிகள் எப்போதும் தனிமையை விரும்பும் உயிரினங்கள் ஆகும். அவை காட்டில் தனித்தே வாழும் தனித்தே வேட்டையாடும் ஆனால் தனிமை என்றும் அதன் பலவீனமாக இருந்ததில்லை. ஒரு புலி ஒரு சிங்கத்தை ஒரே அடியில் கொன்று விடும் அளவுக்கு பலம் மிக்கது. தன்னந் தனியே நின்று காட்டு எருதுகள் போன்ற ஆக்ரோஷமான இறையும் வேட்டையாட கூடியது.
காட்டில் பெரும் நிலப்பரப்பே தனித்து ஆளக் கூடியது. புலிகள் உயிர் வாழ்வதற்கு யாருடைய தயவையும் எதிர்பார்ப்பதில்லை. அவை தன் வெற்றிக்காக அடுத்தவரிடம் கையேந்தி நிற்பதில்லை. பொதுவாக இவ்வுலகில் தனிமை என்பது பலவீனத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் காட்டில் தனிமையில் வாழும் மிருகங்களை அதிக பலம் மிக்கவையாகவும் புத்திக்கூர்மை கொண்டவையாகவும் இருக்கின்றன.
அவை தன்னை பாதுகாப்பதற்கோ தனது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வேறு எவரது உதவியையும் நாடி நிற்பதில்லை. நிச்சயம் இங்கு சில மனிதர்கள் சிங்கம் போன்றவர்கள். அவர்கள் மீது எப்போதும் அடுத்தவர்களின் கவனம் இருக்கும் நம்பிக்கை இருக்கும் அவர்களுக்கு உதவி செய்ய பலர் இருப்பார்கள். அவ் உதவிகளை கொண்டு அவர்கள் கம்பீரமாக வாழ்வார்கள். இவ் உலகம் அவர்களை வெற்றியாளர்களாக பார்க்கும். அவர்கள் மீது அன்பு செலுத்தும் அவர்களை மரியாதையுடன் நோக்கும். ஆனால் இது தவிர்ந்த ஒரு கூட்டமும் இங்கு உண்டு அவர்கள் ஒரு புலியை போன்றவர்கள்.
எப்போதும் தனிமையில் விடப்படுவார்கள் உதவி இல்லாமல் தத்தளிப்பவர்கள். இவ்வாறான மனிதர்களை இங்கு எவருமே கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு உதவுவது இல்லை. மரியாதை அழிப்பதில்லை. அவ்வாறானதொரு மனிதராக நீங்கள் இருந்தால் எனக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம் என நீங்கள் எண்ணினால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு புலி கம்பீரமாக வாழ்வதற்கு தயவும் தேவையில்லை. அதை அப் புலி அறிந்து கொள்கின்றது இல்லையோ. அதைப் படைத்த கடவுள் நன்கறிவார்.
என்னதான் சிங்கத்தை இவ்வுலகமே கொண்டாடினாலும் வீரம் வாய்ந்தது என போற்றினாலும் நிச்சயம் ஒரு புலியுடன் மோதி அதனால் ஜெயிக்க முடியாது. ஏனெனில் ஒருவனது உண்மையான பலம் இருப்பது அவனது மனதில் உள்ளேயே அன்றி பிறரது அங்கீகாரத்தில் அல்ல. நிச்சயம் அப் புகழ்ச்சிகள் அனைத்தும் வெறும் வெற்று வார்த்தைகலே. அவற்றினால் யாரும் எந்த பலனும் அடைந்து கொள்ள போவதில்லை. நண்பா வாழ்வில் எனக்கு உதவி இல்லை பின்புலன் இல்லையே அது இருந்திருந்தால் நானும் சாதிப்பேன் என்ற எண்ணமும் மனதில் இருந்தால். நீ தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே உண்மை இவ்வுலகிலுள்ள கோடீஸ்வரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வாழ்வில் எவ்வித பின்புலமும் இல்லாமல் மிக மிக அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர்களே.
அன்று அவர்களும் உன்னைப்போல உதவியற்று தன்னந்தனியே நின்றார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு குறையாக பார்க்கவில்லை. அடுத்தவரிடம் உதவி கேட்டுச் செல்ல வில்லை மாறாக அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள். தங்களது உழைப்பின் மீதும் திறமைகள் மீதும் நம்பிக்கை வைத்தார்கள். அந்த நம்பிக்கையின் பலனையும் அடைந்து கொண்டார்கள். என்று ஒரு புலி தன் பலத்தை உணருகின்றதோ தனிமையோ சாபமல்ல வரம் என்பதை உணருகின்றதோ. அதன் பின்னரே அது காட்டின் வளம் மிக்கது ஒரு உயிரினமாக மாறுகின்றது. இவ் உண்மையை அது உணர வில்லை எனில் அதுவும் ஒரு சாதாரண பூனை ஆகவே வாழ்ந்து மடியும். ஆனால் என்றும் ஐந்தறிவு கொண்ட புலிகள் அத் தவறை செய்வதில்லை. ஆறறிவு கொண்ட மனிதர்களை அதை செய்கின்றார்கள்.
மேலும் படிக்க :
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.