சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க இதை பாருங்கள் - Health

 

சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க இதை பாருங்கள்

இன்று இந்த தொகுப்பில் இயற்கையான முறையில் சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இருப்பது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


சோம்பல் ஏற்படுவதற்கான 

காரணங்கள் :


1. எப்போதுமே நாம் எந்த வேலை செய்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும். விருப்பத்துடன் வேலை செய்தால் நாம் சுறுசுறுப்பாக இருக்கலாம். ஒரு வேலையை விருப்பமில்லாமல் செய்தால் 

நம்மளால் அந்த வேலையை கொஞ்ச நேரம் கூட செய்யமுடியாது.

அதனால் எந்த வேலை செய்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும்.


2. சில நபர்களை பார்த்தீர்களென்றால் காலையில் எழுந்தவுடன் சோர்வாக இருக்கு கை, கால், தசை, உடல் அனைத்தும் வலிக்கிறது என்று வருத்தப்படுவார்கள். அதற்கு காரணம் ஜீரண கோளாறு, கால்சியம் மற்றும் ஊட்டச்சத்து கோளாறு இந்தமாதிரி காரணங்களால் நமது உடல் சோர்வாக அதிக அலுப்பாக இருக்கும்.


சோம்பலை தவிர்க்க நான் சொல்லப் போகும் லேகியத்தை தினமும் காலையில் ஒரு உருண்டை சாப்பிடுவதன் மூலம் இந்த சோம்பலை தவிர்க்கலாம்.


லேகியம் செய்வதற்கு தேவையான பொருள்கள் :


1. மிளகு

2. நெய்

3. அச்சு வெல்லம்

4. தண்ணீர்


சோம்பல் நீங்கி உடல் சுறுசுறுப்பாக இருக்க இதை பாருங்கள்


செய்முறை : 


முதலில் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவு நெய் சேர்த்து அதில் 3 டேபிள் ஸ்பூன் அளவு மிளகு சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து எடுக்கவும். பின்பு அதை தனியாக எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். 


அரைத்த பிறகு ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதில் நாம் அச்சு வெல்லத்தை சேர்த்து நாம் பாகு காய்ச்சவும். பாகு காய்ந்தவுடன் அதில் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த மிளகு சேர்த்து அனைத்தையும் ஒரு நிமிடம் வேக வைக்கவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து அது கெட்டியாக லேகிய பதத்துக்கு ஆகியவுடன் அடுப்பை Off செய்யவும். அதன்பின்பு அது ஆறிய பின்பு அதை சின்னச்சின்ன உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய உருண்டைகளை ஒரு டப்பா அல்லது பாத்திரத்தில் போட்டு வைத்துவிட்டு. தினமும் காலையில் ஒரு உருண்டை சாப்பிடவும். 


உடல் சுறுசுறுப்பாக இருக்க சாப்பிட வேண்டியவை : 

உடல் சுறுசுறுப்பாக இருக்க காய்கறிகள், பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை அதிகம் சாப்பிடவும். ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வரை உறங்கவும் இரவு 9 மணிக்கு உறங்கி காலை 6 மணி அளவில் தினமும் எந்திரிக்க பழகவும் தினமும் அதிகாலை 6 மணிக்கு எழுந்திருப்பது மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். 


செய்கின்ற வேலையை எப்பொழுதுமே சுறுசுறுப்பாக செய்யவும். இரவு நேரங்களில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை மட்டுமே சாப்பிடவும். தண்ணீர் அதிகமாக குடிக்கவும்.


இவ்வாறு செய்தால் உடல் சோம்பேறியாக இருப்பதை தடுக்கலாம்.


நன்றி.

No comments:

Post a Comment