Cristiano Ronaldo - Positive Energy Story in Tamil

Positive Energy Story in Tamil
Positive Energy Story in Tamil

Cristiano Ronaldo - Positive Energy Story in Tamil


1985 இல் Portugal ன் Madeira என்னும் ஒரு சிறு தீவில் ஒரு குழந்தை பிறந்தது. வறுமையின் கோரப் பிடியில் கருவிலேயே களையப்பட வேண்டிய அந்த குழந்தை அதன் தாயின் விடாப்பிடின் ஆல் இந்த பூமியை வந்தடைந்தது. அக்குழந்தைக்கு Cristiano Ronaldo அவர்கள் பெயர் சூட்டினார்கள். Ronaldo வின் தந்தை தோட்ட வேலைகள் செய்பவர். தாய் வீடு வீடாக சமையல் வேலைகள் துப்புரவு வேலைகள் செய்பவர். இவ் வேளைகளில் அவர்கள் சம்பாதிக்கும் பணம் நிச்சயம் நான்கு குழந்தைகள் கொண்ட அக் குடும்பத்தை பராமரிக்க போதவில்லை. தினசரி மூன்று வேளை உண்பதே அவர்களுக்கு பெரும் சவாலாக மாறியது. ஒருநாள் Ronaldo வின் தந்தைக்கு ஒரு கால்பந்தாட்ட Club ல் வேலை கிடைத்தது. மைதானத்தை பராமரிப்பது பந்துகளை புரகி போடுவது விளையாட்டு வீரர்கள் தங்கும் இடங்களை சுத்தம் செய்வது என அங்கிருந்த அனைத்து எடுபிடி வேலைகளையும் அவர் செய்து கொண்டிருந்தார். 


தினமும் தந்தையுடன் மைதானம் செல்லும் Ronaldo அங்கு வீரர்கள் விளையாடும் விளையாட்டை இமை வெட்டாமல் பார்த்த படியே நிற்பான். அன்று வீடு திரும்பியதும் வெற்று பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தன்னந்தனியே உதைபந்தாட்டம் விளையாடுவான். Ronaldo வின் ஆர்வத்தை கண்டு அவனது தந்தை வீட்டில் இருந்த பழைய துணிகளைக் கொண்டு ஒரு பந்தை உருவாக்கி அதை Ronaldo விற்கு பரிசளித்தார். ஏனெனில் ஒரு கால்பந்து வாங்குவதற்குக் கூட அவர்களிடம் பணம் இருக்கவில்லை. இப்படியே தினமும் மைதானத்தை பார்த்தபடி நின்று இருந்த Ronaldo விற்கு ஒருநாள் அந்த மைதானத்தில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. Ronaldo வின் தந்தை அந்த Club நிர்வாகத்திடம் கெஞ்சி தினமும் அங்கு விளையாட வரும் மாணவர்களுடன் Ronaldo வையும் விளையாட வைத்தார். ஆனால் அம்மாணவர்கள் பணம் படைத்த குடும்பங்களிலிருந்து வருபவர்கள். Ronaldo வின் தந்தையோ மைதானத்தை சுத்தம் செய்பவர். கால்பந்து விளையாட ஒரு காலணி கூட Ronaldo விடம் இருக்கவில்லை. தனது சகோதரனின் கிழிந்த காலணிகளை அறிந்துகொண்டு விளையாட செல்வார். இதனால் சக மாணவர்களால் மிக மோசமான முறையில் கேவலப்படுத்தபடுவார். 


ஒரு காலணிக்கே வழியில்லாத உனக்கு கால்பந்தாட்டம் கேட்குதா எனக்கூறி அவமானப்படுத்தப் படுவார். அவரது தந்தையின் தொழிலை காரணம் காட்டி ஒதுக்க படுவார். Ronaldo வின் இந்த அவமானங்கள் வெறுமனே இந்த மைதானத்துடன் நின்றுவிடவில்லை. அது அவனது வகுப்பறை வரை தொடர்ந்தது. Ronaldo பாடசாலையில் மிக மந்தமான மாணவன் வகுப்பறையில் எப்போதும் அவனுக்கு கடைசி இடமே. இதனை காரணம் காட்டி தினமும் சக மாணவர்களும் ஆசிரியர்களும் அவனை மட்டம் தட்டிக்கொண்டே இருந்தார்கள். ஒரு நாள் இந்த தகவல் Ronaldo வின் தாயின் காதுகளுக்கு போக கல்வியை தூக்கி ஒரு மூலையில் போட்டுவிட்டு. முழுநேரமாக உதைபந்தாட்டத்தில் கவனம் செலுத்துமாறு அவர் அறிவுரை வழங்கினார் தாயின் ஆதரவு Ronaldo விற்கு மிகப்பெரும் சக்தியைக் கொடுத்தது. 


அச்சத்தின் வெளிப்பாடு கால்பந்தாட்ட மைதானத்தில் தெரிந்தது. அங்கு Ronaldo வின் திறமைகளைக் கண்டு வாயடைத்துப் போன Portugal ன் Sports Club. Ronaldo வை Portugal ன் தலை நகருக்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்க ஆரம்பித்தது. அப்போது அவனுக்கு வயது வரும் 11 மட்டுமே. ஆனால் தனது குடும்பத்தைப் பிரிந்து அவனால் அங்கு இருக்க முடியவில்லை. தினமும் ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்து விடுவான். Ronaldo வின் நிலையைக் கண்ட அந்த Club நிர்வாகம் மீண்டும் அவனை அவனது கிராமத்திற்கே அனுப்பி வைத்தது. ஆனால் வீடு திரும்பிய Ronaldo வின் கண்களுக்கு பட்டதோ அவனது குடும்பத்தின் வறுமைதான். இவ் வறுமையை நீ விரட்ட விரும்பினால் அதற்கு கால்பந்தாட்டம்மே ஒரே வழியென்று Ronaldo வின் உறவினர் ஒருவர் அறிவுரை வழங்கவே அது ஆழமாக அவனது மனதில் பதிந்தது. அடுத்த நாளே மீண்டும் Club க்கு திரும்பினான் ரொனால்டோ. இம்முறை அவன் மனதில் சோகம் இருக்கவில்லை. தனது குடும்பத்தின் வறுமையை விரட்ட வேண்டும் என்ற வெறியே இருந்தது. அந்த வெறியுடன் மைதானத்தில் குதித்தார் 11 வயது Cristiano Ronaldo.


 மைதானத்தில் அவனது ஆட்டம் அனல் பறந்தது. அங்கு இருந்த அனைத்து Club இன் நிர்வாகிகளின் கவனமும் Ronaldo பக்கம் திரும்பியது. இப்படியே வருடங்கள் கடந்தன ரொனால்டோவின் புகழ் Portugal களையும் தாண்டி பரவ ஆரம்பித்தது. Ronaldo வின் திறமைகளைக் கண்டு வாயடைத்து போன இங்கிலாந்தின் Manchester அணி 100 கோடிக்கும் அதிகமான பணம் கொடுத்து 2003 அவரைத் தங்களது அணிக்கு வாங்கிக்கொண்டது. அங்கு Ronaldo விற்கு பல சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. 


முதல் முறையாக Manchester அணிக்காக களம் இறங்கினார் Ronaldo. பல அனுபவம் மிக்க வீரர்கள் மத்தியில் Ronaldo வின் சாகசங்கள் அந்த மைதானத்தை வாய் பிளக்க வைத்தது. அன்று விளையாட்டை முடித்துக் கொண்டு Ronaldo வெளியேறும்போது முழு மைதானமும் எழுந்து நின்று கைதட்டியது. அந்த கொடிகளில் இருந்து Ronaldo வாழ்க்கையே தலைகீழாக மாறியது. அவர் தொட்டது அனைத்தும் திலங்க ஆரம்பித்தது. மைதானத்தில் ரொனால்டோவின் வேகமும் ஆக்ரோஷமும் உலகெங்கும் இவருக்கு ஒரு மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியது. 


மிக விரைவிலேயே உலகின் டாப் கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் உயர்ந்து நின்றார் ரொனால்டோ. கால்பந்தாட்டத்தின் அனைத்து உயரிய விருதுகளையும் வென்றார். பல கின்னஸ் சாதனைகளை படைத்தார். இன்று ரொனால்டோவின் சொத்து மதிப்பு சுமார் 35,000 கோடிகளையும் கடந்துவிட்டது. 


என்னதான் தன்னிடம் பணம் புகழ் என அனைத்தும் சேர்ந்தாலும் இவர் தனது இறந்த காலத்தை மறந்துவிடவில்லை. உலகெங்கும் ஏழ்மையில் வாடி வரும் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றார். இன்றுவரை தனக்கு கிடைத்த பல உயரிய விருதுகள் மற்றும் தங்க காலணிகளை ஏலம் தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு உலகெங்கும் கொடிய நோய்களினாலும் வறுமையினாலும் பிடிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல உதவிகளை வழங்குகின்றார். 


ஒருநாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை குணப்படுத்த பணம் இல்லாத ஒரு தாய் உங்களின் கையொப்பமிட்ட ஒரு ஜெர்சியை எனக்கு அனுப்பி வைத்தால் அதை ஏலம் விட்டு கிடைக்கும் பணத்தைக் கொண்டு என் மகனை குணமாக்குவேன் என ரொனால்டோ விற்கு கடிதம் எழுதினார். சில நாட்களின் பின்னர் அவருக்கு ரொனால்டோவிடமிருந்து பதில் வந்தது. அதில் ரொனால்டோவின் கையொப்பமிட்ட ஜெர்சியுடன் ஒரு லட்சம் டாலர் கான காசோலையும் இருந்தது. அந்த அளவிற்கு சக மனிதர்களின் வாழ்வில் அக்கறை கொண்டவராக இருக்கிறார் இவர். 


ஒரு நேர்காணலில் யாரும் அறியாத ஒரு குக்கிராமத்தில் மிக மிக ஏழ்மையில் பிறந்த உங்களால் எவ்வாறு இத்தனை பெரிய உயரத்தை அடைய முடிந்தது என ரொனால்டோவிடம் கேட்கப்பட்டபோது நான் வெற்றி பெறுவேன் என்பதை எவருமே நம்பவில்லை. என்னையும் எனது தாயுடன் தவிர. உங்களால் வெற்றி அடைய முடியும் என நீங்கள் முழுமையாக நம்பினால் அக்கணமே பாதி வெற்றியை நீங்கள் அடைந்து விட்டீர்கள். மிக விரைவிலேயே மிகுதியையும் அணைந்து கொள்வீர்கள். எந்த நிலையிலும் நம்பிக்கை இழக்காதீர்கள் என கூறி முடித்தார் ரொனால்டோ.



நன்றி

No comments:

Post a Comment