உன் சோம்பேறித்தனத்தை முழுமையாக விரட்டியடிக்கும் 5 பழக்கங்கள் - Success Motivational Story in Tamil

Success Motivational Story in Tamil
Success Motivational Story in Tamil

உன் சோம்பேறித்தனத்தை முழுமையாக விரட்டியடிக்கும் 5 பழக்கங்கள் - Success Motivational Story in Tamil


வணக்கம் நண்பா சோம்பேறித்தனம் என்பது நம் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக திகழும் ஒரு பொது எதிரியாகும். இந்த சோம்பேறித்தனத்தை தன்னிடமிருந்து அழித்தொழிக்க வேண்டும் என்பதை அனைவரும் விரும்பினாலும் அதற்காக ஏங்கினாளும் அந்த விருப்பமும் இயக்கமும் வெறும் பகல் கனவாகவே இருந்து விடுகின்றன. ஆனால் சில மனிதர்களுக்கோ இந்த போராட்டம் இல்லை. அவர்களது வாழ்வில் சோம்பேறித் தனத்திற்கு அணுவளவும் இடம் இல்லை. அவர்கள் தாங்கள் எண்ணிய காரியத்தை எண்ணிய நேரத்தினுள் செய்து முடிப்பார்கள். வாழ்வில் தங்களது இலக்குகளை எல்லாம் அடைந்து வெற்றியாளர்களாக வலம் வருகின்றார்கள். எனில் அவர்களுக்கு மட்டும் அது எவ்வாறு சாத்தியமானது. அப்படி அவர்கள் என்னை யுக்திகளைக் கையாண்டார்கள்.இக்கேள்விகளுக்கான பதிலை நாம் இனி காண இருக்கின்றோம்.


 முதலாவது ஒரு உறுதியான காரணம் :


வாழ்வில் ஒருவன் யாராக மாறுகின்றான் என்பதை அவனது சூழ்நிலைகளே தீர்மானிக்கின்றன. நான் இந்த வேலையைச் செய்தால் தான் நானும் எனது குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ முடியும் என் வெற்றிக்கு இது ஒன்றே வழி என்ற சூழலில் ஒரு மனிதன் எத்தனை கடினமான வேலையையும் சிறிதும் முகம் சுளிக்காமல் செய்து முடிப்பான். ஏனெனில் அப்போது அதைச் செய்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை என்ற நிலை. எனவே வாழ்வில் சோம்பேறித்தனத்தை விரட்டி அடிக்க விரும்பினால் முதலில் அதையே ஏன் நீங்கள் கைவிட வேண்டும் அதற்கான காரணம் தான் என்ன உங்கள் தலை மீது இருக்கும் பொறுப்பு என்ன என்பதை கண்டறிந்து அந்த காரணங்களையும் உங்கள் மனதில் ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள்.


 இரண்டாவது சிறிய படிகள் :


வாழ்வில் நீங்கள் எச் செயலை செய்ய விரும்பினாலும் அதை சிறிய பல படிகளாக உடைத்து அச்சிறிய படிகளை ஒவ்வொன்றாக செய்து முடிக்க வேண்டும். நீங்கள் ஒரு வேலையை செய்ய வேண்டும் என முடிவெடுத்து அதை உரிய நேரத்தில் செய்து முடிப்பதால் உங்களிடம் ஒரு மனநிறைவும் திருப்தியும் தோன்றும். அதிருப்தி அடுத்தடுத்த வேலைகளைச் செய்வதற்கான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் உங்களுக்குத் தரும். அதை வைத்து நீங்கள் படிப்படியாக முன்னேறிக் கொண்டே இருக்க முடியும். இதை விட்டுவிட்டு ஒரு மிகப்பெரும் வேலையை நீங்கள் ஒரே அடியாக செய்து முடிக்க முயற்சி செய்தால் அது மிக நீண்ட நாட்களுக்கான ஒரு தொடர் போராட்டமாகவே இருக்கும். அத்தொடர் போராட்டத்தை எண்ணும்போதே உங்கள் மனம் சலிப்படைந்து அதை ஆரம்பிக்கவே மனமில்லாமல் தொடர்ந்து பிட்போட்டுக் கொண்டே இருக்கும். இதனையே நாம் சோம்பேறித்தனம் என்கின்றோம். எனவே அச் சோம்பேறித்தனம் உருவாவதற்கு முன்னரே நீங்கள் அதை தடுக்க விரும்பினால் உங்கள் முயற்சிகளை சிறிய பல படிகளாக உடைத்து அப்படிகளை ஒவ்வொன்றாக செய்து முடியுங்கள்.


மூன்றாவது இரண்டு நிமிட விதி :


சில மனிதர்கள் உள்ளார்கள் அவர்கள் எத்தனை சிறிய வேலையாக இருந்தாலும் அதைச் செய்வதற்குக் கூட சோம்பல் கொள்வார்கள். அவ்வாறானதொரு மனிதராக நீங்கள் இருந்தால் நிச்சயம் இந்த இரண்டு நிமிட விதியினால் அந்த பழக்கத்தை உங்களிடமிருந்து துடைத்தெறிய முடியும். அது என்ன இரண்டு நிமிட விதி ஒரு வேலையைச் செய்வதற்கு இரண்டு நிமிடங்களோ அல்லது அதற்கு குறைவான நேரம்தான் தேவைப்படும் எனில். அந்த வேலையை எக்காரணத்திற்காகவும் பிட்போடக்கூடாது. அது அக்கணமே செய்து முடிக்க வேண்டும் என்பதே அந்த இரண்டு நிமிட விதியாகும். இது உலகிலுள்ள பல சாதனையாளர்கள் இடம் இருக்கும் ஒரு பழக்கமாகும். இவ்வாறு சின்னச் சின்ன வேலைகளை உடனடியாக அவ்விடத்திலேயே செய்து முடிப்பதால் அதன்பின் பெரிய வேலைகளையும் தேவையில்லாமல் பிட்போடாது. அதை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற ஒழுக்கமும் மனநிலையும் உங்களிடம் தானாக உருவாகிவிடும். நிச்சயம் இந்த இரண்டு நிமிட விதியின் சக்தி நீங்கள் எண்ணுவதை விட பல நூறு மடங்கு அதிகமானது. இதை உங்கள் வாழ்வில் கொண்டு வாருங்கள் அதன்பின் உங்கள் வாழ்க்கை தானாகவே ஒரு கட்டுக்கோப்புக்குள் வருவதை நீங்களே கண்டு கொள்வீர்கள்.


நான்காவது முடிந்ததை செய்யும் மனநிலை :


எச்செயலைச் செய்தாலும் அதை கச்சிதமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் செய்ய வேண்டும் என்ற மனநிலை இங்கு பலரிடம் உள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு நல்ல குணம் போல தோன்றினாலும் எதார்த்த உலகில் இது உங்களது வெற்றி மிகப்பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். நீங்கள் பல மனிதர்களை பார்த்திருப்பீர்கள் அவர்களிடம் வெற்றி அடைய வேண்டும் என்ற தீராத கனவு இருக்கும். அதை அடைவதற்கான பல திட்டங்களும் இருக்கும். ஆனால் அத் திட்டங்கள் வரும் திட்டங்களாக மட்டுமே இருக்கும். அவர்கள் என்றும் அதை செயல்படுத்த மாட்டார்கள். அது ஏன் என கேட்டால் என் திட்டங்களை செயல்படுத்த பல லட்சம் பணம் தேவை, ஆட்கள்தேவை, வளங்கள் தேவை, இவை அனைத்தும் இல்லாமல் என்னால் எதுவுமே செய்ய முடியாது என சாக்குபோக்கு கூறுவார்கள். ஆனால் அம்முயற்சி அவர்கள் செய்யாதற்கான உண்மையான காரணம் அவர்களது சோம்பேறித்தனம் ஆகும். அச் சோம்பேறித் தனத்திற்கு நியாயம் கற்பிப்பது ஆகவே அவர்கள் இத்தனை கதைகளையும் கூறுகின்றார்கள். ஆனால் வெற்றியாளர்களின் அணுகுமுறை இதற்கு நேரெதிரானது. அவர்கள் என்றும் ஒரு முயற்சியை தன்னால் ஏன் செய்ய முடியாது என்பதற்கான காரணங்களை சிந்திப்பது இல்லை. மாறாக இக்கணம் என்னிடம் என்னென்ன வளங்கள் உள்ளன அவ் வளங்களை பயன்படுத்தி அம்முயற்சியை எவ்வாறு ஆரம்பிப்பது என்பதையே சிந்திப்பார்கள். அதற்கான வழியையும் கண்டறிவார்கள்.


ஐந்தாவது உடலும் மனமும் அடிப்படை :


நீங்கள் என்னதான் சோம்பேறித்தனத்தை ஒழிக்க பலநூறு நுணுக்கங்களை கற்றுக் கொண்டாலும் அந்த நுணுக்கங்கள் அனைத்தையும் பிரயோகிக்க வேண்டியது உங்களது உடலிலும் உள்ளத்திலும்மே. எனவே அவை இரண்டும் எப்போதும் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். உடல் சோர்வுற்று அல்லது மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கும் ஒரு மனிதனால் என்றும் சுறுசுறுப்புடன் ஒரு வேலையைச் செய்து விட முடியாது. அதனால் அவன் தனது காரியங்களை தொடர்ந்து பிட்போட்டுக்கொண்டே செல்வான். ஒரு சோம்பேறியாக மாறுவான் எனவே நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் தேவையான அளவு தூக்கம் தேவை ஏற்படின் உடற்பயிற்சிகள் என உங்களது உடலையும் மனதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க எதையெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் தவறாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.


நண்பா சோம்பேறித்தனத்தை கைவிடுவது நிச்சயம் நீங்கள் எண்ணும் அளவிற்கு கடினமான ஒன்றல்ல. இன்னும் கூறப்போனால் அதை மிக இலகுவாக ஒரு சில நாட்களிலேயே உங்களை விட்டு விரட்டியடிக்க முடியும். அதற்காக உங்களை நீங்கள் தயார் படுத்தவேண்டும். அத் தயார்படுத்தலில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நீங்கள் ஏன் அச் சோம்பேறித்தனத்தை விட வேண்டும் என்பதற்கான உறுதியான காரணத்தை கண்டறியுங்கள். உங்கள் முயற்சிகளை சிறிய பல படிகளாக உடைத்து அச்சிறிய படிகளை ஒவ்வொன்றாக செய்து முடியுங்கள். இரண்டு நிமிட விதியைப் பின்பற்றுங்கள். அனைத்தையும் கச்சிதமாக தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையை விட்டு விலகி முடிந்ததை முடிந்தவரை அதிகம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதுவே அனைத்திற்கும் அடிப்படையாகும்.


நன்றி








No comments:

Post a Comment