Increase Brain Power - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil

Increase Brain Power - Positive Energy Story in Tamil 


வணக்கம் நண்பா இவ்வுலகில் உள்ள அனைவருமே கடினமாக உழைக்கிறார்கள் காலநேரம் பாராமல் போராடுகின்றார்கள். இருந்தும் அவர்களில் மிகச் சிலர் மட்டுமே காலப்போக்கில் அப் போராட்டங்களில் இருந்து விலகி வாழ்வில் உயர்ந்து நிற்கின்றார்கள். அது ஏன் என நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா ? ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணி நேரங்கள் கிடைத்தால் அதில் முதல் 4 மணி நேரங்களையும் என் கோடாரியை கூர்மையாக்குவதிலேயே செலவிடுவேன் எனக்கூறினார் ஆபிரகாம் லிங்கன். இதுவே வெற்றியாளர்களின் பண்பாகும். இதனையே நாம் Smart Work எனக் கூறுகின்றோம். ஆனால் பெரும்பாலான மக்களின் இந்த சாதுரியத்தை அறிவது இல்லை. அவர்கள் தங்களது வேலையில் ஒரு புதிய யுக்தியை பயன்படுத்தி முன்னேற எண்ணுவதில்லை. அது ஏன் தெரியுமா அவர்களது மூளை சாதுரியமாக சிந்திக்க பயிற்றுவிக்க படவில்லை. அதனால் அது புதிய யுக்திகளை சிந்திக்க முடியாமல் புதிய வழிகளை கண்டறிய முடியாமல் திண்டாடுகின்றது. நிச்சயம் இதில் எந்த தவறும் இல்லை. ஆனால் எனது வாழ்வில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்க வேண்டும். அதில் நான் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைக்க வேண்டும். என நீங்கள் எண்ணினால் இது உங்களது மூளையை புதுப்பிக்க வேண்டிய நேரம் அதன் சக்தியை அதிகரிக்க வேண்டிய நேரம் அது எவ்வாறு என்பதையே நாம் இனி காணவிருக்கிறோம்.


1. முதலாவது தூக்கம் :


நமது மூளையும் ஓர் இயந்திரம் போன்றதே. அது ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தால் அது செயல் திறன் வெகுவாக குறைந்துவிடும். எனவே தேவையான நேரத்தில் அதற்கான ஓய்வை நாம் தூக்கத்தின் மூலம் வழங்க வேண்டும். பொதுவாக ஏழு மணி நேரத்திலிருந்து இருந்து ஒன்பது மணி நேரம் வரை நீங்கள் தூங்க வேண்டும். அதற்கு குறைவாகவும் கூடாது அதிகமாகவும் கூடாது. அதேபோல தேவையேற்படின் பகல் நேரத்தில் 20 நிமிடங்களில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை தூங்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் ஒன்றரை மணி நேரத்திற்கு அதிகமாக பகல் நேரங்களில் தூங்காதீர்கள். தூக்கம் உங்களது மூளையின் ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமானது. எனவே அது தேவையான அளவு உங்களுக்கு கிடைக்கின்றதா என்பதை அடிக்கடி உறுதி செய்து கொள்ளுங்கள்.


2. இரண்டாவது புதியதை கற்றுக்கொள்ளல் :


புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் போது உங்களது மூளையில் உண்மையான முன்னேற்றம் தோன்றுகின்றது. உங்களுக்கு பழக்கமான செயல் அது எத்தனை கடினமானதாக இருந்தாலும் அதை வேறு எவராலும் செய்ய முடியாவிட்டாலும் நீங்கள் செய்து பழகிய செயலை தொடர்ந்து செய்தால் உங்களது மூளையின் திறனிலும் சக்தியிலும் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. இந்த பழக்கம் இங்குள்ள அனைத்து வெற்றியாளர்களுக்கு பொதுவானது. அவர்கள் எப்போதும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொண்டே இருப்பார்கள். தங்களை மெருகேற்றிக் கொண்டே இருப்பார்கள். எனவே உங்களது மூளையும் அதிக செயல்திறனும் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் தொடர்ந்து புதிய விடயங்களை ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டே இருங்கள்.


3. மூன்றாவது உடல் ஆரோக்கியம் :


நமது உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நமது மூளை வினைத்திறனாக செயல்படும். உடல் சோர்வுற்று களைப்போடு இருக்கும் மனிதனால் என்றும் ஆக்க பூர்வமாக சிந்திக்க முடியாது. தெளிவாக முடிவெடுக்க முடியாது. எனில் வாழ்வில் அவனுக்கு எவ்வாறு வெற்றி கிட்டும். எனவே உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். எப்போதும் அதை சுறுசுறுப்பாக வைத்திருங்கள். அதுவே உங்களது மூளையையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க ஒரே வழி.


4. நான்காவது அனுபவம் :


ஒருவனது உண்மையான அறிவும் அதிலுள்ள தெளிவும் இதுவரை அவன் எத்தனை அனுபவங்களை சந்தித்துள்ளார் அவற்றிலிருந்து எவ்வாறான பாடங்களை கற்று என்பதிலேயே இருக்கும். வாழ்வில் அனைத்தையும் ஒரு புத்தகத்திலிருந்து அல்லது வெறுமனே இணையத்தில் இருந்து கற்றுவிட முடியாது. இந்த உலகம் விசாலமானது பல்வேறுபட்ட மனிதர்களையும் அனுபவங்களையும் கொண்டது. அந்த அனுபவங்களை நீங்கள் உள்வாங்கிக் கொள்ளும் போது அது உங்களையும் மாற்றுகின்றது. உங்களது சிந்தனைகளை மாற்றுகின்றது. அவற்றை இன்னும் தெளிவாக்குகின்றது. தெளிவாக சிந்திப்பவன் ஆல் மட்டுமே இவ்வுலகை வெல்ல முடியும். தன் பாதையில் தோன்றும் சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். எனவே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுவதை விட்டுவிட்டு அத் தெளிவை தரும் அனுபவங்களை சேகரிக்க புறப்படுங்கள்.


5. ஐந்தாவது மகிழ்ச்சியாக இருங்கள் :


மன அழுத்தமே உங்களது மூளையின் மிகப் பெரும் எதிரியாகும். அது உங்களது மூளையின் திசுக்களை பாதிக்கின்றது. அதன் ஞாபக சக்தியை குறைக்கின்றது. மன அழுத்தம் உங்களது வாழ்க்கையை சிதைத்து விடும் அளவிற்கு கொடுமையானது. அது உங்களிடம் இருக்கும் காலமெல்லாம் உங்களால் என்றும் ஒரு வெற்றியாளனாக முடியாது. எனவே இந்த மன அழுத்தத்தை உங்களது வாழ்வில் இருந்து தூக்கி வீச நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். உங்களை மன உளைச்சல் ஆக்கும் சம்பவங்களை புறக்கணித்து மகிழ்ச்சிப்படுத்தும் சம்பவங்களில் கவனம் செலுத்த வேண்டும்.


நண்பா நிச்சயம் நாம் இங்குக் கூறிய ஐந்து பழக்கங்களும் உங்களது மூளையை ஆரோக்கியமாக்கும் சிந்தனையை தெளிவாக்குகின்றன. எனவே இந்த ஐந்து பழக்கங்களையும் தவறாமல் உங்களது வாழ்வினுள் கொண்டு வாருங்கள். அதன்பின் உங்களது அறிவும் தெளிவும் சிந்திக்கும் ஆற்றலும் தாறுமாறாக அதிகரிப்பதை உங்களது கண்கூடாக கண்டு கொள்வீர்கள்.


No comments:

Post a Comment