Positive Energy Story in Tamil - உன் வாழ்க்கையை மாற்றப்போகும் ஓர் குட்டிக்கதை - Motivational Story in Tamil

Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil


உன் வாழ்க்கையை மாற்றப்போகும் ஓர் குட்டிக்கதை - Motivational Story in Tamil


பல வருடங்களுக்கு முன்னால் ஐரோப்பாவிலிருந்து ஆபிரிக்கா சென்ற ஒரு பயணிக்கு தற்செயலாக ஒரு கிராமத்தை கடக்க வேண்டியிருந்தது. அங்கு அவர் மிகப் பெரும் வலிமை கொண்ட ஆபிரிக்க யானைகள் காலில் ஒரு சிறு கயிறு கட்டப்பட்டு அருகில் உள்ள தூண்களில் பிணைக்கப்பட்டு வைத்திருந்ததை கண்டார். அந்த யானைகலோ எங்கும் நகர முடியாமல் அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தன. இவருக்கோ ஆச்சரியம் 10,000 கிலோவையே ஒரே அடியில் தூக்கி வீசும் அளவிற்கு பலம் பொருந்திய இந்த ஜந்துக்கள். இந்த சிறிய கயிற்றை ஒரே இழுவில் அறுத்துக்கொண்டு வெளிவராமல் இங்கேயே கட்டுண்டு கிடக்கின்றனவே அது எவ்வாறு என சிந்தித்தார். அக்கணமே தனது சந்தேகத்தை ஒரு யானையின் அருகில் இருந்த பாகனிடம் வினவினார் ?  அதற்கு அவன் இந்த யானைகள் மிகச் சிறியதாக இருக்கும் போதே இதை அளவான கயிறுகளைக் கொண்டு அவற்றையே இந்த தூண்களில் இருக கட்டி வைத்து விடுவோம். 


அந்த கயிறுகளை அறுத்துக் கொண்டு தப்பித்து விட அவை பலமுறை முயற்சித்தும். ஆனால் உருவத்தில் சிறியதாக இருந்த அவற்றால் அந்த கயிறை அறுத்து விட முடியவில்லை. பல நாட்கள் தொடர்ந்து போராடி ஒரு கட்டத்தில் இந்த கயிறை நம்மால் அறுக்கவே முடியாது என்ற மனநிலைக்கு வந்துவிடும். அதன் பின் தங்களது காலில் கட்டப்பட்ட காற்றை அறுக்கும் முயற்சியில் இருந்து இவை பின்வாங்கி இவ்விடத்திலேயே அமைதியாக நின்றுவிடும். பல வருடங்கள் கடந்தாலும் உருவத்தில் எத்தனை பெரிதாக வளர்ந்தாலும் இந்தக் கயிறை அறுக்க முடியாது என்ற எண்ணம் இவைகளின் மனதில் வேறுன்றி இருக்கும். எனவே  மீண்டும் ஒரு தடவை முயற்சிக்கலாம் என்ற எண்ணமே இல்லாமல் இந்த யானைகள் இவ்விடத்திலேயே கட்டுண்டு கிடக்கும் என்றான். இக்கதை அந்த பயணியை மிகப் பெரும் ஆச்சரியத்தில் தள்ளியது. இவை பிணைக்கப்பட்டுள்ள கயிறு சிறிது வழுவாக எழுத்தாலே அறுந்து விடுமே அந்த எண்ணம் கூடவா இதற்கு தோன்றாது என மீண்டும் அந்த பாகனிடம் வினவினார் ? அதற்கு அவன் இதை குட்டிகளாக இருக்கும் போது இந்த கயிறு அறுக்க பலமுறை முயற்சிக்கும் என கூறினேன் அல்லவா அவ்வாறு முயற்சிக்கும்போது அக்கயிறு இவற்றின் கால்களை இறுக்கி மிகப் பெரும் வலியை உருவாக்கும். 


அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு சிறிது காலம் முயற்சிக்கும் ஆனால் என்று இவற்றால் அந்த வலிகளை தாங்கிக் கொள்ள முடியவில்லையோ அந்த நிமிடமே இவை தங்களது முயற்சியிலிருந்து பின்வாங்கும் அதற்குப் பின்னர் இன்னொரு முறை முயற்சிக்கலாம் என்ற எண்ணம் இவைகளை மனதில் தோன்றினால் கூட இவற்றில் கண்முன்னே வந்து நிற்பது அம்முயற்சியில் தோன்றிய வலிகள்தான். அவ் வலிகளை மீண்டும் தான் அனுபவிக்க வேண்டுமே என்ற பயத்திலேயே இந்த யானைகள் மீண்டும் அம் முயற்சியே செய்யாமல் இருக்கின்றன என்றான். இவற்றையெல்லாம் கேட்டு ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த பயணி ஒருவேளை தற்போது ஒரு யானை இக் கயிறை அறுத்துக்கொண்டு வெளியேறினாள் என்ன செய்வீர்கள் என கேட்டான். அதற்கு அப் பாகன் நாம் என்ன செய்வது அதனை அதன் வழியிலேயே விட்டு விட வேண்டியதுதான் யானையுடன் போராடி நம்மால் ஜெயிக்க முடியுமா என சிரித்துக்கொண்டே கூறினார். நிச்சயம் இது யானைகளுக்கு மட்டும் உரிய கதை அல்ல இது உங்களுக்கும் எனக்கும் உரிய கதையாகும். இது முழு மனித சமுதாயத்திற்கும் உரிய கதையாகும். இவ்வாறு ஒரு சிறு கயிற்றில் கட்டுண்டு யானையாக நம்மில் எத்தனை பேர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். உன்னால் முடியாது நீ ஒரு பலவீனமானவன் என என்றோ ஒருநாள் நம் தலை மீது திணிக்கப்பட்ட சொற்களை இன்றுவரை நம்பி நம்முள் உறைந்திருக்கும் மாபெரும் சக்தியை மரணம் வரை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். தங்களது துறையில் இங்கு அனைவரும் மேதைகளை ஆனால் துருபாக்கியமாக பலர் தனக்கான வாழ்க்கையை என்னவென்பதை அறியாமல் தங்களது வாழ்நாள் முழுவதையும் ஒரு முட்டாளாக வாழ்ந்து மடிகின்றன என்கின்றார் ஐன்ஸ்டைன். 


இதுவரை காலமும் நீங்கள் உங்களை யாராகவும் எண்ணி இருக்கலாம் உங்களிடம் எந்த திறமைகளும்  இல்லை என்பதை நம்பி இருக்கலாம் ஆனால் இதை முழுக்க முழுக்க உங்களது நம்பிக்கை மட்டுமே அன்றி இதில் எவ்வித உண்மையும் கிடையாது என்பதை இன்று உங்கள் மனதில் பதிய வைத்துக் , ஜாக் மா, உட்பட என்று உலகையே புரட்டிப் போட்ட மாமனிதர்கள் பலர் தங்களது இளமைக்காலத்தை அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு அடி முட்டாளாக கழித்தார்கள். இன்று அவர்கள் தனது காலில் பிணைக்கப்பட்ட தாழ்வு மனப்பான்மை என்ற கயிற்றை அடையாளம் கண்டார்களோ அதை ஒரு இழுவையில் தன்னால் அறுத்து எறிய முடியும் என்பதை உணர்ந்து கொண்டார்களோ அந்த நொடியிலிருந்து அவர்களது முன்னேற்றத்தை எவராலும் தடுத்துவிட முடியவில்லை. இன்று இந்த நொடியில் நாம் உங்களிடம் வேண்டுவதும் இதைத்தான் உங்க மனமெங்கும் நிரம்பியுள்ள தேவையற்ற எண்ணங்களை தூர வீசுங்கள். உங்களது கழுத்தில் வைக்கப்பட்டுள்ள தாழ்வு மனப்பான்மையும் சங்கிலியை உடைத்து எறியுங்கள். இக்கணம் உங்களது மனதில் உள்ள கனவுகளை வெளிக்கொண்டு வந்து கனவுகளை நோக்கி உங்களது முதல் படியை எடுத்து வையுங்கள் இதுவரை நீங்கள் எதைக் கண்டு பயந்து ஒதுங்கிகளோ இனி அவை அனைத்தும் உங்களை கண்டு பயந்து ஒதுங்கி உங்களது பயணத்திற்கு வழிவிடும்.


நன்றி

No comments:

Post a Comment