கழுதைப்புலியிடம் கற்றுக்கொள் - Self Motivational Stories in Tamil

கழுதைப்புலியிடம் கற்றுக்கொள் - Hyena positive energy story in tamil

positive energy story in tamil

Self Motivational Stories in Tamil


ஆபிரிக்க காடுகளில் தலைசிறந்த வேட்டைக்காரன் ஒரு சிம்பன்சி யை விட அதிக புத்திக் கூர்மை கொண்ட விலங்கு. தன் எதிரி எத்தனை பல மாணவனாக இருந்தாலும் அவனோடு தைரியமாக போராடும் விலங்கு. அந்த விலங்கு எது தெரியுமா நிச்சயம் அது காட்டின் அரசனான சிங்கமோ அல்லது பலமிக்க யானையோ அல்ல. அது நயவஞ்சகத்திர்க்கும்  சோம்பேறித்தனத்திர்க்கும் பெயர்போன கழுதை புலியாகும். இவ்வுலகில் மிக அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விலங்கு இக் கழுதைப்புலி ஆகும்.


பொதுவாக அவை சோம்பேறிகளாகவும் சிங்கத்தின் உணவை திருடித் தின்பவையாகவே காட்டப்படுகின்றன. ஆனால் உண்மை யாதெனில் இக் கழுதை புலியை ஆப்பிரிக்க காட்டில் அதிகத் வேட்டை திறன் கொண்ட விலங்கு ஆகும். இவை தங்களது உணவுகளில் 95 சதவிகிதத்தை வேட்டையாடிய உண்பவை. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக் கூடியவை. அவை தனியாக நின்று ஒரு காட்டெருமையை வேட்டையாடக் கூடியவை. ஒரு கடியில் ஓர் ஒட்டகச் சிவிங்கியின் முள்ளந்தண்டையே துண்டாக்க கூடியவை. ஓர் கொல்லப்பட்ட விலங்குகளாக சிங்கங்களும் கழுதை புலிகளும் சண்டையிட்டுக் கொள்ளும் ஆனால். பெரும்பாலான நேரத்தில் அந்த விலங்கை கொன்றது கழுதைப்புலிகள் ஆகவே இருக்கும். கழுதைப்புலிகள் மிகமிக நுண்ணறிவு வாய்ந்தவை. 


அவை மனிதனைப் போன்ற சிந்தனை முறை கொண்டவை. அதன் விளைவாகவே காட்டு எருதுகள் போன்ற தன்னை விட பன்மடங்கு பலம்மிக்க விலங்குகளைக் கூட திட்டமிட்டு வீழ்துகின்றன. பொதுவாக கழுதைப்புலிகள் மிகப் பெரும் எதிர்ப்பு சக்தி கொண்டவை. அவற்றின் ஆயுட்காலம் 12 வருடங்களாக இருந்த போதிலும் அவை 25 வருடங்கள் வரை ஆரோக்கியமாக வாழ கூடியவை. பிற மிருகங்களை போல் அல்லாது அதிக அன்புள்ளம் கொண்டவை. பண்டைய காலத்தில் கழுதை புலிகளை தீய சக்தியின் அடையாளமாக பார்த்தார்கள். சாத்தானின் தூதுவர்களாக பார்த்தார்கள். இன்று நாம் அவற்றை அருவருப்பான முட்டாள் விலங்காக காண்கின்றோம். இதற்கெல்லாம் ஒரே காரணம் அவற்றின் தனித்துவம் மிக்க உருவமும் தனித்துவம் மிக்க செயற்பாடுகளுமே. 


அதன் விளைவாகவே இக் கழுதை இங்குள்ள பல மனிதர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே அவர்கள் அவற்றை பலவிதமான உயிரினங்கள் என மட்டம் தட்டுகிறார்கள். தீய குணம் கொண்டவை என ஒதுக்கி வைக்கிறார்கள். இதுபோன்ற ஒதுக்கப்பட்ட பல மனிதர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அவர்கள் அதற்கான ஒரே காரணம் அவர்களது தனித்துவ இயல்புகள் ஆகவே இருக்கும். அத் தனித்துவ இயல்புகளை இவ்வுலகம் குறையாக காண்கின்றது. ஆனால் உண்மையிலேயே அது ஒரு மிகப் பெரும் வரமாகும். அந்த வரம் அவ்வளவு எளிதில் பலருக்கு கிட்டுவதில்லை. பிற விலங்குகள் புறக்கணிப்பதால் என்றும் கழுதைப்புலிகள் தங்களை மாற்றிக் கொண்டதில்லை. அதன் காரணமாகவே அவை இன்றுவரை ஆப்பிரிக்க காட்டின் தலை சிறந்த வேட்டைக்காரர்கள் ஆக வலம் வருகின்றன. காட்டின் அரசனான சிங்கத்தையே ஆட்டி வைக்கின்றன. அது போன்றதொரு நம்பிக்கையும் உறுதியும் உங்களிடம் இருக்கவேண்டும் நிச்சயம் அந்த உறுதியினால் மட்டுமே உங்களை வீழ்த்தவே முடியாத ஒரு வெற்றியாளனாக மாற்ற முடியும்.


மேலும் படிக்க :


இரத்தத்தின் அளவை அதிகரிக்க இதை கிளிக் செய்து பார்க்கவும்



முடிந்தவரை பகிரவும்



நன்றி

No comments:

Post a Comment