தண்ணீரை போல் இருங்கள் | தன்னம்பிக்கை கவிதைகள் - Self Motivation Quotes in Tamil

Self Motivation Quotes in Tamil
Thannambikkai Quotes



  • சில இடத்தில் வெற்றி பெறவேண்டுமென்றால்...


  • முட்டாளாய் போலவும். ஆனால், அறிவோடும் இருக்க வேண்டும்.


  • உடல் காயத்திற்கு மருந்திடுங்கள்,


  • மன காயத்திற்கு சிலவற்றை மறந்திடுங்கள்.


  • தெரியாமல் கூட உங்கள் பலவீனத்தை வெளியே சொல்லாதீர்கள்.


  • அதைவைத்து எள்ளி நகையாட, பலர் காத்திருப்பார்கள்.


  • உன்னை தாண்டி உன் மனதை காயப்படுத்த, ஒருவனுக்கு துணிச்சல் இருக்கும் போது...


  • அதையும் தாண்டி உன் மனதை சந்தோஷப்படுத்த...


  • உன்னிடம் தைரியம் இருக்க வேண்டும்.


  • தண்ணீரை போல் இருங்கள்!


  • அதனால் ஒதுங்கி செல்லவும் முடியும்,


  • உடைத்தெறியவும் முடியும்.


  • நம்மிடம் பணம் இருந்தால், நீங்களா? என்று கேட்ப்பவர்கள்.


  • பணம் இல்லையென்றால் நீயா? என்று கேட்பார்கள்.


  • புரிந்து நடந்துகொள்ளுங்கள்.


  • கடுமையான கஞ்சத்தனம்,


  • தகுதியற்ற தற்பெருமை,


  • எல்லையற்ற பேராசை.


  • இந்த குணம் கொண்டவர்களை உங்கள் வாழ்வில் இருந்து விலக்குங்கள்.


  • அவர்களாலும் வாழ முடியாது,


  • அவர்களோடும் வாழ முடியாது.


  • தவறுகளை சுட்டிக்காட்டும் உறவுகளை, அருகில் வையுங்கள்.


  • தவறுகளை குத்திக்காட்டும் உறவுகளை, தூர வையுங்கள்.


  • வாழ்க்கை நிச்சயம் மாறும்!






No comments:

Post a Comment