Mickey Mouse உருவான கதை - positive energy story in tamil

Mickey Mouse உருவான கதை - Real Story of Disney
positive energy story in tamil
Mickey Mouse உருவான கதை - positive energy story in tamil


மேலும் படிக்க : 



பாடசாலையில் பகல் கனவு கண்டு கொண்டே தனது பாடத்தில் கோட்டை விடுவது அவ் இளைஞனது வழக்கம். வகுப்பறையில் பாடத்தில் கவனம் செலுத்தாமல் தனது நோட்டுப் புத்தகத்தில் விலங்குகளையும் இயற்கை காட்சிகளையும்மே அவன் வரைந்து கொண்டிருந்தான். தினமும் அதிகாலை எழுந்து தனது அண்ணனுடன் சேர்ந்து அவ்வூரில் இருந்த புகையிரத நிலையத்திற்கு அருகில் சென்று செய்தித்தாள்கள் நொறுக்குத் தீனிகளை விற்பனை செய்வான். 

பின்னர் பாடசாலைக்குச் சென்று அது முடிந்த கையோடு மட்டும் நொறுக்குத் தீனிகளை விற்க ஆரம்பித்து விடுவான். அந்த வருமானத்திலேயே அவனது குடும்பம் பசியாற்றிக் கொண்டிருந்தது. படிப்பில் அவனுக்குப் பெரிதாக ஆர்வமில்லை அதனால் தனது கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தன் அண்ணன் தயவில் ஒரு பத்திரிக்கையில் கார்ட்டூனிஸ்டாக வேலைக்கு சேர்ந்தான்.

 ஆனால் வேலையில் இணைந்து சில மாதங்களிலேயே உனக்கு கற்பனை வளம் இல்லை எனக் கூறி அவனை அங்கிருந்து துரத்திவிட்டார்கள். கையிலிருந்த பணத்தை வைத்து ஒரு வணிகத்தை ஆரம்பித்தான். அது நஷ்டம் அடைந்தது. மனம் தளராதவன் மீண்டும் ஒரு வணிகத்தை ஆரம்பித்தான். ஆரம்பித்த சில மாதங்களிலேயே அது படுமோசமாக நஷ்டமடைந்து அவனிடமிருந்த சேமிப்புகள் அனைத்தும் காணாமல் போயின. 

கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லை அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாமல் வீதியில் நின்றான். இருந்தும் அவன் மனம் தளர்ந்து விடவில்லை தன் அண்ணனிடம் முதலீடு பெற்று மீண்டும் ஒரு வணிகத்தை ஆரம்பித்தான். ஒரு புதுமையான கார்ட்டூனை உருவாக்கினான் ஆனால் அவனுடன் இருந்த சிலர் சதி செய்து அந்த கார்ட்டூன் கதாபாத்திரத்தின் உரிமையை அவனிடமிருந்து திருடி கொண்டார்கள். மேலும் அவளது சொந்த நிறுவனத்தில் இருந்து அவனை துரத்தி விட்டார்கள். இவ் இளைஞனோ மன அழுத்தத்தின் உச்சத்தை அடைந்தான். ஆனால் அவன் தன் முயற்சியில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. 

அடுத்து என்ன செய்வது என்ற திட்டமும் அவனிடம் இல்லை. தினமும் அது குறித்து சிந்தித்துக் கொண்டே இருந்தான். தன் மனதில் ஒரு புதிய திட்டம் உருவாகாதா என ஏங்கிக் கொண்டிருந்தான். இவ்வாறு ஒரு நாள் தன் வீட்டின் கராஜ்ன் அருகே சோகத்தோடு அவன் உட்கார்ந்திருந்த போது திடீரென அவனை கடந்து ஓடியது ஒரு எலி. அவனது கவனம் முழுவதும் அந்த எலியின் பக்கம் திரும்பியது. அது வேகமாகவோ ஓடுவதும் திடீரென நிற்பதும் மீண்டும் வேகமாக ஓடி எங்காவது ஒளிந்து கொள்வதுமாக பல குறும்புகளை செய்து கொண்டிருந்தது. 

அந்த நிமிடம் அவனது மனதில் ஒரு திட்டம் தோன்றியது உடனடியாக தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து அதை வரைய ஆரம்பித்தான். அன்று அவன் வரைந்து முடித்து குறும்புகள் செய்யும் ஒரு எலியை. தன் சகோதரனின் உதவியுடன் பலரிடம் கடன் வாங்கி அந்த கதாபாத்திரத்தை கார்ட்டூன் படம் ஆக்கினான். அக் கார்ட்டூநோ மக்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் உரிமத்தை வைத்து அவன் பல கோடிகள் சம்பாதித்தான். மேலும் பல வணிகம்களை ஆரம்பித்து அவை அனைத்திலும் வெற்றி பெற்றான். 

இவ்வாரே mickey mouse என்ற உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம் உருவானது. அதை உருவாக்கிய அந்த முட்டாள் இளைஞனே இன்று Marvel, Netrio, Espn, Star India உட்பட பலநூறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களான Disney நிறுவனத்தை உருவாக்கிய Walt Disney ஆவார். நீ காணும் கனவெல்லாம் நினைவாகும். அதை நினைவாக்கும்  உறுதி உன்னிடம் இருந்தால் எனவே பேச்சை நிறுத்திவிட்டு செயலில் இறங்கு அதுவே மகத்துவத்தை அடையும் ஒரே வழியாகும்.


மேலும் படிக்க : 




முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment