சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் K.G.F ராக்கி

KGF 2
KGF 2

பெங்களூரின் கன்னடம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் செலுத்த K.G.F படத்தின் நடிகர் யாஷ் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவின் கொரோனாவின் இரண்டாம் அலையின் பாதிப்பால் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் மற்றும் பிற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சினிமா துறையில் உள்ள கூலி தொழிலாளர்கள் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றார்கள். இவர்களுக்கு உதவி செய்யும் வகையில் திரை பிரபலங்கள் உதவி செய்து வருகின்றன. அந்த வகையில் கன்னடம் சினிமா உள்ள 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் என அனைவரின் வங்கி கணக்கில் செலுத்த K.G.F நடிகர் யாஷ் ரூபாய் 1.5 கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளார் என அவரது Twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

KGF 2





இந்த மோசமான கொரோனா காலகட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு திரைத்துறையில் 21 பிரிவுகளை சேர்ந்த 3 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் எனது சொந்த செலவால் ரூபாய் 5 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் செலுத்துவதாக உள்ளேன் என்று கூறி. "நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை" என அவரது Twitter பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment