Positive Energy Story in Tamil - இந்த 5 பழக்கங்களுமிருந்தால் நீ வெற்றிக்காகவே பிறந்தவன்

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

வணக்கம் நண்பா ஒருவன் தன் வாழ்வில் வெற்றி அடைவான் இல்லையா என்பதை அவனது இயல்புகளை பார்த்தே கணித்து விடலாம் என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா ? வெற்றியாளர்கள் வானிலிருந்து விழுபவர்கள் அல்ல. அவர்களும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே ஆனால் இங்கு பல மனிதர்களிடம் இல்லாத சில இயல்புகள் அவர்களிடம் இருக்கும். அந்த இயல்புகளைக் கொண்டே அவர்கள் தனித்துவம் மிக்க வெற்றியாளர்களாக மாறுகின்றார்கள். அந்த இயல்புகள் உங்களிடம் இருந்தால் நீங்களும் அந்த வெற்றியாளர்கள் பட்டியலில் இணைந்து கொள்வதற்கு தயாராகி விட்டீர்கள் என்று பொருள். அவ்வாறான 5 இயல்புகளை நாம் இங்கு காணவிருக்கிறோம். இது உங்களுக்கான Positive Energy Story in Tamil.


முதலாவது வெற்றியாளர்கள் அனைத்திலும் வாய்ப்புக்களை தேடுவார்கள். வாய்ப்புகளையே காண்பார்கள் நம்மிடம் என்னதான் அசாத்திய திறமைகள் இருந்தாலும் அதை சரியான முறையில் பயன்படுத்த வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கறிவார்கள். அதனால் அந்த வாய்ப்புக்களை தொடர்ந்து தேடிக் கொண்டே இருப்பார்கள். எப்போதும் வாய்ப்புக்கள் உங்களது கண் முன்னே இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவற்றை அடையாளம் கண்டு கொள்வதே கடினமானதாகும். அதை கண்டறியும் பொறுமையும் அதற்கான தேடல்களும் இந்த வெற்றியாளர்களிடம் சற்று அதிகமாகவே இருக்கும். உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்து சம்பவங்களிலும் நீங்கள் புதிதாக அறிந்து கொள்ளும் அனைத்து விடயங்களிலும் வெற்றிக்கான வாய்ப்பை நீங்கள் தேடுவீர்கள் ஆக இருந்தால் இவற்றில் எதை பயன்படுத்தி நாம் முன்னேறலாம் என்ற கேள்வியை உங்களிடம் இருந்தால் ஓர் வெற்றிக்கான முதல் தகுதியை நீங்கள் பெற்று விட்டீர்கள் என்று பொருள்.


இரண்டாவது தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அலிபாபா நிறுவனத்தை ஆரம்பிக்க போகின்றேன் எனக் ஜாக்மா கூறியதும் அங்கிருந்த அனைவரும் கைகொட்டிச் சிரித்தார்கள் உனக்கு ஒரு லேபர் வேலையை தரவே யாரும் தயாராக இல்லை உன்னை போல நாலு முட்டாள்களை சேர்த்துக் கொண்டு நீ கோடிஸ்வரன் ஆவாயா என கிண்டல் அடித்தார்கள். ஆனால் அடுத்த மூன்று வருடங்களில் தான் கூறியதை செய்து காட்டினார் ஜாக்மா. அலிபா பாவை மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்து காட்டினார். பொதுவாக அனைத்து வெற்றியாளர்களின் ஆரம்பமும் இதுவாகத்தான் இருக்கும் அவர்களை எவருமே மதிப்பதில்லை ஏற்றுக்கொண்டதில்லை அவர்கள் தங்களது ஆரம்ப காலகட்டத்தில் மிகப் பெரும் அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்தார்கள் ஆனால் அவர்கள் என்றும் தங்களது தன்னம்பிக்கையையும் சுய மரியாதையையும் கைவிட்டதில்லை. அந்த விடாப்பிடியான முயற்சியே அவர்களுக்கு இத்தனை பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. வாழ்வில் நீங்கள் ஒரு தன்னம்பிக்கை உடையவராக இருந்தால் எவருக்குமே அசைந்து கொடுக்காத சுயமரியாதை கொண்டவராக இருந்தால் வெற்றியாளர்களின் இரண்டாவது பண்பும் உங்களிடம் உள்ளது என்று பொருள்.


மூன்றாவதாக அவர்களிடம் அதிகமான குறைகள் இருக்கும் பார்வைக்கு முட்டாள்கள் போல் தோன்றுவார்கள். அறிவாளிகள் இடமிருக்கும் மிக முக்கிய பண்புகளில் ஒன்று அவர்கள் தங்களிடம் இருக்கும் அறிவு இவ்வுலகிலுள்ள அனைவரிடமும் இருக்கும் என எண்ணுவார்கள். அதனால் அவர்கள் என்றும் தங்களது அறிவை ஒரு பொக்கிஷமாக எண்ணுவதில்லை. அதை வெளிப்படுத்த விரும்புவதில்லை அதனால் அவர்கள் பார்வைக்கு முட்டாள்கள் போலவே தோற்றம் அளிப்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் எனும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். மிகப்பெரும் தலைமைத்துவப் பண்பு கொண்டவர். வாழ்வின் மிக கடினமான முடிவுகளை கூட சாதாரணமாக எடுத்து முடித்தவர். அவர் தன் வீட்டில் இருந்த ஒரு சோபாவை மாற்ற வாரக்கணக்கில் சிந்தித்தும் அதில் ஒரு முடிவை எடுக்க முடியாமல் அந்த சோபாவினை மாற்றாமலேயே விட்டுவிட்டார் எனக் கூறுவார் அவரது மனைவி. அறிவாளிகள் என்றும் இருக்கும் மிகப் பெரும் குறை இதுதான். அவர்கள் ஒரு துறையில் அதீத திறமை கொண்டவர்களாகவும் மறுபக்கம் சாமானியர்களை இலகுவாக செய்யும் காரியங்களை செய்வதற்கு கூட திண்டாடுபவர்கள் ஆகவும் இருப்பார்கள்.

நான்காவது அவர்கள் அதிகமாக அவதானிபார்கள் வெற்றியாளர்களிடம் அவதானிக்கும் திறன் மிக அதிகமாக இருக்கும். அவர்கள் பேசுவதை விட அடுத்தவர்கள் பேசுவதை அவதானிபதில் கைதேர்ந்தவர்கள். இந்த இயல்புகள் ஆளையே அடுத்தவர்களது கண்களுக்குத் தென்படாத பல வாய்ப்புக்கள் இவர்களது கண்களுக்கு தென்படுகின்றன. அவ் வாய்ப்புகளை கொண்டு அவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கின்றார்கள். அப்படி எதையும் தெளிவாக அவதானிக்கும் பழக்கம் உங்களிடமும் உள்ளதா.


ஐந்தாவது அவர்கள் எளிமையானவர்கள் வெற்றியாளர்கள் எப்போதும் எளிமையாக சிந்திப்பவர்கள். தன்னடக்கம் ஆனவர்கள், தெளிந்த மனம் கொண்டவர்கள், அந்த தன்னடக்கமும் தெளிவும் அவர்களது பேச்சிலும் செயலிலும் தென்படும். அவர்கள் எப்போதும் எதார்த்தமாக இருப்பார்கள் சக மனிதர்களையும் தனக்கு சரி சமமாகப் பார்ப்பார்கள். இந்த இயல்புகளே அவர்களது வெற்றியை உறுதி ஆக்குகின்றன.


நண்பா நாம் மேலே சொன்ன ஐந்து இயல்புகளும் இங்குள்ள அனைத்து வெற்றியாளர்களுக்கு பொதுவானவை. இந்த இயல்புகளில் உன்னிடம் இருப்பவை எத்தனை என்பதை கணக்கிட்டுக் கொள். உன்னிடம் இல்லாத இயல்புகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய். நிச்சயம் வாழ்வில் நீயும் ஒரு கண்ணியம் மிக்க வெற்றியை அடைந்து கொள்வாய்.


நன்றி


No comments:

Post a Comment