தன்னம்பிக்கை கதைகள் | Self Motivational Stories in Tamil

தன்னம்பிக்கை கதைகள் | Self Motivational Stories in Tamil
தன்னம்பிக்கை கதைகள் | Self Motivational Stories in Tamil


ஒரு அழகிய கடற்பரப்பில் ஒரு மீன் வசித்து வந்தது தன் மனதில் எவ்விதத் சுமையும் இன்றி அது தினமும் அக்கடல் முழுவதும் சுற்றித் திரிந்து அதன் அழகை ரசித்து வந்தது. இப்படி ஒரு நாள் அம்மீன் வழமைபோல அக் கடற் பகுதியை சுற்றி வந்து அதன் கரையை அடைந்தது. அப்போது அங்கிருந்த ஒரு மரத்தில் சில குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவை அம்மரத்தில் ஏறுவதையும் இறங்குவதையும் பழங்களைப் பறித்து ஒன்றன் மீது ஒன்று வீசுவதையும் அவதானித்து அம் மீனோ தன்னை மறந்து அதை ரசித்துக் கொண்டிருந்தது. இம் மீனை அவதானித்த அங்கிருந்த குரங்குகளில் ஒன்று இதன் அருகே வந்து ஏன் எங்களை இவ்வாறு வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றாய் என வினவியது. அதற்கு இம் மீனோ நான் பல வருடங்களாக இக்கடலில் வசிக்கின்றேன் இருந்தும் இக் கடற்பரப்பிலிருந்து என்னால் நிலத்திற்கு வர முடிந்ததில்லை இன்று நீங்கள் மரத்தில் ஏறி இறங்கி விளையாடுவதை பார்த்ததும் இந்த அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணியே உங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் என்றது. இதைக் கேட்ட அக் குரங்கு பெருமிதத்துடன் நிலத்தில் வசிக்கும் அனுபவத்தை வாயினால் கூறி உணர்த்த முடியாது. நாங்கள் குரங்குகள் எங்களால் வேகமாக மரத்தில் ஏறி இறங்க முடியும். மரம் விட்டு மரம் தாவ முடியும். அதனால் எங்கள் வாழ்க்கையை நாங்கள் மகிழ்ச்சியோடு கழிக்கின்றோம் ஆனால் நீங்களோ மீன்கள் உங்களால் இந்து உப்பு இதைத் தாண்டி எங்கும் செல்லமுடியாது, மரம் ஏற முடியாது, சுவையான பழங்களை சுவைக்க முடியாது, இப்படியானதொரு வாழ்க்கையை வாழ்வதற்கு நீங்கள் பிறக்காமலேயே இருந்திருக்கலாம் எனக் கிண்டல் அடித்தது. அதைக் கேட்ட அம் மீனோ எதுவுமே கூறாமல் சோகத்துடன் தன் இருப்பிடத்திற்கு திரும்பியது. அதன்பின்னர் அம்மீன் தனது வழமையான கடல் பயணத்தையும் நண்பர்களை சந்திப்பதையும் நிறுத்திக் கொண்டு தன் கூட்டின் உள்ளே அடைபட்டுக் கிடந்தது. சில நாட்களாகவே தன் நண்பனை காணாத அங்கு வசித்து வந்த ஒரு கடல் ஆமை இம் மீனைத் தேடி அதன் கூட்டிற்கே வந்தது. அங்கு சோகமாக நின்று கொண்டிருந்த இன் மீனை பார்த்து நண்பா உனக்கு என்ன நடந்தது ஏன் சில நாட்களாகவே நீ என்னை சந்திக்க வரவில்லை எனக் கேட்டது. அதற்கு இம் மீனோ நான் ஒரு முட்டாள் கையாலாகாதவன் நான் பிறந்ததே ஒரு சாபக்கேடு தான் என புலம்ப ஆரம்பித்தது. அங்கு எதுவுமே புரியாது ஆமையோ ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் புலம்புகின்றாய் உனக்கு என்னதான் நடந்தது என வினவியது. அதற்கு அம் மீனோ அன்று குரங்குடன் நடந்த சம்பவத்தை தன் நண்பரிடம் கூறி இப்போது நீ கூறு நான் மீனாக பிறந்ததே ஒரு சாபம் தானே என கேட்டது. ஒரு நிமிடம் தனது நண்பனை எண்ணி மளைத்துப்போன அந்த ஆமை அம் மீனின் கேள்விக்கு பதில் கூற ஆரம்பித்தது. நண்பா நீ பிறப்பதற்கு முன்பிருந்தே பல வருடங்களாக நான் இங்கு வசித்து வருகின்றேன். இக் கடல் முழுவதும் நான் பயணித்துள்ளேன். அதேபோல இதற்கு வெளியே உள்ள நிலத்தையும் நான் பார்த்துள்ளேன். நிச்சயம் நம் கடலில் இருக்கும் அழகு அந்நிலத்தில் கிடையாது. இங்கிருக்கும் அழகிய பவளப்பாறைகள் போல் அங்கு இருக்கும் மலைகள் மின்னுவதில்லை இங்கிருக்கும் வினோத உயிரினங்களுக்கு நிகராக அங்கு எந்த உயிரினமும் இல்லை. இவ்வாறு அந்த நிலத்தை விட பலமடங்கு அழகான கடலில் உள்ளேயே நாம் வசித்து வருகின்றோம். உன்னால் எவ்வாறு அவ் நிலத்தினுள் சென்று அங்குள்ள மரத்தில் ஏற முடியாதோ அதே போல அம் மரத்திலுள்ள குரங்குகளினால் இக் கடலினுள் நுழைந்து இங்கிருக்கும் அழகை ரசிக்க முடியாது. இவ்வுலகில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தனித்துவமான பலம் பலவீனம் என்ற இரண்டுமே இருக்கும். இன்று உன்னால் செய்ய முடிந்த சில காரியங்களை நிச்சயம் என்னால் செய்ய முடியாது. அதே போல என்னால் செய்ய முடிந்த சில காரியங்களை நிச்சயம் உன்னால் செய்ய முடியாது. இதுவே உலகின் நியதி ஆகும். இதை எவராலும் மாற்றிவிட முடியாது. எனவே உன்னிடம் ஒன்று இல்லையெனில் அதை எண்ணி தினமும் வருந்துவதை நிறுத்தி விட்டு இன்று கடவுள் உனக்கு அளித்திருக்கும் வரங்களை எண்ணிப்பார். உனது தனித்துவத்தை எண்ணிப்பார் அத்தனித்துவத்தை கொண்டு உனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வாழ்வது எவ்வாறு என்பதை கண்டறி. வாழ்வின் எத்தருணத்திலும் நீ நீயாக இருந்தால் மட்டும் போதுமானது என்பதை மனதில் வைத்துக் கொள். நிச்சயம் உன் வாழ்வில் ஒரு நாளைக்கூட சோகத்தில் கழிக்க மாட்டாய் என கூறியது கடல் ஆமை.

No comments:

Post a Comment