10 tips Andrea says to escape from Corona infection

Corona தொற்றில் இருந்து தப்பிக்க Andrea கூறும் 10 ஆலோசனைகள்

Andrea

மேலும் படிக்க : 


தமிழ் திரை உலகின் பிரபல நடிகை Andrea கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை வீட்டில் தனிமை ஆக்கிக் கொண்டார். இன்றுடன்  கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டு 14 நாட்கள் முடிந்தது. இதையடுத்து கொரோனா  வைரஸ் இடம் தன்னை தற்காத்துக்கொள்ள ஆண்ட்ரியா 10 ஆலோசனை குறிப்புகள் வழங்கியுள்ளார். 

1. Corona  தோற்று உறுதியானால் பயப்படாதீர்கள் . பயம் என்பது அனைத்தையும் மோசமாக்கி விடும் அதனால் பயம் கொள்ளாதீர்கள் ஒன்றும் ஆகாது. நோய்த்தொற்று குணமாகும் வரை தைரியமாக இருங்கள். 

2. Corona வைரஸ்  தொண்டை வலி, மூக்கு, நுரையீரலை பாதிக்கும். ஆகையால் காற்று போகும் சுவாச பாதையை சுத்தமாக வையுங்கள். ஆவி பிடிப்பது மூச்சு பயிற்சி தொடர்ந்து செய்யுங்கள். 

3. தினமும் சாப்பிடுவதும் குடிப்பதும் மிக முக்கியம். நம்முடைய அன்றாட உணவில் எண்ணற்ற சூப்பர் உணவுகள் உள்ளது. இஞ்சி டீ, மஞ்சள் கலந்த பால் மிளகு ரசம், ஆகியவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜலதோஷத்தை ஏற்படுத்தும் உறவுகளிடம் இருந்து விலகி இருப்பது மிகவும் நல்லது. 

4. உங்கள் வீட்டில் இருக்கும் மரம் அல்லது தோட்டம் அல்லது மாடியில் ஆகிய இடங்களிலிருந்து வரும் சுத்தமான காற்றை சுவாசியுங்கள். 

5. நமது உடலில் எதிர்ப்பு சக்தியைத் தூண்டக் கூடிய துளசி, அஷ்வகந்தா போன்ற இந்திய மூலிகைகளை மருந்தாக தினமும் சாப்பிடுங்கள். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு அருகே இருக்கும் மருத்துவர்களை ஆலோசித்து அதற்கு ஏற்றபடி மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.  

6. டிவியில் வரும் Corona  செய்திகளைக் கேட்டு உங்கள் மனதில் ஏற்றிக் கொள்ளாதீர்கள். அது உங்களது மன அழுத்தத்தையும் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். கொரோனா ஒன்று தம் உடலில் இருப்பதை மறந்து வழக்கம்போல் சந்தோசமாக இருங்கள். 

7. நீங்கள் தனியாக வசிப்பவர்கள் ஆக இருந்தால் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், ஆகியவைகள் இடம் உதவி கேளுங்கள். உங்கள் உடலில் மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

8. உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், உங்களிடம் சுற்றியிருப்பவர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு காய்ச்சல் அல்லது சளி வந்தால் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள். 

9. Corona தோற்று வந்த பிறகு தனிமைப்படுத்தி இருக்கும் போது உங்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது மருத்துவரிடம் சென்று செக் செய்து கொள்ளுங்கள். 

10. Corona வைரஸ்  என்பது உலகளாவிய பிரச்சினை என்பதை நினைவில் கொள்க. அதனால் வெளியே செல்லும்போது கட்டாயம் தனிமனித இடைவெளியும் முககவசம் கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். 

வேறு எந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியும் அவளுக்கு இவ்வளவு துணிச்சலைக் கொடுக்கும் சாதனையை படைக்கவில்லை. ஆண்ட்ரியா அங்கு பாராட்டப்பட வேண்டும். 

Corona தொற்றை சமாளிக்க Andrea கூறும் 10 ஆலோசனைகள் ஆகும். இவை அனைத்தையும் தவறாது கடைப் பிடியுங்கள். கொரோனாவில் இருந்து தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளுங்கள்.


மேலும் படிக்க :







முடிந்தவரை பகிரவும்


நன்றி

No comments:

Post a Comment