உன் மனம் பலவீனமானது என்பதற்கான 5 அறிகுறிகள் - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil

உன் மனம் பலவீனமானது என்பதற்கான 5 அறிகுறிகள் - Positive Energy Story in Tamil


Click Here :

சகுனி போல யோசி இல்லையென்றால் வாழவிடமாட்டார்கள்


வணக்கம் நண்பா ஒரு ஓட்டைப் பாத்திரத்தில் நீங்கள் என்னதான் தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருந்தாலும் எக்காலத்திலும் அப்பாத்திரம் நிரம்பப் போவதில்லை. அதுபோல ஒரு பலவீனமான மனதிற்கு நீங்கள் என்னதான் மலை மலையாக அறிவை கொட்டிக் கொடுத்தாலும் அம் மனதினால் என்றும் வெற்றியடைய முடியாது. அம் மனதிற்கு நீங்கள் கொடுக்கும் அறிவும் தெளிவும் யுக்திகளும் வெறுமனே ஓட்டைப் பாத்திரத்தில் ஊறியநீர் ஆக வீணாய் போய்விடும். வாழ்வில் நீங்கள் வெற்றியடைய விரும்பினால் உங்களுக்கு உறுதியான மனம் தேவை. அதுவே அஸ்திவாரமாகவும். அந்த அஸ்திவாரம் உறுதி இல்லை எனில் அதன் மீது நீங்கள் கட்டும் எத்தனை பெரிய சாம்ராஜ்யமும் கணப்பொழுதில் நொறுங்கிவிடும். அது சரி என் மனம் உண்மையிலேயே உறுதியானதா இல்லையா என்பதை நான் எவ்வாறு கண்டறிவது என்ற கேள்வியை உங்களிடம் இருந்தால் நாம் இங்கு கூறப்போகும் 5 அடையாளங்களை நுணுக்கமாக கவனியுங்கள். இவற்றில் எத்தனை அறிகுறிகள் உங்களிடம் உள்ளதோ அந்த அளவிற்கு உங்களது மனம் பலவீனமானது என்பது பொருள்.



1. முதலாவது இலகுவா பொறுமை இழப்பது :


பலவீனமான மனம் கொண்டவர்கள் இலகுவாக பொறுமை இழப்பார்கள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள் எரிச்சல் அடைவார்கள். அதிகமாக புலம்பிக்கொண்டே இருப்பார்கள். உறுதியற்ற அவர்களது மனம் எப்போதும் தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளினால் இலகுவாக பாதிக்கப்பட்டுவிடும். அந்த பாதிப்பின் விளைவே அவர்களிடம் கோபமாகவும் எரிச்சலாகவும் புலம்பலாகவும் வெளிப்படுகின்றது. அக் கோபத்தையும் எரிச்சலையும் அவர்கள் தங்களது பலவீனத்தை மறைக்கும் கருவியாக பயன்படுத்துகின்றார்கள். நீங்கள் அடிக்கடி பொறுமையிழந்து கோபமும் எரிச்சலும் புலம்பலும் உங்களிடம் அடிக்கடி தோன்றினால் உறுதியற்ற ஒரு பலவீனமான நிலையிலேயே உங்களது மனம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


2. இரண்டாவது எதார்த்தத்தை விட்டு விலக நினைப்பது :


நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள உலகுடன் இணைய விரும்பாவிட்டால் அல்லது அவ்வாறு இணையும் போது வெறுமனே மன உளைச்சல்களையும் அசௌகரியங்களையும் எதிர் கொண்டால். நீங்கள் எண்ணும் அளவிற்கு உங்களது மனம் உறுதி ஆனது அல்ல என்பதே பொருளாகும். நிச்சயம் இவ் உலகம் முழுக்க முழுக்க உங்களது விருப்பம் போலவே இருந்து விடாது. இதில் பல்வேறு பட்ட மனிதர்கள் உள்ளார்கள் அவர்களிடம் பல்வேறுபட்ட மனங்கள் இருக்கும் அம் மனிதர்களை அனுசரித்து அவர்களோடு மகிழ்ச்சியாக வாழ பழகுவதே எதார்த்தமாகவும். அதை விட்டுவிட்டு இந்த உலகம் சரியில்லையே இங்கிருக்கும் மனிதர்கள் சரியில்லை. அதனால் நான் இவர்களை விட்டு விலகியே தனிமையிலேயே என் கற்பனைகளோடு வாழப் போகின்றேன் என நீங்கள் எண்ணினால் முழுக்க முழுக்க அது உங்களது பலவீனமே அன்றி உங்கள் தனித்துவம் அல்ல.



3. மூன்றாவது எதற்கெடுத்தாலும் பதற்றம் தோன்றும் :


உங்களது மனம் பலவீனமானது என்பதற்கான மிகத் தெளிவான அடையாளம் இந்த பதட்டம் ஆகும். அடுத்தவர் முன் நம்மை சிறந்தவனாக காட்ட வேண்டும். நாம் மிகச் சரியான கச்சிதமான ஒரு மனிதனாக தெரிய வேண்டும். என்ற எண்ணமே ஒருவனது மனதினுள் பதற்றத்தை தோற்றுவிக்கின்றது. ஆனால் உண்மை யாதெனில் நான் ஒரு பலவீனமான எதற்கும் சக்தி அற்றவன் என்ற தாழ்வு மனப்பான்மை கொண்ட மனிதர்கள் மட்டுமே அடுத்தவர்கள் முன்னால் தன்னை பலமாணவனாக காட்ட முனைவார்கள். தனது திறமைகளையும் சக்திகளையும் காட்ட முனைவார்கள். ஆனால் அதன் முடிவில் அவர்கள் வெளிகாட்டுவதோ வரும் பதற்றம் மட்டுமே. பதற்றம் என்பது உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதற்கான தெளிவான அறிகுறியாகும். உங்கள் மனம் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்டு உறுதி இழந்து தவிக்கின்றது என்பதற்கான அறிகுறியாகும்.



4. நான்காவது தூக்கம் தாமதித்தல் :


நீங்கள் தூங்க சென்றும் எளிதாக தூக்கம் வரவில்லை எனில் உங்களது மனம் எங்கும் தேவையற்ற குழப்பங்கள் நிறைந்துள்ளன என்பதே பொருளாகும். தன்னைச் சுற்றியுள்ள அழுத்தங்களை சமாளிக்க முடியாத மனிதர்கள் இடமே தூக்கமின்மை அதிகமாக இருக்கும். அவர்களது மனம் ஒரு சிறிய பிரச்சனையைக் கூட மிகப் பெரும் சுமையாக என்னும். நாள் முழுக்க பிரச்சினையை எண்ணியே குழம்பிக் கொண்டிருக்கும். அம் மனக் குழப்பம் அவர்களது நிம்மதியையும் தூக்கத்தையும் ஒருசேர பறித்துவிடும். இப்படியான ஒரு மனநிலை உங்களிடம் இருந்தால். உங்கள் மனம் பிரச்சனைகளை சமாளிக்க திண்டாடி கொண்டிருந்தாள். நாள் முழுக்க அதை எண்ணி எண்ணியே உங்களது தூக்கமும் நிம்மதியும் பறிபோகிகொண்டிருந்தாள். உங்கள் மனம் மிக மிக பலவீனமாக உள்ளது என்பதே பொருளாகும்.



5. ஐந்தாவது தனிமையில் அழுதல் :


சில மனிதர்கள் உள்ளார்கள் அவர்கள் வெளித்தோற்றத்திற்கு மகிழ்ச்சியாகவே தெரிவார்கள். மன உறுதி கொண்டவர்கள் தெரிவார்கள். ஆனால் அவர்கள் தனிமையில் அதிகம் வருந்துபவர்கள் ஆகவும் சில நாட்களில் அழுபவர்களாகவும் இருப்பார்கள். அப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையையும் அதில் தோன்றிய ஏமாற்றங்களையும் எண்ணி தனிமையில் அதிகம் வருந்துபவராகவும் அழுபவராகவும் இருந்தால். உங்கள் மனம் இறந்த கால நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்டு மிக மிக பலவீனமான நிலையில் உள்ளது என்பதே பொருள்.



இந்த ஐந்தாவது அறிகுறி இதற்கு முன்னரே நாம் பார்த்த நான்கையும் விட உக்கிரமானது. தனிமையில் அழுவது மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் வெளிப்படும் ஒரு அறிகுறியாகும். இது உங்களிடம் இருந்தால் உங்கள் மனதில் பல ஆறாத வடுக்கள் உள்ளன என்பதே பொருளாகும்.



நண்பா நாம் மேலே கூறிய ஐந்து அறிகுறிகளும் உங்களது மனம் ஒரு பலவீனமான நிலையில் உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் ஆகும். இந்த அறிகுறிகள் எத்தனை மோசமாக உங்களிடம் இருந்தாலும் அவற்றை மாற்றி தன்னம்பிக்கை உடைய மனிதராக உங்களால் மாறிவிட முடியும். என்று நம்பிக்கையையும் மன உறுதியையும் கைவிட்டு விடாதீர்கள் அவையே உங்களுக்கான ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஆதாரங்களாகும்.


நன்றி

No comments:

Post a Comment