நேரத்தை வீணடிக்காதே - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil


நேரத்தை வீணடிக்காதே - Positive Energy Story in Tamil

ஒரு கடற்கரையில் ஒரு சிறுவன் ரொம்ப நேரமா கவலையோட உட்கார்ந்து இருக்கான். அத பார்த்துட்டு இருந்த வயதான ஒருவர் அவங்கிட்ட போய் கேக்குறாரு ஏன் தம்பி உனக்கு என்ன ஆச்சு ஏன் இவ்வளவு நேரமா கவலையை விட உட்கார்ந்து இருக்க. அதற்கு அந்த சிறுவன் சொல்றான் நான் வந்து ரொம்ப ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் எங்க வீட்ல எல்லாருமே ரொம்ப கஷ்டப்பட்டு தான் வாழ்ந்துட்டு இருக்கோம். என் வாழ்க்கையில நான் என்ன பண்ண போறேன் எப்படி தான் முன்னேற போறேன் என்று தெரியல அப்படின்னு அப்படி என்ன கவலையோட அந்த பெரியவர் கிட்ட அழுவ ஆரம்பிச்சுட்டான். 


இதைக் கேட்ட அந்த வயதானவருக்கு மனது உருகி அந்த சிறுவன் ஓட சூழ்நிலையை புரிந்துகொண்டு அவனிடம் அந்த வயதானவர் சொல்றாரு தம்பி நீ அழாதே என்கிட்ட நிறைய பொற்காசு இருக்கு அதுல ஒரு 24 தங்க காசுகளை தினமும் உனக்கு இதே கடற்கரையில் தரேன். காலையில தினமும் வந்து அதை என்கிட்ட வாங்கிக்கோ. வாங்கி அது உன்னோட குடும்ப கஷ்டத்தை க்கும் பயன்படுத்திகோ. உன்னோட வாழ்க்கைக்கும் உன்னோட முன்னேற்றத்துக்கும் செய்ய முடிந்தால் அதை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிடு அதனால நீ அழாதே அப்படின்னு சொல்றாரு.

அந்தப் பையன் தன்னோட நிலைமையை நினைத்து பார்த்து சரி நான் வாங்கிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு அன்னைக்கு தேவையான 24 தங்க காசுகளை வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்புறேன். போற வழியில அந்த கடற்கரை ஓரமா நிறைய கடைகளை பார்க்கிறான் அதுல நிறைய விதவிதமான உணவு பொருட்களை பார்த்து எல்லாமே சாப்பிடனும்னு ரொம்ப ஆசைப்பட்டு எல்லாத்தையும் வாங்கி சாப்பிடுறான். போற வழியில் என்னவெல்லாம் கிடைக்குதோ எல்லாத்தையும் வாங்கி 24 தங்க காசுகளை செலவழித்துவிட்டு ஜாலியா வீட்டுக்கு போறான்.

அதே போல மறுநாளும் அந்த சிறுவன் அந்த கடற்கரைக்கு வரான் வயதானவர்களை 24 தங்கக் காசுகளையும் வாங்குறான் வாங்கி வீட்டுக்கு போகும்போது அந்த கடற்கரையில மீதி என்னென்ன உணவு பொருட்கள் எல்லாம் சாப்பிட முடியலையே அது எல்லாத்தையும் இன்னைக்கு வாங்கி சாப்பிடுறான். போகும்போது என்னென்ன பொருள்கள் எல்லாம் தேவையோ அது எல்லாத்தையும் வாங்கி ஜாலியா enjoy பண்ணுறான். கொஞ்சமா மீது இருந்த அந்த தங்க காசுகளை வச்சி அவனோட அம்மாவுக்கும் வீட்டுக்கும் கொஞ்சம் பொருள்களை வாங்கிட்டு போறேன்.

அப்போ அவங்க அம்மா கேக்குறாங்க எப்படி உனக்கு இதெல்லாம் கிடைச்சிடுச்சு. அதுக்கு அந்த சிறுவன் சொல்றான் கடற்கரையில் நடந்த எல்லாம் நிகழ்வையும் சொல்லி முடிக்கிறான். அதுக்கு அவனோட அம்மா அப்படியா கண்டிப்பா இது நம்ம குடும்ப சூழ்நிலைக்கு பயனுள்ளதாக இருக்கும் இருந்தாலும் உனக்கு தினமும் கிடைக்கிற 24 தங்க காசுகளை முழுசாக செலவு பண்ணாம அதுல ஒன்னு இரண்டாவது வீட்டுக்கு எடுத்துட்டு வந்து சேமித்துவை அப்படின்னு சொல்றாங்க. அதுக்கு அந்த சிறுவன் கேட்கிறான் ஏம்மா நமக்கு தினமும் 24 தங்க காசுகள் தரேன்னு சொல்லி இருக்காரு இதுல எதுக்கு நாம சேமிச்சு வைக்கணும் வாங்கி சந்தோஷமாக செலவு பண்ணலாமே அப்படின்னு சொல்றான்.


இல்ல நீ கண்டிப்பா சேமிச்சு வைக்கணும் அப்படின்னு அவங்க அம்மா சொல்றாங்க. அதுக்கு அந்த சிறுவன் சரிம்மா நாளையிலிருந்து நான் கொஞ்சம் தங்க காசையாவது நான் வீட்டுக்கு வந்து தரேன் அப்படின்னு சொல்லிட்டு போயிரான். ஆனால் அந்த சிறுவன் தினமும் கடற்கரைக்கு போறான் 24 தங்க காசுகளை வாங்குறான் செலவு பண்ணிடுரான். வீட்டுக்கு வரும்போது அவனோட அம்மா கேக்குறாங்க தங்க காசுகள் எங்கன்னு அம்மா நாளைக்கு கொண்டு வந்து தரேன் அப்படின்னு சொல்லிடுறான். இதேபோல ஒவ்வொரு நாளும் அந்த 24 தங்கக் காசுகளையும் முழுவதுமாக செலவழித்துக் கொண்டே வரான். ஒருநாள் கூட ஒரு தங்க காசுகளை கூட வீட்டுக்கு கொண்டு வந்து அவன் சேமித்து வைக்கவில்லை. இதே மாதிரியே பலவருடங்கள் அவங்க சந்தோஷமா இருந்துட்டு வராங்க. அந்த சிறுவனும் பெரியவனா ஆயிட்டான். ஒரு நாள் அவன் அந்த 24 தங்க காசு செலவழித்து வீட்டுக்கு வந்து பார்க்கும்போது. அவனோடு அம்மாவின் உடல்நிலை ரொம்ப மோசமா இருந்துச்சு. 


ஆனால் அவன்கிட்ட தங்க காசுகள் இல்லாததால அவன் அம்மாவுக்கு தேவையான மருந்துகள் வாங்க முடியல. அப்ப தான் அவன் முதல் முறையா தங்க காசுகளை சேமித்து வைக்காதது எவ்வளவு பெரிய தவறு என்பதை முதன்முறையாக உணர்ந்து கொள்கின்றான். சரின்னு சொல்லிட்டு இரவு தூங்கி காலைல எழுந்து 24 தங்க காசுகளை வாங்கி அம்மாவுக்கு தேவையான மருந்துகளை வாங்கி விடலாம் என்று முடிவு பண்றான். அதேபோல மறுநாள் காலையில் கடற்கரைக்கு போறான். அங்கே அந்த 24 தங்க காசுகளை தருகிற வயதானவர் இல்லை. கடற்கரை முழுவதுமா அங்கேயும் இங்கேயுமா தேடிப் பார்க்கிறான். எங்கேயுமே அந்த வயதானவர் இல்ல அப்போதுதான் அவன் நினைக்கிறான் இனிமே நமக்கு தினமும் அந்த 24 தங்க காசுகள் வேண்டாம். 


ஆனால் இன்றைய ஒருநாள் பிரச்சினையை சமாளிக்க யாவது ஒரே ஒரு 24 தங்க காசுகள் இருந்தால் போதுமே. ஆனால் அதைக்கூட நாம சேமிக்காமல் விட்டுவிட்டோமே. ரொம்ப நினைச்சு அவனோட தவறை எப்படி சரி செய்ய முடியும் என்று அவனுக்கு தெரியாம என்ன பண்றதுன்னே தெரியாம ரொம்ப நொந்து போய் விட்டு அழுதுகிட்டே அங்கேயே நின்னுக்கிட்டு இருக்கான். 


இதே போல தான் நாமும் பல நேரங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு நாள் ஓட 24 மணி நேரங்களையும் தேவையில்லாத சில வேலைகளை செஞ்சி வீணடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் முக்கியமான ஒரு சில வேலை செய்ய நேரிடும் போது கொஞ்ச ஒரு மணி நேரம் இருந்தால் போதுமே ஒரு நிமிடம் இருந்தால் போதுமே எண்ணி நாம அந்த இடத்தில தவித்திருக்கோம்.


சரி இந்த உலகத்தில் வெற்றியாளன் ஒருத்தன் இருக்கானா அவன் காலத்தையும் நேரத்தையும் சரியாகப் பயன்படுத்தி இருப்பான்.


அதேபோல தோல்வியடைந்த அவன் ஒருத்தன் இருக்கான்னா அவன் நேரத்தை வீணடித்தவனாக மட்டும்தான் இருப்பான்.




Time is Gold



நன்றி

No comments:

Post a Comment