உன் தாழ்வு மனப்பான்மையை அடியோடு அழிக்கும் ஓர் குட்டிக்கதை - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

உன் தாழ்வு மனப்பான்மையை அடியோடு அழிக்கும் ஓர் குட்டிக்கதை - Positive Energy Story in Tamil

அவன் ஒரு வருடமாக வேலை தேடுகின்றான். தனக்கு தெரிந்த தெரியாத அனைத்து நிறுவனங்களிலும் முயற்சித்து விட்டான். பல நேர்காணல்களை எதிர்கொண்டுள்ளான் ஆனால் அவனிடம் இருந்து அதீத பயத்தினாலும் பதட்டம்தினாலும் அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்க முடியாமல் திண்டாடி அவ்விடத்திலேயே நிராகரிக்கப்பட்டு விடுவான். அவனுடன் படித்தவர்கள் அவனது நண்பர்கள் என அனைவருமே தங்களுக்கு பொருத்தமான வேலை தேடி கை நிறைய சம்பாதித்து கொண்டிருந்தார்கள். ஆனால் இவ் இளைஞனின் நிலையோ நிலை இவ்வாறு இருந்தது. இது அவனது வீட்டிலும் ஒரு மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அவனது பெற்றோர்கள் தினமும் அவனைக் திட்டிக்கொண்டே இருந்தார்கள். 


இங்கிருக்கும் எல்லோருக்கும் வேலை கிடைக்கின்றது. உனது நண்பர்களுக்கு கிடைக்கின்றது. நமது உறவினர்களுக்கு கிடைக்கின்றது. எனில் உன்னால் மட்டும் ஏன் அவ் வேலையை தேடிக்கொள்ள முடியவில்லை. இது முழுக்க முழுக்க உனது தவறு மட்டும்தான் என குற்றம் சாட்டினார்கள். இருந்தும் இவ் இளைஞன் மனம் தளராமல் பல புதிய வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டேன் இருந்தான். ஒன்று அவ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும் அல்லது நேர்காணலில் அவனை நிராகரித்து விடுவார்கள். அவ் இளைஞனது தொடர் தோல்வி அடுத்தவர்களுக்கு அவன் மீது ஒரு ஏழளமான பார்வையை உருவாக்கியது. அவன் ஒரு நகைப்புக்குரிய பொருளாக மாறினான். அவனது நண்பர்களும் உறவினர்களும் அவனை தொடர்ந்து கிண்டல் அடித்துக் கொண்டே இருந்தார்கள். இதனால் அவன் மிகப் பெரும் மன அழுத்தத்திற்குள் உள் ஆனான். தினமும் நிம்மதி இல்லாமல் தவித்தான். தனிமையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தான். இப்படியே நாட்களும் நகர்ந்தன. ஒருநாள் வழமைபோல் ஒரு நேர்காணலுக்கு சென்று அங்கு நிராகரிக்கப்பட்டு ஏமாற்றத்தோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான் அவ் இளைஞன். வரும் வழியில் வீதியோரமாக மக்கள் கூட்டமாக நின்று தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பதை கண்டான். 


அதை பார்த்து அங்கு என்னதான் நடக்கின்றது என்ற கேள்வியும் ஆர்வமும் அவனது மனதில் மேலோன்கவே உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து அக் கூட்டத்தை விலக்கியபடி உள்ளே நுழைந்தான். கூட்டத்தின் நடுவில் சென்றவன் அங்கு ஒரு துறவி நிற்பதைக் கண்டான். அவர் சொல்லி இங்கு அனைவரும் சிரிக்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டான். ஆனால் அது ஏன் என்பது அவனுக்குத் தெரியவில்லை. சிறுது நேரம் சிரித்து விட்டு அக்கூட்டம் அங்கிருந்து கலைந்து சென்றது. அத் துறவியும் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார். அவர் பின்னால் ஓடிச் சென்று அவ் இளைஞன். அய்யா சற்று நில்லுங்கள் அங்கு ஏன் நீங்கள் அவ்வாறு சிரித்துக் கொண்டிருந்தீர்கள் அதற்கான காரணம் தான் என்ன எனக் கேட்டான். அதற்கு அத்துறவியோ மகனே சிரிப்பதற்கு காரணம் வேண்டுமா வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் அல்லவா நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்காக தான் நாங்கள் அவ்விடத்தில் சிரித்துக் கொண்டிருந்தோம். மக்கள் முகத்திலும் உள்ளத்திலும் புன்னகையை கொண்டு வர வேண்டும் என்ற லட்சியத்திலயே நான் இதை ஊர் ஊராகச் சென்று சொல்லிக் கொடுக்கிறேன் என்றார். அதை கேட்ட அந்த இளைஞநோ அந்தத் துறவியைப்பார்த்து இங்கு எங்களது வாழ்க்கையே சிரிப்பாய் சிரிக்கின்றது எங்களிடம் வந்து சிரிப்பை விளம்பரம் செய்கிறீர்களா ஒரு பத்து நிமிடம் சிரித்தாள் எங்களது பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடுமா என சலிப்புடன் கேட்டான். 


அதற்கு அத் துறவியோ நிச்சயம் உன் முகத்தில் சிரிப்பு இருந்தால் உன் வாழ்க்கையும் மாறும் மகனே. உன் பிரச்சினையை சொல் அதற்கான தீர்வை நான் கூறுகின்றேன் என்றார். அதற்கு அவ் இளைஞனும் கடந்த ஒரு வருடமாக வேலை இல்லாமல் தான் பட்ட அவலங்களையும் அவமானங்களையும் அத் துறவியிடம் கூறி நான் இங்கு கஷ்ட படுகின்றேன் கடினமாக உழைக்கிறேன். இருந்தும் என் வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லையே இதற்கு ஒரு தீர்வை கூறுங்கள் என்றான். அதைக் கேட்டு அத் துறவியோ தன்னிடம் இருந்த 100 ரூபாய் பணத்தை எடுத்து இதன் பெறுமதி என்ன என அவ் இளைஞனிடம் வினவினார். அதற்கு அவ் இளைஞனோ நூறு ரூபாய்கள் என குழப்பத்துடன் பதிலளித்தான். பின்னர் அப் பணத்தை நன்றாக கசக்கி விட்டு இப்போது இதன் பெறுமதி என்ன எனக் கேட்டார் அத் துறவி. நூறு ரூபாய்கள் தான் என பதிலளித்தான் அவ் இளைஞன். 


கசக்கிய பணத்தை கீழே போட்டு தன் கால்களால் நன்றாக மிதித்தார் அத் துறவி. பின்னர் அதை தன் கையில் எடுத்து அழுக்குப் படிந்த அந்த நோட்டை அவன் முன்னே நீட்டி இதன் பெறுமதி என்ன எனக் கேட்டார். நூறு ரூபாய்கள் தான் என மீண்டும் பதில் அளித்தான் அவ் இளைஞன். பின்னர் அப்பணத்தை இரண்டாக கிழித்து இதன் பெறுமதி என்ன எனக் கேட்டார் அத் துறவி. அதற்கு அவ் இளைஞனோ நூறு ரூபாய்கள் தான் ஆனால் கிழிந்த பணம் செல்லாது இதை ஒட்டினால் இதன் பெறுமதி நூறு ரூபாய்கள் தான் என்றான். அதைக் கேட்ட அத் துறவியோ முகத்தில் சிறு புன்னகையுடன் மகனே உன் கேள்விகளுக்கான பதிலை நீயே கூறிவிட்டாய். ஒரு நூறு ரூபாய் நோட்டை நீ கசக்கிநாளும் காலால் மிதித்தாலும் அல்லது புழுதியில் போட்டு புரட்டினாலும் அது தனது பெறுமதியை இழப்பதில்லை. அதன் மீது நீ என்னதான் அழுக்குகளை வீசினாலும் அது 100 ரூபாய் நோட்டு ஆகவே இருக்கும். வெளியிலிருந்து வரும் எக் காரணியாளும் அதன் பெறுமதியை குறைத்துவிட முடியாது. ஆனால் அந்த நோட்டு இரண்டாக கிழியும் போது தாக்கம் அதன் உள்ளே நடக்கும் போது அது செல்லாக்காசாக மாறுகின்றது. இருந்தும் அதுவும் நிரந்தரமல்ல கிழிந்த நோட்டு ஓட்டினால் மீண்டும் அதன் பெறுமதி 100 ரூபாய்கள் தான். அதன் பெறுமதி என்றும் குறையப்போவதில்லை. நிச்சயம் நீயும் இது போன்றவனே. அடுத்தவர்களும் உன்னை திட்டுவதாளும் கோபப்படுவதால் மட்டம் தட்டுவதாலும் உனது பெருமதி என்றும் குறையப் போவதில்லை. ஆனால் அவர்கள் கூறுவதை நீ நம்பினால் அதை உன் மனதிற்குள் எடுத்துச் சென்றால் அவர்களது விமர்சனங்கள் உன் தன்னம்பிக்கையை கிழித்து விட நீயே அனுமதித்தால் அது நொறுங்கிக் கிடக்கும் காலம் வரை நீ செல்லாக்காசு ஆகவே இருப்பாய். 


ஆனால் எப்போது உடைந்த உனது தன்னம்பிக்கையை நீ ஓட்டுகின்றாயோ உன்னை விமர்சிப்பவர்களையும் கிண்டல் அடிப்பவர்களையும் புறக்கணித்துவிட்டு உன் வாழ்வை தைரியத்தோடு வாழ்கின்றாயோ அதில் தோன்றும் சவால்களை பயமின்றி எதிர்கொள்கின்றாயோ அக்கணம் நீ இழந்த உனது பெறுமதி மீண்டும் உன்னை வந்தடையும். எனவே அதற்கான முயற்சிகளை இன்றே மேற்கொள் உனது மனநிலையை மாற்று தாழ்வு மனப்பான்மையை தூர வீசு. உனது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகையை வைத்துக்கொள். அதன்பின் உன் வாழ்வில் என்றும் சோகங்களை காணமாட்டாய் எனக் கூறியபடி நடக்க ஆரம்பித்தார் அத் துறவி. அவ் இளைஞனோ தான் இதுவரை செய்த தவறுகளை எண்ணியபடியே அத் துறவியை பார்த்துக்கொண்டிருந்தான்.


No comments:

Post a Comment