தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil

தன்னம்பிக்கை கவிதைகள் | Thannambikkai Quotes in Tamil
Thannambikkai Quotes in Tamil


  • முகத்தை அழகுப்படுத்துவதை, உன் முதன்மை நோக்கமாக வைக்காதே!


  • ஒரு நாள் அது உன் தன்னம்பிக்கையை தகர்க்கும்.


  • மனதை அழகுப்படுத்து, அதுவே எல்லாவற்றிற்கும் அடிப்படை.


  • அசட்டுத்தனமான சில நம்பிக்கையில் வாழ்வை கழிக்காதே!


  • நம்பிக்கையற்ற நிலையை விட...


  • முட்டாள்தனமான நம்பிக்கை நம்மை முடமாக்கும்.


  • அந்தகாலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை.


  • ஆனால், எல்லோரிடமும் நேரம் இருந்தது.


  • இப்பொழுது எல்லோரிடமும் கடிகாரம் இருக்கின்றது.


  • ஆனால், யாரிடமும் நேரம் இல்லை.


  • நிகழ்காலத்தில் மூளையை வளர்ப்பதைவிட, முடியை வளர்ப்பதிலேயே...


  • பலரின் வாழ்நாட்கள் கரைந்து போகின்றது.


  • உனக்கானதை ஏற்றுக்கொள்!


  • நிறைவும் நிம்மதியும் உன் அகத்தை சூழும்.


  • இன்று ஏற்க மறுப்பதை வேறொரு நாள் ஏற்கும் நிலை உன் வாழ்வில் உண்டாகும்.


  • உன் உடலை புரிந்துகொள்! அது உனக்கென்று கொடுக்கப்பட்டது.


  • உள் இருக்கும் உன்னை அறிய, உண்மை அறிய உடலே வழி!


  • நம் உடலை கெடுக்கவோ? தேவையற்ற காரியங்களுக்கு பயன்படுத்தவோ?


  • நமக்கு அனுமதி இல்லை!


  • ஏனென்றால் உடல் உண்டாக்கப்பட்டது அல்ல, படைக்கப்பட்டது.


  • பேராற்றலை உணர!


  • உன் மனதை வளமாக்கு, உன் உடல் நலமாகும்.


  • உன் உடலை பலமாக்கு, உன் மனம் வளமாகும்.






No comments:

Post a Comment