வாழ்வில் சோம்பேறியாக வாழ்கின்றாய் ? இது உனக்கான குட்டிகதை.. | Thannambikkai Story in Tamil


Thannambikkai Story in Tamil
Thannambikkai Story in Tamil














வாழ்வில் சோம்பேறியாக வாழ்கின்றாய் ? இது உனக்கான குட்டிகதை.. | Thannambikkai Story in Tamil

ஒரு நாள் ஒரு விவசாயி தனது கிராமத்துக்கு அருகில் இருக்கும் மலையடிவாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரின் கண்களுக்கு ஒரு கழுகின் முட்டை தென்பட்டது. அதைக் கண்டு ஆச்சரியமடைந்து அவ் விவசாயி அந்த முட்டையை தனது பண்ணைக்கு கொண்டு சென்று அங்கு இருந்த கோழி முட்டையுடன் சேர்த்து அதனையும் அடை வைத்தார். நாட்கள் கடந்தன முட்டையிலிருந்து குஞ்சுகளும் வெளிவர ஆரம்பித்தன. பல கோழிகளுக்கு நடுவில் ஒரு கழுகும் பிறப்பெடுத்தது அக்கழுகு தனது நண்பர்களை கவனித்தது சகோதரர்களையும் கவனித்தது தனது தாயையும் கவனித்தது .


அவை அனைத்தும் கோழிகள் ஆகவே இருந்தன எனவே அது தன்னையும் ஒரு கோழி ஆகவே எண்ணியது மண்ணைத் தோண்டி புழுக்களை உண்டது கோழிகளைப் போலவே சில அடி உயரம் வரை பறந்தது. தனது கோழி கூட்டத்துடன் அது மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது ஒரு நாள் பண்ணையில் சுற்றிக் கொண்டிருந்த அக்கழுகு வானில் ஒரு மிகபெரிய உருவம் வட்டம் இடுவதே கண்டது அகண்ட சிறகுகளுடன் கம்பீர தோற்றத்துடன் தோன்றிய உருவத்தைக் கண்டதும் அனைத்துக் கோழிகளும் தனது கூட்டுக்குள் ஓடி ஒளிந்து கொண்டன. சிறிது நேரத்திலேயே அவ்வுருவம் அப் பண்ணையை கடந்து சென்றது
இதை கண்டு ஆச்சரியம் தாங்காத அந்த கழுகு குஞ்சு தனது தாயிடம் சென்று வானினை ஆக்கிரமித்த படி பறக்கும் அவ்வுருவம் என்ன என் தாயிடம் வினாவியது. அதற்கு அதன் தாய் அதுதான் கழுகு வானின் அரசன் அதனால் வானைத் தொடும் அளவிற்கு உயரமாக பறக்க முடியும் எனக் கூறியது. அதற்கு அந்த கழுகு குஞ்சி நம்மால் வானைத் தொடும் அளவிற்கு பறக்க முடியாத என அப்பாவியாக கேட்டது. அதற்கு தாய்க்கோழி இல்லை அது நிச்சயம் நம்மால் முடியாது. நாம் கோழிகள் குறுகிய சிறகு உடையவர்கள் அதிகம் உடல் பருமன் கொண்டவர்கள் நிச்சயம் நம்மால் அவ்வளவு தூரம் பறக்க முடியாது அவ்வாறு பிறக்க நீ முயற்சிக்கவும் கூடாது அது உனக்கு தோல்விய வே கொண்டு வரும் என கூறியது. தனது தாயின் அறிவுரையை கேட்டு அக் கழுகு குஞ்சு வானத்தோடு வேண்டும் தனது கனவை மூட்டை கட்டிவிட்டு நிலத்துக்குள் மறைந்திருக்கும் புழுவை தேட ஆரம்பித்தது நாட்களும் கடந்தன கழுகும் வளர்ந்தது. எம்பி குதித்து வானில் பறக்க பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அது பறக்கவில்லை. என்றோ ஒரு நாள் தனது தாய் கூறிய அறிவுரை மட்டுமே தனது மனதில் பதிந்திருந்தது. இப்படியே காலம் கடந்தது அக் கழுகு தனது வாழ்நாள் முழுவதையும் ஒரு கோழி ஆகவே வாழ்ந்து இறுதியாக ஒரு கோழி ஆகவே இறந்தும் போனது. 

உங்கள் மனம் இதை நிச்சயம் அறியும் இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை விட சிறப்பான வாழ்க்கையை நிச்சயம் உங்களால் வாழ முடியும். இன்று நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட சிறப்பான வேலையை உங்களால் நிச்சயம் செய்ய முடியும். வாழ்வில் உங்களால் பல சாதனையை செய்யமுடிந்தும் நீங்கள் அதனை செய்வதில்லை. உங்களால் ஒரு கழுகைப் போல வாழ முடிந்தும் நீங்கள் ஒரு கோழி ஆகவே வாழ்கின்றீர்கள். இது ஏன் என நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா நிச்சயம் சிந்திதீர்ப்பீர்கள் இதற்கு முன்னால் பலமுறை அதில் ஒரு முடிவையும் மேற்கொண்டு இருப்பீர்கள். சில நாட்கள் அல்லது வாரங்கள் அம்முடிவு காக உழைத்தும் இருப்பீர்கள். ஆனால் உழைப்பை உங்களால் தொடர முடியவில்லை சில வாரங்களிலேயே உங்கள் ஆர்வமும் குறைந்துவிடும் உங்கள் உழைப்பும் நின்றுவிடும். 

ஒன்றை மறந்து விடாதீர்கள் ஒரு இலக்கை நீங்கள் அடைய வேண்டும் என முடிவெடுத்தாள் அம்முயற்சியில் உங்கள் ஆர்வம் தீர்ந்து போனாலும் அது உங்களுக்கு கசப்பான மாறினாலும் நீங்கள் அடைய எண்ணியதை அடையும்வரை உங்கள் முயற்சியை நிறுத்தாது போராடும் மனநிலை மட்டும் உங்களை ஒரு வெற்றியாளனாக மாற்றும் என் மனநிலையை நிச்சயம் ஒரே நாளில் கொண்டுவர இயலாது தொடர்ச்சியாக பயிற்சியின் மூலம் சிறுகச்சிறுக வே இதை உருவாக்கிக் கொள்ள முடியும். முதலில் அதற்கான பொறுமையும் வெற்றியடைய வேண்டும் என்ற வைராக்கியத்தையும் உங்களிடம் கொண்டு வாருங்கள் உங்களின் சொகுசு வட்டத்திலிருந்து வெளியே வாருங்கள் நிச்சயமாக உலி படாத கல்லினால் சிற்பமாக மாறமுடியாது எக்கல் உலியின் வழியே தாங்குகின்றதோ அதன் மீது ஓங்கி அடிக்கப்பட்ட பின்பும் உடையாது உறுதியாக நிற்கின்றதோ நிச்சயம் அக்கல் அனைவரும் வியந்து பார்க்கும் ஒரு சிலையாக மாறியே தீரும் அதில் எந்த சந்தேகமும் இல்லை. இறுதியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் வாய்ப்புகள் தற்காலிகமாகவையே அவை கிடைக்கும்போது முடிந்தவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் சோம்பேறித்தனம் கொண்டால் உங்கள் வாழ்நாள் முழுவதையும் ஒரு கோழிப்பண்ணையில் வாழும் கழுகு ஆகவே கழிக்க வேண்டியது வரும்.

No comments:

Post a Comment