இதைச் செய் உன்னை வெறுப்பவர்களும் விரும்புவார்கள் - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil


வணக்கம் நண்பா இங்கு சில மனிதர்கள் உள்ளார்கள் அவர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கான ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொள்வார்கள். அவர்கள் மேல் அனைவருக்கும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். அவர்களது கருத்துக்களுக்கு மரியாதை இருக்கும். அவ்வாறான மனிதர்களை நிச்சயம் நீங்கள் சந்தித்திருப்பீர்கள் அடுத்தவர்களிடம் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கை பார்த்து வியந்து இருப்பீர்கள். ஆனால் அது போன்ற ஒரு மனிதனாக உங்களாலும் மாற முடியும் என்பதை உணர்ந்தது உண்டா. ஒரு சில பழக்கங்களை உங்களிடம் உருவாக்கிக் கொண்டால் உங்களால் யாரையும் எச்சூழலிலும் கவர்ந்து கொள்ள முடியும் அவ்வாறான 5 முக்கிய பழக்கங்களை நாம் இனி காணவிருக்கிறோம்.  இது உங்களுக்கான Positive Energy Story in Tamil.


1. வெளிப்படையாக இருங்கள் :


வெளிப்படையான மனிதர்களை அனைவரும் விரும்புவார்கள் ஏனெனில் அதை  நேர்மையின் அடையாளமாகவே மக்கள் காண்கின்றார்கள். உள்ளே ஒன்றை வைத்து வழியே ஒன்றை பேசாமல் தன் மனதில் தோன்றுவதை வெளிப்படையாகவும் பிறர் மனம் புண்படாமல் பேசும் மனிதனிடமும் தானும் நேர்மையா ஆக இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அவன் மீது நம்பிக்கை கொள்வார்கள் அவனது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உண்மையை மறைத்து அடுத்தவர்களை கவர்வதற்காகவோ அல்லது ஏமாற்றுவதற்காகவோ நீங்கள் பொய் கூறினால் அதை அவர்கள் இலகுவாக கண்டறிந்து விடுவார்கள். அதன் பின்னர் உங்களது கருத்துக்களை அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.


2. அடுத்தவர்களை புரிந்துகொள்ளுங்கள்  :


இதுவரை நீங்கள் பல மனிதர்களைச் சந்தித்து இருப்பீர்கள் அவர்களோடு பழகி இருப்பீர்கள். ஆனால் அதில் ஒரு சிலர் மட்டுமே உங்களது நண்பர்களாக மாறுகிறார்கள் அது ஏன் தெரியுமா ? நீங்கள் பழகும் மனிதர்களில் உங்கள் சிந்தனைகளோடு ஒத்துப் போகும் மனிதர்கள் இடமே நீங்கள் நெருக்கமாவீர்கள் அவர்களிடமே அதிகமான நேரத்தை செலவிடுவீர்கள். பின்னர் அவர்கள் உங்களது நண்பர்கள் ஆகிறார்கள். இதை யுக்தியை நீங்கள் அடுத்தவர்களைக் கவர் வதிலும் பயன்படுத்த வேண்டும். நீங்கள் எவ்வளவு தூரம் பிற மனிதர்களை புரிந்து கொள்கிறீர்களோ அவர்களது கஷ்டங்களை மனநிலையை புரிந்து கொள்கிறீர்களோ. அவ்வளவு தூரம் அவர்களுக்கு நீங்கள் நெருக்கமானவர்களாக முக்கியத்துவம் மானவர்களாகவும் தென்படுவீர்கள். எனவே அடுத்தவர்கள் உங்களை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என நீங்கள் எண்ணினால் அதற்கு முன்னதாக அடுத்தவர்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் தானாகவே உங்களை நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.


3. ஒரு சிறு புன்னகை :


இவ்வுலகில் மிக மிக சக்தி வாய்ந்த ஒரு ஆயுதம் எது தெரியுமா ? அது உங்கள் உள்ளத்திலிருந்து வரும் சிறு புன்னகை ஆகும். உங்களுக்கு சற்றும் அறிமுகமில்லாத மனிதர்களுடனும் கூட ஓர் அழகிய நட்பை உருவாக்குவதில் அப் புன்னகைக்கு மிகப் பெரும் பங்கு உண்டு. நீங்கள் ஒருவரை பார்த்து புன்னகைக்கும் போது அவர் மனதில் உங்களைப் பற்றிய நல்லதொரு எண்ணமே உருவாகின்றது. உங்களது முகத்தில் ஒரு புன்னகை எப்போதும் இருந்தால் அது அடுத்தவர்கள் மனதில் உங்களை இலகுவாக கொண்டு செல்வதில் மிகப்பெரும் பங்களிப்பை செய்கின்றது.


4. தன்னம்பிக்கை :


உங்கள் முன்னே இரண்டு மனிதர்கள் உள்ளார்கள் அதில் ஒருவர் தன்னம்பிக்கையோடு நல்ல வார்த்தைகளையே பேசுகின்றார் உங்களை ஊக்குவிக்கிறார். மற்றவரோ எப்போதும் எதிர்மறையாக பேசுகின்றார் உங்கள் மனதிலும் எதிர்மறையான எண்ணங்களையே விதைகின்றார். இந்த இரண்டு நபர்களில் யார் மீது உங்களுக்கு நம்பிக்கை வரும். உங்களது கஷ்டத்தை யாரிடம் கூறுவீர்கள் தன்னம்பிக்கை உடையவர்களை ஏ அனைவரும் விரும்புவார்கள். அவர்களையே முன்னிலையில் நிறுத்துவார்கள். அவர்களது கருத்துக்களை கேட்பார்கள்.  இதுவே இயற்கை ஆகும். எனவே அடுத்தவர்கள் உங்களை அதிகம் விரும்ப வேண்டும் என நீங்கள் எண்ணினால் உங்களது தன்னம்பிக்கையை தொடர்ந்து வளர்த்துக் கொள்ளுங்கள்.


5. ஆள் பாதி ஆடை பாதி :


என்னதான் நீங்கள் மனதளவில் உறுதியானதாகவும் திடமானவராக இருந்தாலும் உங்களது வெளித் தோற்றமே உங்களைப் பற்றிய முதல் பிம்பத்தை ஒருவரது மனதில் விதைக்கின்றது. அது தவறாக பதியும் ஆனால் அதை மீண்டும் சரிக்கட்டுவது மிகக் கடினமாகும். எனவே எப்போதும் உங்களது உடைகளில் கவனம் செலுத்துங்கள் பேச்சில் கவனம் செலுத்துங்கள் செயல்பாடுகளில் கவனம் செலுத்துங்கள். அதுவே உங்களுக்கான ஒரு கவர்ச்சியான வெளித்தோற்றத்தை உருவாக்கித்தரும்.

நண்பா இந்த ஐந்து இயல்புகளும் உங்களிடம் இருந்தால் நிச்சயம் உங்களை சுற்றியுள்ள மனிதர்களிடம் நீங்கள் மிகப்பெரும் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.  இந்த ஐந்து இயல்களிலும் உங்களிடம் இருப்பதை அதிகம் பயன்படுத்துங்கள் இல்லாததை வளர்த்துக் கொள்ளுங்கள் அதன் பின் இந்த இயல்புகளின் உண்மையான பலத்தை கண்கூடாக கண்டு கொள்வீர்கள்.


நன்றி


No comments:

Post a Comment