Cristiano Ronaldo - positive energy story in tamil
|
Cristiano Ronaldo - positive energy story in tamil |
மேலும் படிக்க :
இவ்வுலகில் வெற்றிக்காக உழைப்பவர்கள் பலர் அதற்காகப் பாடுபட்டு தியாகம் செய்பவர்கள் பலர் ஆனால் அவர்கள் அனைவராலும் வெற்றியை அடைந்து கொள்ள முடிவதில்லை. வெற்றி என்பது இங்கு ஒரு சிலரால் மட்டுமே அடையக்கூடியது ஒரு பொக்கிஷமாகவே பார்க்கப்படுகின்றது. அது ஏன் என நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா அப்படி அந்த வெற்றியாளர்களிடம் என்னதான் சிறப்பு இருக்கிறது என்பதை சிந்தித்ததுண்டா. ஒரு மனிதன் தன் முயற்சியில் வெற்றி அடைவான் இல்லையா என்பதை உறுதியாக தீர்மானிப்பது அவனது மனநிலையும் அவனிடம் இருக்கும் சில பழக்கங்களும் மட்டுமே அவ்வாறு தன்னிடம் இருக்கும் ஒரு தலை சிறந்த பழக்கம் குறித்துக் கூறுகின்றார் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. கால்பந்தாட்டத்தில் எனது ஆரம்பகால மிக மிகக் கடுமையானது அன்று என்னிடம் கூறி கொள்ளும்படி எந்தத் திறமையும் இருக்கவில்லை. எனது கிளப்பில் இருந்த அனைத்து இளைஞர்களும் என்னைக் காட்டிலும் பல மடங்கு திறமைசாலிகளாக இருந்தார்கள். அங்கு எனது இரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது நான் கால்பந்தாட்டத்தில் தகுதியற்றவன் என்ற எண்ணம் அடுத்தவரது மனதில் மட்டுமல்லாது என் மனதிலும் தோன்றி இருந்தது. ஆனால் நான் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை அதை எண்ணி மனம் சோர்ந்து விடவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலையோடு தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்தேன் எனது திறமைகளை மேம்படுத்திக் கொண்டிருந்தேன். காலங்கள் கடந்தன எனது மன வலிமையுடன் சேர்த்து உடல் வலிமைக்கும் திறமைகளும் அதிகரித்தன நான் பலம் மிக்கதொரு வீரனாக மாறினேன் என்று வெற்றிக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு நான் கூறும் ஒரே அறிகுறி இன்று நீங்கள் பலமிழந்து உதவி என்று இருந்தாலும் உங்களது வாழ்க்கை எவ்வளவு கடினமாக நகர்ந்தாலும் நீங்கள் உங்களது கனவுகளை நோக்கி தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். கனவுகளுக்காக உங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். வாழ்வில் எது குறித்தும் கவலை கொள்ளாது அவற்றிற்காக போராடவேண்டும். நிச்சயம் இங்குள்ள அதிகமான மக்கள் உங்களை நம்ப போவதில்லை அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. அவர்கள் எப்போதும் உங்களில் குறை கண்டு கொண்டே இருப்பார்கள். உங்களை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதுகுறித்து என்றும் நீங்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை அம்மக்களின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை. மாறாக நீங்கள் உங்களது கனவுகளில் கவனம் செலுத்த வேண்டும் வாழ்வில் உங்களுக்கான கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் செய்து முடிக்க வேண்டிய காரியங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதுவே வெற்றியாளர்களின் பண்பாகும் தங்களைச் சுற்றி எத்தனை பெரும் தடைகள் இருந்தாலும் அவர்களின் கவனம் என்றும் சிதருவதில்லை. அவர்கள் தேவையற்ற சிந்தனைகளில் தங்களது நேரத்தை வீணடிப்பதில்லை. என்றும் அவர்களின் மனதில் இருப்பதெல்லாம் தாங்கள் அடைய வேண்டிய இலக்கு அதை எவ்வாறு அடைய வேண்டும் என்ற சிந்தனையும் மட்டுமே. சிந்தனையோடு அவர்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பார்கள். அது போன்றதொரு மனிதனாக நீங்கள் மாற வேண்டும் உங்கள் வாழ்க்கை எவ்வளவு குழப்பமான தாக இருந்தாலும் உதவியின்றி தவித்தாலும் உங்களது இலக்குகளை நோக்கி நீங்கள் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் நிச்சயமா பயணம் இங்கு பலருக்கு கிட்டாத ஒரு மகத்துவம் வெற்றியை உங்களுக்குப் பெற்றுத் தரும்.
மேலும் படிக்க :
முடிந்தவரை பகிரவும்
நன்றி
Sriram
Hi Friends Welcome To My Blogger This Website Cooking For All Recipes.