Birth of Krishna ( கிருஷ்ணரின் பிறப்பு ) - Lord Krishna Stories In Tamil

Lord Krishna Stories In Tamil
Lord Krishna Stories In Tamil

Birth of Krishna ( கிருஷ்ணரின் பிறப்பு ) - Lord Krishna Stories In Tamil


முன்னொரு காலத்தில் உக்கிரசேனன் என்ற மன்னன் வசித்து வந்தான். கம்சன் என்ற பெயருடைய அவனது மகன் இளவரசனாக மதுராவை ஆண்டுவந்தான். கம்சன் எவர் மீதும் கொஞ்சம் கூட கருணை காட்டாத கொடூரமானவனாய் விளங்கினான். மதுரா நகர மக்கள் எல்லோரும் அவனது கொடூர குணத்திற்கு அஞ்சு வாழ்ந்து வந்தனர். ஆயினும் கம்சன் தேவகி என்னும் தனது ஒன்றுவிட்ட சகோதரியை அன்போடு நேசித்தான் அவள் பணிவும் பக்தியும் உள்ள நல்ல பெண்ணாவாள். தேவகியின் திருமணம் வசுதேவன் என்ற பெயர் கொண்ட நல்லவர்யிடம் நிச்சயமானது. திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் முடிந்து தேவகியும் வசுதேவரும் தேரில் புறப்பட்டனர். சகோதரியை மிகவும் நேசித்த கம்சன் தானே இருவருக்கும் பாதுகாப்பாக தேரை ஓட்டியபடி சென்றான். அவர்கள் செல்லும் வழியில் திடீரென்று வானத்திலிருந்து பெரும் குரல் ஒன்று அசுறீதியாக கேட்டது.


கொடூர கம்சனே எதற்காக ஆனந்த படுகிறாய் ? நீ மிகவும் நேசிக்கும் தேவகியின் மகன் உன்னை கொல்லப் போவது நிச்சயம் அவளது எட்டாவது குழந்தை உன்னை நிச்சயம் கொன்றே தீரும். இதைக் கேட்டவுடன் கம்சன் கொதித்தெழுந்தான் இவளது எட்டாவது குழந்தை பிறக்கும் முன்னரே இவளை கொள்வேன். நீ என்ன செய்யப் போகிறாய் என்று உணர்ந்தாயா கம்சா உன் சகோதரியின் திருமண நாள் அன்றே அவளைக் கொள்வது நீதியா ? நீ அவளை விட்டு விட்டாள் நாங்கள் எங்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளையும் உன்னிடமே தந்து விடுகின்றோம் தயவுசெய்து எங்களை நம்பு கம்சா. நான் தேவகியை விட்டுவிடுகிறேன் ஆனால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன். பின்னர் அவன் திருமண ஊர்வலத்தை மதுராவை நோக்கி திரும்பி செல்லுமாறு ஆணையிட்டான் மதுராவை சென்றடைந்த உடனேயே தேவகி வசுதேவர் இருவரையும் சிறையில் அடைத்தான். ஒருநாள் கம்சன் அரசவையில் இருந்தபோது தேவகி தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த செய்தி அவனை எட்டியது உடனே கம்சன் சிறை சாலைக்கு விரைந்து சென்றான்.


தேவகி அந்தக் குழந்தையை கொடு கம்சன் தேவகி இடமிருந்து குழந்தையை பறித்து அதன் இரண்டு கால்களையும் ஒன்றாக பிடித்து தரையில் ஓங்கி அடித்தான் அடுத்த கணத்திலேயே குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. இதற்கு பிறகு பிறந்த ஐந்து குழந்தைகளையும் கம்சன் இதுபோலவே அடித்துக் கொன்று விட்டான். இதன்பிறகு தேவகி ஏழாவது முறையாக கர்ப்பம் தரித்தால். அவளது ஏழாவது குழந்தை மாயமான முறையில் கோகுலத்தில் வசித்துவந்த வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகினி என்பவளின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டது. பின்னாளில் இக்குழந்தை பலராமன் என்று அழைக்கப்பட்டான்.


தேவகியின் ஏழாவது குழந்தை இறந்து பிறந்து இருக்கிறது என்று கம்சனிடம் வந்து காவலாளி கூறினான். இதைக்கேட்டதும் கம்பன் பயங்கரமாக ஆனந்தம் கொண்டான். ஆவணி மாதம் எட்டாம் நாளன்று பெரும் புயல் காற்று மதுரா நகரை சூழ்ந்து வீசியது. பெரும் கருமேகக் கூட்டங்கள் இடையே மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. தேவகி எட்டாவது முறையாக கர்ப்பம் தரித்தால். திடீரென மகாவிஷ்ணு அவர்கள் முன் தோன்றி தேவகி வசுதேவரே உங்களது விருப்பத்தை நிறைவேற்ற உங்கள் இருவருக்கும் மகனாக பிறக்கப் போகிறேன். வசுதேவரே நீங்கள் உடனே இந்த குழந்தையை கோகுலத்தில் நந்தன் இல்லத்தில் வைத்துவிட்டு அங்கிருக்கும் குழந்தையை இங்கே மாற்றி வையுங்கள் இவ்வாறு கூறிவிட்டு மகாவிஷ்ணு மறைந்துவிட்டார். அன்று நள்ளிரவில் தேவகி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். என்ன அற்புதம் என் கை விலங்குகள் தானாகவே கழன்று விட்டதே தேவகி குழந்தையை சீக்கிரம் கொடு நான் உடனே கோகுலத்தில் இருக்கும் நந்தன் இல்லத்தில் எடுத்துச் செல்கிறேன். வசுதேவர் புறப்பட தயாரான போது சிறைக் கதவுகள் தானாக திறந்து கொண்டது. சிறைக்காவலர்கள் மயங்கி விழுந்தார்கள். பத்திரமாக குழந்தையை ஒரு கூடையில் வைத்து கவனமுடன் தலையில் சுமந்து சென்றார் வசுதேவர். கோகுலத்தை நோக்கி அவர் நடந்தபோது அவரை ஆதிசேஷன் பின்தொடர்ந்தான். வைகுண்டத்தில் அவன் தானே விஷ்ணுவின் படுக்கை. வசுதேவரின் தலையிலிருந்த கூடையின் மேல் தனது படுக்கை இருக்கும்படி தொடர்ந்து வந்தான். யமுனா நதியின் கரையை அடைந்தார் வசுதேவர் அவரை ஆச்சரியப்படும் படியாக நதி இரண்டு பகுதிகளாகப் பிரிந்து அவருக்கு வழிவிட்டது. வசுதேவர் கோகுலத்தை அடைந்தபோது நந்தனின் மனைவி யசோதை ஒரு பெண் குழந்தையைப் பெற்று இருந்தாள். வசுதேவர் கிருஷ்ணனை அங்கு தொட்டியில் கிடைத்திவிட்டு அருகில் இருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டார். அந்தப் பெண் குழந்தையுடன் வசுதேவர் சிறை சாலைக்கு திரும்பி சென்றார். அவர் பெண் குழந்தையுடன் சிறைக்கு வந்ததும் சிறைக் கதவுகள் தானாக பூட்டிக் கொண்டன காவலர்கள் எழுந்து கொண்டன. குழந்தையின் அழுகுரல் அவர்களது காதுகளுக்கு எட்டியது. சிசுவின் அழுகையை கேட்டதும் அரசனுக்கு செய்தியை அறிவித்தனர் காவலர்கள். தேவகி குழந்தையைக் கொடு கம்சா உலகமே நடுங்கும்படியான போர்வீரன் நீ உன்னை எப்படி இந்த சிறு பெண் குழந்தை கொள்ளும். வசுதேவரின் வேண்டுகோளை கம்சன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. ஆனால் இந்த சிறு பெண் குழந்தை கம்சனின் கைகளில் இருந்து நழுவி காற்றில் பறந்து சென்று அது துர்கா தேவியின் வடிவம் எடுத்துக்கொண்டது.


துர்க்காதேவி அவன் முன் தோன்றி சூர மனம் கொண்ட கம்சனே உனது பலத்தை எல்லாம் இதுபோன்று குழந்தையை கொள்வதில் காட்டுகிறாயே தேவகியின் மகன் உன்னை கொள்பவன் இப்போது கோகுலத்தில் மிகவும் பாதுகாப்பாக உள்ளான். தக்க நேரத்தில் அவன் உன்னை தேடிக் கொள்வது உறுதி. உன்னுடைய பாவங்களுக்கு உரிய தண்டனையை அடைந்தே தீருவாய். இவ்வாறு கூறிவிட்டு துர்கா தேவி மறைந்தார். திகைத்துப்போன கம்சன் பயத்துடனேயே வாழ்வை தொடர்ந்தான். வசுதேவரும் தேவகியும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

No comments:

Post a Comment