சகுனி போல யோசி இல்லையென்றால் வாழவிடமாட்டார்கள் - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil


சகுனி போல யோசி இல்லையென்றால் வாழவிடமாட்டார்கள் - Positive Energy Story in Tamil


நீ செல்லும் பாதையில்
பலம் கொண்டு போராடினால்
காலப்போக்கில் உன் பலத்தை
 இழப்பாய் ! 

எனவே புத்தி கொண்டு
போரிடு !

அடுத்தவர்கள் என்ன 
நினைப்பார்கள் என்று எண்ணி
 தயங்காதே. 

இங்கே இருப்பவனும், உன்னை
 விமர்சிக்க நினைப்பவனும்
 உனக்கானவன் அல்ல.

சில சந்தேகத்திற்கு
 உன் மனதில் இடம் கொடு. 

ஆனால் அந்த சந்தேகம்
உன்னை அழித்து விடாமல்
பார்த்துக்கொள் ! 

நீ உறங்கினாலும்
ஒரு கண் விழித்திருக்கட்டும் ! 

உன் முகம் சிரித்தாலும்,
 மனம் சிந்தித்துக் கொண்டே
 இருக்கட்டும். 

போனதை எண்ணி வருந்தாதே
அது உன்னை பலவீனமாகும். 

இருக்கும் நேரத்தைக் கொண்டு
இழந்ததை விட பல மடங்கு
திரும்ப அடைவது,
எப்படி என்பதை சிந்தி ! 

அது வெறும் சிந்தனையாக
 மட்டும் இருந்துவிடாமல்
 பார்த்துக்கொள். 

அச்சம், அறியாமை
இருக்கும் போராளி... 
சிறந்த போராளிகான
தகுதியே இழப்பான். 

நீ அடைந்த அவமானங்களை
உன் அடையாளங்களாக மாற்று.

 யாரையும் வெறுக்கவோ
விமர்சிக்கவோ உனக்கு
நேரமில்லை.

உயர்வான இடத்தில் நீ
 இருந்தால் சிலருக்கு உன்னை
 பிடிக்காமல் போகும்.

எல்லாருக்கும் உன்னை பிடிக்க
 வேண்டும் என்றால்...
நீ கோமாளியாக தான்
இருக்க வேண்டும்.

உன் வாழ்வில் நீ பட்ட சில
 காயங்களுக்கு மருந்திடாதே !
மருந்திட்டால்
மறந்துவிடுவாய்.

வாங்கியது எதுவாயினும்
 அதை பலமடங்கு
 திருப்பிக் கொடு.

எதிலும் மிச்சம் வைக்காதே,
யாரையும் மிஞ்ச வைக்காதே !


No comments:

Post a Comment