Self Confidence Story in Tamil - காப்பியடித்து உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம்

Self Confidence Story in Tamil
Self Confidence Story in Tamil

Self Confidence Story in Tamil - காப்பியடித்து உருவாக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனம் 

70 களின் இறுதிப்பகுதியில் ஜெராக்ஸ் நிறுவனம் மிகப் பெரும் தொழில் நுட்ப ஆய்வுகளை செய்து வந்தது. அவர்கள் பல்வேறுபட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்கினார்கள். ஏற்கனவே இருந்த கண்டுபிடிப்புகளை மேம்படுத்தினார்கள். அந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை கணணி சார்ந்தவையாகவே இருந்தன. அப்போது ஆப்பிள் நிறுவனம் தனது Apple 2 என்ற கணினியை விற்பனை செய்து கொண்டிருந்தது. அக் கணினிகள் சாதாரண மனிதர்களின் பாவனைக்காக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும் அவை சாமானியர்களின் பாவனைக்கு ஏற்றால் போல இலகுவாக இல்லை. அவற்றில் மவுஸ் இருக்கவில்லை. கவர்ச்சியான கிராஃபிகல் இன்டர்பேஸ் இருக்கவில்லை. இன்று நாம் பயன்படுத்தும் Id Card, Windows போன்ற எந்த தொழில் நுட்பமும் இருக்கவில்லை. ஆனால் அன்று ஜெராக்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து வடிவமைத்து கொண்டிருந்த கணினிகளில் இவை அனைத்தும் இருந்தன. ஜெராக்ஸ் நிறுவனத்தின் இக் கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். 


அவர்களது நிறுவனத்திற்கு உள்ளேயே சென்று அவை குறித்து முழுமையாக அறிந்து கொண்டார். பின்னர் அவை அனைத்தும் காப்பி அடித்து Macintosh  எனப்படும் கவர்ச்சிகரமான நவீன வகை கணணிகளை உருவாக்கினார். ஆனால் தங்களது ஆய்வுகளை எல்லாம் முடித்துவிட்டு ஜெராக்ஸ் நிறுவனம் கணினி தயாரிப்பில் இறங்கிய போது அக் கணினிகளை மக்கள் பெரிய அளவில் வரவேற்கவில்லை. இறுதியில் ஜெராக்ஸ் நிறுவனம் கணினி தயாரிப்பதை நிறுத்தி விட்டு போட்டோ கோபியர் இயந்திரங்களை தயாரிக்க ஆரம்பித்தது. ஆனால் அவர்களை காப்பியடித்து உருவாக்கப்பட்ட ஆப்பிளின் Mac கணினிகலோ  விற்பனையில் சக்கை போடு போட்டனே. இன்று ஆப்பிள் நிறுவனத்தின் பெறுமதி 2 ட்ரில்லியன் டாலர்களையும் கடந்து விட்டது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆப்பிள் தனது Mac கணினிகளுக்காக வடிவமைத்த OS X என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்பட்டமாக காப்பியடித்து தனது விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கினார் பில்கேட்ஸ். 


அந்த விண்டோஸ் OS மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதுவே பில்கேட்ஸ்சை உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் கொண்டு வந்தது. ஆனால் அந்த விண்டோஸ் OS க்கான அடிப்படையை ஐடியா முழுக்க அப்பிள் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டதே. இது இப்படியிருக்க 2003 இல் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இரண்டு சகோதரர்கள் மிகப்பெரும் வெற்றி கனவோடும் அதை அடைவதற்கான தலைசிறந்த ஐடியாஓடும் காத்திருந்தார்கள். அந்த ஐடியா ஒரு இணையதளத்திற்கானது அந்தக் இணையதளத்தை வடிவமைக்க அவர்களுக்கு ஒரு புரோகிராமர் தேவை. வெளியிலிருந்து புரோகிராமர்களை கொண்டுவந்தால் அதிகம் செலவாகும் என எண்ணிய அவர்கள் தங்களது பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு இளைஞனை வேலைக்கு அமர்த்தினார்கள். அந்த இளைஞனும் அவர்களிடமிருந்து அவர்களது மொத்த திட்டத்தையும் கற்றுக்கொண்ட பின் அவர்களது நிறுவனத்திலிருந்து விலகி அந்த ஐடியாவை கொண்டுதானே ஒரு நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனமே Facebook ஆகும். 


இன்று Facebook கின் பெறுமதி 920 பில்லியன் டாலர்களாகும். இத்தனைக்கும் அது Mark Zuckerberg ஐடியாவே கிடையாது. நல்ல கலைஞர்கள் காப்பி அடிப்பார்கள். சிறந்த கலைஞர்கலோ திருடி கொள்வார்கள் என்பது பிகாசோவின் வரிகளாகும். இவ்வுலகிலுள்ள அடுத்த பெரும் கண்டுபிடிப்பு ஏற்கனவே உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் அது பிரபலமாகவில்லை. யாரோ ஒருவர் அதில் சில மாற்றங்களை செய்து அதை வைத்து பல பில்லியன் டாலர்களை சம்பாதிக்க போகின்றார் அது நிச்சயம் ஆனதே. பணம் சம்பாதிப்பதற்கு ஒரு தலைசிறந்த வேறு எவருக்குமே தோன்றாத ஐடியாவே தேவை என பலர் எண்ணுகிறார்கள். ஆனால் இங்கு பெரும்பாலும் வெற்றி அடையும் வணிகங்களை பார்த்தால் அவர்கள் ஏற்கனவே யாரோ செய்து கொண்டிருந்த வேலைகளிலேயே சில மாற்றங்களைச் செய்து அவர்களை விட அதிகமாக சம்பாதிப்பார்கள். இன்றைய உலகில் ஒருவன் வெற்றி அடைவதற்கு சாமர்த்தியம் தேவை. தன்னைச் சுற்றியுள்ள அனைத்திலும் வெற்றி வாய்ப்புகளை தேடும் மனநிலை தேவை. அடுத்தவனை விட ஒரு படி முன்னே இருக்கும் சிந்தனை தேவை. அனைத்திலும் முக்கியமாக அதிக அவதானம் தேவை. கொஞ்சம் கிறுக்குத்தனம் தேவை. நிச்சயம் நல்லவனுக்கும் ஏமாலிக்கும் இக் போர்க்களம் சற்று கடினமானதாகவே இருக்கும்.


நண்பா நிச்சயம் அனைத்து திட்டங்களும் வெற்றியடையும். அவற்றை எவ்வாறு அமல் படுத்துவது என்ற அறிவு நம்மிடம் இருந்தால். எனவே அந்த அறிவை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். அதன்பின் இன்று உங்கள் முன்னே புழக்கத்தில் இருக்கும் பொருட்களையும் சேவைகளையும் அவற்றின் பின்னால் இருக்கும் ஐடியாவையும் ஆய்வு செய்யுங்கள். அவ்வாறு நீங்கள் கற்றுக்கொண்ட திட்டங்களில் எவற்றிலெல்லாம் மாற்றங்கள் செய்து நீங்கள் உங்களுக்கான ஒரு பொருளையோ அல்லது சேவையையோ உருவாக்க முடியும் என்பதை கண்டறியுங்கள். அவ்வாறு நீங்கள் கண்டறிந்த ஐடியாக்கள் எது உங்களுக்குப் பொருத்தமானது எதன் மூலம் நீங்கள் விரும்பும் பணத்தினை சம்பாதிக்க முடியும் என்பதை சிந்தித்து அந்த ஒரு ஐடியாவை மட்டும் செயற்படுத்த ஆரம்பியுங்கள். நிச்சயம் இவ்வுலகின் அடுத்த தலை சிறந்த கண்டுபிடிப்பு உங்கள் உடையதாகவும் இருக்கலாம்.


No comments:

Post a Comment