Warren Buffett - positive energy story in tamil

Warren Buffett positive energy story in tamil
positive energy story in tamil
positive energy story in tamil 

Warren Buffett கோடிஸ்வரன் ஆகிய அவரது முதலீடு. 1000 டாலர்கள் இல் தொடங்கி பல பில்லியன் டாலர்கள் சம்பாதித்த Warren Buffett. 


மேலும் படிக்க 




ஒருவன் தன் வாழ்வில் மேற்கொள்ளக் கூடிய மிகப் பெரும் முதலீடு எது தெரியுமா. அது அவன் தன்மீது மேற்கொள்ளும் முதலீடாகும். நீங்கள் ஒரு வணிகத்தை ஆரம்பித்தால் அது நஷ்டம் அடையலாம் சொத்துக்கள் சேர்த்தால் அவை அழிந்து போகலாம். ஆனால் நீங்கள் உங்கள் மீது மேற்கொள்ளும் முதலீடு மரணம் வரை நிலைத்து நிற்கும். அதை உங்களிடம் இருந்து எவராலும் பறித்துக்கொள்ள முடியாது. ஒருவன் மழுங்கிய கோடாரியை கொண்டு ஒரு மரத்தை வெட்ட முனையலாம். அங்கு அவன் என்னதான் முயற்சி செய்தாலும் கடினமாக உழைத்தாலும் நிச்சயம் மரத்தை வெட்ட முடியாது. ஏனெனில் அவனிடம் இருப்பது ஒரு மழுங்கிய கோடாரி ஆகும். அவ்வாறு அம்மரத்தை எண்ணினால் முதலில் தனது கோடாரியை கூர்மையாக்க வேண்டும். கோடாரியை கூர்மையாக எனக்கு நேரமில்லை என அவன் கூறுவான் ஆக இருந்தால் அல்லது அதில் சோம்பேறித்தனம் கொள்வானாக இருந்தால் அதன் பின் அவனது உழைப்பு அனைத்தும் வீணாய் போகின்றன. இவ்வுலகில் பல கோடி மக்கள் இருந்தாலும் அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றியாளர்களாக மாறுகின்றார்கள். ஏனெனில் அவர்கள் மட்டுமே தங்கள் மீது முதலீடு செய்கிறார்கள். தங்களது பொன்னான நேரத்தை தங்களது அறிவிலும் திறமையிலும் அனுபவத்தை பருவத்திலும் செலவு செய்கின்றார்கள். வெற்றியாளர்கள் என்றும் மழுங்கிய கோடாரியை கொண்டு மரம் வெட்ட முனைவதில்லை. அவர்கள் ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அதற்காக தங்களை தயார் செய்கின்றார்கள் பயிற்சி செய்கின்றார்கள். அக்காரியம் குறித்த பல விடயங்களையும் கற்றுக் கொள்கின்றார்கள். அதில் பொறுமையோடு முயற்சி செய்கின்றார்கள் இறுதியில் மகத்துவம் மிக்க வெற்றியையும் அடைகின்றார்கள். வாழ்வில் நீங்கள் ஒரு மிகப்பெரும் வெற்றியை அடைய விரும்பினால் என்றும் கற்றுக்கொள்வதை நிறுத்தாதீர்கள். தினமும் நான் ஆறு மணி நேரங்கள் வாசிக்கின்றேன் அதில் புத்தகங்கள் கட்டுரைகள் செய்திகள் என அனைத்துமே இருக்கும் நிச்சயமா பழக்கமே இன்றுவரை என்னை உலகின் தலை சிறந்த முதலீட்டாளராக வைத்திருக்கின்றது. வாசிப்பின் மூலம் கிடைத்த அறிவைக் கொண்டே நான் எனது முழு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிக் கொண்டு இருக்கின்றேன். எனவே வாழ்வின் எத்தருணத்திலும் புதிய விடயங்களை கற்றுக் கொள்வதை நிறுத்தி விடாதீர்கள் உங்கள் அறிவை கூர்மையாக்கி அதை நிறுத்தி விடாதீர்கள் ஏனெனில் உங்களிடம் எவ்வளவுக்கு எவ்வளவு அறிவும் அனுபவமும் இருக்கிறதோ அவ்வளவு எளிதாக மிக அதிக பணத்தை உங்களால் சம்பாதித்துக் கொள்ள முடியும். இந்த அறிவைக் கொண்டே நான் இத்தனை பில்லியன் டாலர்களை சம்பாதித்தேன். எனவே வாழ்வில் நஷ்டமே அடையாது ஒரு முதலீட்டை நீங்கள் மேற்கொள்ள விரும்பினால் உங்களின் முதலீடு செய்யுங்கள். அந்த முதலீட்டினால் மட்டுமே பணம் புகழ் ஆளுமை என்று அனைத்தையும் ஒருசேர உங்களுக்குப் பெற்றுத் தரமுடியும்.



முடிந்தவரை பகிரவும்



நன்றி

No comments:

Post a Comment