மன அழுத்தம் தேவையற்ற சிந்தனைகளால் அவதியுறுகிறாயா - positive energy story in tamil
|
positive energy story in tamil |
மன அழுத்தம் தேவையற்ற சிந்தனைகளால் அவதியுறுகிறாயா - positive energy story in tamil
நண்பா வாழ்வில் என்றாவது ஒருநாள் மன அழுத்தம் உன்னை ஆக்கிரமித்தது உண்டா. அப்போது தேவையற்ற சிந்தனைகள் உன்னை சூழ்ந்து கொள்ளும். உன் மனமோ அமைதியின்றி தத்தளிக்கும். பயமும் பதற்றமும் உன்னை ஆக்கிரமித்துக் கொள்ளும். நீ ஒரு நிரந்தர சோகத்தில் மூழ்கி விடுவாய். நாம் விரும்பும் இலக்கை அடைந்து வாழ்வில் வெற்றி அடைந்ததை இவ் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்வதற்கான ஒரே வழி என இங்கு பலர் எண்ணுகிறார்கள். அதனால் அவர்கள் தங்களது மொத்த சந்தோசத்தையும் தன் கனவின் மீது வைக்கின்றார்கள்.
அதை அடைந்து கொண்டால் மட்டுமே தனக்கு நிம்மதி கிடைக்கும் என நம்புகின்றார்கள். ஆனால் அந்த நம்பிக்கையின் பலனாக அவர்களுக்கு கிட்டுவது எல்லாம். வெறும் மன அழுத்தம் மட்டுமே. நிச்சயம் அது போன்றதொரு மனிதராக நீங்கள் இருந்துவிடாதீர்கள். உங்களது மகிழ்ச்சியை என்றும் எதற்காகவும் அடைமானம் வைக்காதீர்கள். நண்பா இன்று உன்னிடம் இருப்பதை வைத்துக் கொண்டு உன்னால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை எனில் உன் மனதை திருப்திப்படுத்த முடியவில்லை எனில் நிச்சயம் என்று உன்னால் அதைச் செய்துவிட முடியாது. ஏனெனில் வாழ்வில் நீ எத்தனை பெரிய வெற்றியை அடைந்தாலும் உன் வாழ்வில் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும். அவை புதுப்புது வழிகளில் தோன்றிக்கொண்டே இருக்கும்.
பிரச்சனைகளை தீர்ப்பதால் மட்டுமே என்னால் நிம்மதியாக வாழ முடியும் என எண்ணினால் நிம்மதி உன்னிடம் என்றும் தோன்றப் போவதில்லை. மாறாக இருப்பதை திருப்தியோடு ஏற்றுக் கொண்டு உன் கனவுகளுக்காக உழைக்கும் மனநிலை உன்னிடம் இருந்தால் உன் வாழ்க்கையும் நிம்மதியாக மாறும். அக் கனவுகளையும் நீ எளிதாக அடைந்து கொள்ளலாம். எவ்வாறு குழம்பிய நீரில் மீன் பிடிக்க முடியாதோ அது போலவே குழம்பிய மனம் கொண்ட ஒருவனால் என்றும் வெற்றியடைய முடியாது.
அக் குழப்பத்தில் அவன் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளும் அவனுக்கு தோல்வியையே தரும். அத் தோல்வி அவனை மீண்டும் மீண்டும் குழப்பமடையச் செய்யும். நண்பா சில மனிதர்கள் உன்னை விரும்பவில்லை என நீ வருத்தம் கொள்ளலாம். அவர்களிடம் முக்கியத்துவம் பெற ஏகலாம் ஆனால் அம்முயற்சி பெரும்பாலும் தோல்வியிலேயே முடிவடையும். உன் விருப்பப்படி பிறர் வாழ வேண்டும் என்ற எண்ணம் நீ முதலில் கைவிட வேண்டும் .இங்கு ஒவ்வொருவருக்கும் தனித்துவமான வாழ்க்கை உண்டு அது அவர்களது விருப்பப்படியே நகரமே அன்றி உனது விருப்பப்படி அல்ல. மாறாக நீ உன்னை விரும்பும் மனிதர்களிடம் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். அப்படியானதொரு கூட்டத்தை கண்டறிய வேண்டும்.
வாழ்வில் வெற்றி பெற முதலில் நீ உன்னை நேசிக்க வேண்டும். உன் உருவத்தையும் திறமைகளையும் குறைகளையும் நேசிக்க வேண்டும். அவை குறித்த தாழ்வான எண்ணங்களை மாற்ற வேண்டும். உன் வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும் அதிலுள்ள மகிழ்ச்சியின் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும். அதன் பின்னர் இவ்வுலகம் உனக்கு மகிழ்ச்சியானது ஒரு வாழ்விடமாக மாறும். இங்கு உன்னை நேசிப்பவர்களை தவிர வேறு எவரையும் நீ கண்டு கொள்ள மாட்டாய் சோகங்களும் மன அழுத்தமும் காற்றில் கரைந்து விடும். எனவே நீ மாறு உன் பார்வையை மாற்றி உன் உலகம் தானாக மாறிவிடும்.
மேலும் படிக்க :
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.