|
positive energy story in tamil |
நரிகளிடம் கற்றுக்கொள் - positive energy story in tamil
பொதுவாக நரிகள் தந்திரத்திற்கு பெயர் போனவை. பலவிதமான தீய குணம் கொண்ட விலங்குகளாக பார்க்க படுபவை. ஆனால் இங்கு பலர் அறியாத நரிகளின் இன்னுமொரு பக்கமும் உண்டு ஆப் பக்கமே நரிகளது உண்மையான பலத்தை பறைசாற்றுகின்றது. காட்டில் உள்ள ஒவ்வொரு விலங்கிற்கும் தனித்துவமான வாழிடம் உள்ளது. அதை தவிர்த்து வேறு எந்த இடத்திலும் அவை உயிர் வாழ்வது கடினமானதாகும். சிங்கங்கள் அடர்ந்த இலையுதிர் காடுகளிலும், புலிகள் அடர்ந்த காடுகளிலும், ஓநாய்கள் அடர்த்தி குறைவான காடுகளைக் கொண்ட மலைப் பகுதிகளிலும் வாழும். ஆனால் நரிகள் பனிமலைகள், பாலைவனங்கள், புல்வெளிகள், சமதரைகள், மேய்ச்சல் நிலங்கள், ஏன் நகரங்களில் கூட வாழும். அந்த அளவிற்கு அவை தனது சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வதில் கைதேர்ந்தவை.
நரிகள் தங்களுக்கு அமைந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதிலும் தங்களது பலம் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப சிந்தித்து செயல்படுவதிலும் முன்நிலையில் இருக்கின்றன. அவை ஓநாய்கள் போல் பலமிக்க கூட்டமாக வாழ்வதில்லை. ஓநாய்கள் போல் ஒரே வேட்டையில் பெரும் இறை வீழ்த்தும் பலமும் அவற்றிடம் இல்லை. ஆனால் குளிர் காலம் தோன்றிய ஓநாய்கள் கூட உணவுக் தட்டுப்பாட்டினால் திண்டாடிக் கொண்டிருக்கும் போது இந்த நரிகள் மட்டும் எவ்வித கஷ்டமுமின்றி தங்களுக்கான உணவுகளை கைப்பற்றிக் கொள்ளும். அவை முயல்களை விரும்பியுண்ணும். ஆனால் தேவையேற்படின் பறவைகள் மீன்கள் போன்றவற்றையும் உண்ணும். விலங்குகள் எதுவும் கிடைக்கவில்லை எனில் காட்டில் உள்ள பழங்களை உண்ணும்.
காட்டில் எந்த உணவுமே இல்லை எனில் அருகிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து அங்கிருக்கும் விலங்குகளுக்கான உணவுகளை திருடிச் சென்றுவிடும். தனக்கு மேலதிகமாக கிடைக்கும் உணவுகளை நிலத்தில் குழி தோண்டி புதைத்து பசி எடுக்கும் நேரத்தில் அதை மீண்டும் வெளியில் எடுத்து உண்ண ஆரம்பிக்கும். அக் கிராமங்களில் மனிதர்கள் வைக்கும் பொறிகளை சாதாரணமாக கடந்து செல்லும்.
தன் எதிரியை குழப்புவதற்காக பல போலியான கால் தடங்களை நிலத்தில் உருவாகும். நரிகள் உருவத்தில் சிறியவை பிற வேட்டை மிருகங்களை விட பலம் குறைந்தவை. இருப்பினும் அவை தலைசிறந்த சாமர்த்தியசாலிகள் ஆகும். அந்த சாமர்த்தியத்தின் காரணமாகவே அவை காட்டு விலங்குகள் ஆக இருந்த போதிலும் மனிதர்கள் வாழும் இடத்திற்கு மிக இலகுவாக நுழைந்து தங்களுக்கான உணவுகளை சேகரித்து செல்கின்றனர். பலம் மிக்கதே உயிர்வாழும் என்ற காட்டின் மந்திரத்தை உடைத்து. சாமர்த்தியம் தன் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையினாலும். அப்பலம் மிக்க விலங்குகளே பசியில் மடியும் குளிர் காலத்திலும் கூட எவ்வித சஞ்சலமும் இன்றி மகிழ்ச்சியோடு வாழ்கின்றன இந்த நரிகள்.
நண்பா உன் பலம் இருப்பது உன் உடலிலோ சொத்துக்களில்லோ அல்லது உன்னைச் சுற்றி இருப்பவர்களிடம்மோ அல்ல. உன் பலம் இருப்பது உன் உள்ளத்தில் நீ சிந்திக்கும் விதத்தில் அதை நீ அறிவதற்கு இந்த நரிகளை விட சிறந்த உதாரணம் வேறு எங்கும் இருக்க முடியாது. சாதுர்யமான இந்த நரிகளைப் பார் அவை உன் வாழ்க்கைக்கு தேவையான பல தந்திரங்களை உனக்கு கற்று தரும்.
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.