Tamil Thannambikkai Ponmozhigal - தன்னம்பிக்கை பொன்மொழிகள்

தன்னம்பிக்கை பொன்மொழிகள் - Tamil Thannambikkai Ponmozhigal

தன்னம்பிக்கை பொன்மொழிகள் - Tamil Thannambikkai Ponmozhigal

  • அதிகாலையில் துயில் எழு.

  • அதிக உறக்கமும், அதிக இரக்கமும் உன்னை வாழவிடாது.

  • குளிர்ந்த நீரில் உடலை சுத்தப்படுத்து.

  • உன் மனம் தானாக புத்துணர்ச்சி அடையும்!

  • ஒவ்வொரு நாளிலும் ஏதாவது ஒன்றை புதியதாக கற்றுக்கொள்!

  • அது உன்னை மற்றவர்களைவிட சிறப்பானவனாக மாற்றும்.

  • உன்னை சரி செய்!

  • உன் கவனத்தை ஒருநிலைப்படுத்து!

  • உன் கவனம் செல்லும் இடத்தில் உன் ஆற்றல் பாயும்.

  • இன்று செய்யவேண்டியதை இன்றே செய்!

  • தள்ளிப்போடுதல் என்பது விரைவில் உனக்கு கொள்ளிப்போடும்.

  • உன் உதட்டோரம் சிறு புன்னகை எப்போதும் இருக்க வேண்டும்.

  • அது தன்னம்பிக்கையின் அடையாளம்.

  • உன்னிடம் இல்லாத ஒன்றை குறித்து யோசிக்காதே!

  • இருப்பதை சரியாக பயன்படுத்து.

  • அவ்வபோது சிறு இடைவெளி எடு.

  • நீ எடுக்கும் இடைவெளி, உன்னை கூராக்க வேண்டும்.

  • மழுங்கடித்து விடக்கூடாது.

  • கூராக்காத எந்த ஆயுதமும்...

  • விரைவில் துருப்பிடித்துப்போகும் என்பதை,

  • உணர்ந்து செயல்படு.

  • இழந்ததை எண்ணி வேதனைப்படாதே.

  • இனி எப்படி இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இரு!

  • மன நிறைவோடும் மகிழ்வோடும்..

  • நீ ஒவ்வொரு செயலிலும் ஈடுபட்டால்,

  • உன்னிடம் தோற்றுப்போக

  • பலரும் காத்துக்கொண்டிருப்பார்கள்!

  • உன்னை படைத்த பேராற்றல்.

  • உன்னை தனக்குள் மூழ்கடிக்கவே,

  • உறக்கத்தை உனக்குள் ஏற்படுத்தி இருக்கின்றது!

  • இரவில் அமைதியாக கண்ணுறங்கு.


நன்றி


No comments:

Post a Comment