நீ ஏழையாகப் பிறப்பது குற்றமல்ல ஏழையாகவே இறப்பதே குற்றமாகும் - positive energy story in tamil

positive energy story in tamil
positive energy story in tamil

நீ ஏழையாகப் பிறப்பது குற்றமல்ல ஏழையாகவே இறப்பதே குற்றமாகும் - positive energy story in tamil


நீ ஏழையாக பிறப்பது உன் குற்றமல்ல ஆனால் ஏழையாக மரணிப்பது முழுக்க முழுக்க உனது குற்றமே. இவை திருபாய் அம்பானியின் வரிகளாகும் நண்பா ஒருவன் ஒரு மரத்தடியில் பல மணி நேரமாக அமர்ந்து இருக்கின்றான். அவன் அருகில் நீ சென்று ஏன் இவ்வாறு அமர்ந்துள்ளார் என கேட்கின்றாய் ? அம்மனிதன் உன்னை நோக்கி இதோ இம்மரத்தின் உள்ள பழங்களை நான் உன்னை விரும்புகிறேன். அதன் காரணமாகவே அவை கீழே விழும் வரை காத்து இருக்கின்றேன் எனக் கூறுகின்றான். அப்போது உன் மனதில் என்ன தோன்றும் மரத்தில் உள்ள பழம் வேண்டுமெனில் அதை பறிப்பதற்கு தானே முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து அப் பழம் கீழே விழும்வரை தான் காத்திருப்பதாக கூறுகின்றாநே இவன் எத்தனை பெரிய முட்டாளாக இருப்பான் என்ற எண்ணமே தோன்றும். ஆனால் இதே செயலைத் தான் நீயும் உனது வாழ்வில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றாய் என்பதை நீ என்றாவது உணர்ந்ததுண்டா ? நண்பா இங்கிருக்கும் அனைவரது மனதிலும் பல கனவுகள் உள்ளன அவை என்றாவது ஒருநாள் நனவாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் அவர்களில் பலரது வாழ்க்கை பழத்திற்காக காத்திருக்கும் மனிதனை போன்றது. அவன் என்றும் தான் எண்ணியதை அடைந்து கொள்ள போவதில்லை. கனவு காண்பது அனைவருக்கும் இலகுவானது ஆனால் அக் கனவை நனவாக்க முயற்சி செய்வது பலருக்கு கசப்பாகவே இருக்கின்றது. அதனால் அவர்கள் தங்களது சோம்பேறித்தனத்தை இயலாமையையும் மறைக்க பல காரணங்களை கூறுகின்றார்கள். வணிகம் செய்ய முதலீடு இல்லையே நல்லதொரு கல்வியை பெற பணம் இல்லையே எனக்கு வேலை வாங்கித்தர எவரும் இல்லையே என அவர்களது சாக்குப் போக்குகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன. இப்படியானதொரு எண்ணம் உன் மனதில் இருந்தால் நீ ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் Apple, Google லில் தொடங்கி இன்று நீ காணும் முக்கால்வாசி நிறுவனங்களை தன் தினசரி வாழ்வோடு போராடிக்கொண்டிருந்த ஏழைகளே உருவாக்கினார்கள். Einstein Tesla, Abdul Kalam போன்ற வரலாற்று மாமேதைகள் வறுமையில் வாடிக் கொண்டிருந்த குடும்பங்களிலிருந்தே உருவானார்கள். இங்கு நீ பார்க்கும் எந்த வெற்றியாளர்யும் யாரும் தூக்கி விட்டதில்லை. அவர்கள் தங்களது முயற்சியினால் பல தடைகளைக் கடந்து அடிவாங்கி மேலே வந்தார்கள். அதில் பலர் இன்று நீ இருக்கும் நிலையைவிட மோசமான நிலையில் இருந்தே தங்களது வெற்றி பயணத்தை ஆரம்பித்தார்கள். எனில் உனக்கு உன் கனவுகளுக்காக முயற்சிப்பதில் கடினமாக போராடுவதில் என்ன தடை இருக்கின்றது. அது தடை எதுவாக இருந்தாலும் அதை உடைத்தெறியும் வழியை நீ கண்டறிய வேண்டும். உன் கனவுகளுக்காக உன்னால் முடிந்த முயற்சிகளை செய்ய வேண்டும். அது எத்தனை சிறிய முயற்சியாக இருந்தாலும் அது பயன்படுமா இல்லையா என்ற சந்தேகம் உன்னிடம் இருந்தாலும் அதை நீ செய்ய வேண்டும். ஏனெனில் உன் வாழ்வில் நீ எடுக்கும் எந்த முயற்சியும் வீண் ஆவதில்லை. அது வெற்றி அடைந்தாலும் தோல்வி அடைந்தாலும் அதற்குரிய பலனை அடைந்தே தீருவாய். இதுவே இயற்கை உனக்கு அளிக்கும் வாக்காகும். இறுதியாக அன்று அம்பானி கூறியதையே நாமும் கூறுகின்றோம் நீ ஏழையாக பிறப்பது உன் தவறு அல்ல ஆனால் ஏழையாக மரணிப்பது உன் தவறாகும். அதை நீ உணர்ந்து கொண்டால் வாழ்வின் எத்தருணத்திலும் உன் நிலைக்கு நீ மட்டுமே காரணம் என்பதை உணர்ந்து கொள்வாய். 


நன்றி


No comments:

Post a Comment