நீ வாழ்வில் ஜெயிக்க வேண்டுமா? நீ பட்ட அவமானங்களை மறக்காதே - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

நீ வாழ்வில் ஜெயிக்க வேண்டுமா? நீ பட்ட அவமானங்களை மறக்காதே - Positive Energy Story in Tamil


நீ வாழ்வில் ஜெயிக்க
வேண்டுமா?
நீ பட்ட அவமானங்களை 
மறக்காதே.

எந்த உதடுகள் உன்னை
ஏராளமாக பேசியதோ?

அதே உதடுகள்
உன்னை பாராட்டும் வரை
ஓயாதே.

காயப்படுத்திய உறவுகளை 
கண் எதிரே காணும் போது,

அவர்களை தவிர்க்க
முடியாமல் நம்
உதடு சிரிக்கும்...

ஆனால்
நம் மனம்
வலிக்கும்!

எந்த ஒரு இக்கட்டான
சூழலாக இருந்தாலும்.

அதில் இருக்கும் வாய்ப்புகளை
 கண்டுபிடித்து முன்னேறுங்கள்.

மற்ற சிந்தனைகள்
உங்களுக்கான வெற்றியை
தராது.

அலட்சியம் செய்பவர்களிடம்
 மீண்டும் மீண்டும் அன்பை
தேடாதீர்கள்.

அங்க அவமானத்தை 
தவிர வேறு ஏதும் கிடைக்காது.

கற்ற ஆசிரியர்களிடம்
உங்கள் பிள்ளைகளை
சேர்க்காதீர்கள்.

கற்றுக் கொண்டே இருக்கும் ஆசிரியர்களிடம் உங்கள்
பிள்ளைகளை சேருங்கள்.

அவர்களால் மட்டுமே சரியாக 
போதிக்க முடியும்.

ஏனென்றால் அவர்கள்
மட்டுமே கற்பதும் 
கற்றுக்கொடுப்பதுமே
இவ்வுலகின் உண்மையான 
பேரின்பம் என்பதை உணர்ந்தவர்கள்.

சிலரை மன்னிக்காதே!
அவர்கள் செய்த தவறுக்கு மனம் வருந்தாத வரை,

அவர்களை நாம்
மன்னிப்பதில் எவ்வித 
அர்த்தமும் இல்லை.

அதுவரை
மன்னிக்காதே!
மறக்காதே!






No comments:

Post a Comment