How to Make Prawns Varuval | Eral Varuval in Tamil

How to Make Prawns Varuval | Eral Varuval in Tamil




Eral வறுவல் செய்வதற்கு தேவையான பொருள்கள் :

1. 1/2 kg இறால்
2. மஞ்சள் தூள்
3. உப்பு
4. காஞ்ச மிளகாய்
5. கொத்தமல்லி ( Coriander Seeds )
6. சின்ன சீரகம்
7. சோம்பு
8. மிளகு
9. இஞ்சி
10. பூண்டு
11. எலுமிச்சைச் சாறு
12. தண்ணீர்
13. பசு நெய்
14. பெரிய வெங்காயம்
15. தயிர்
16. கறிவேப்பிலை


செய்முறை :

இறால் வறுவல் செய்வதற்கு முதலில் சுத்தம் செய்த இறாலை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து 10 நிமிடம் வரை வேக வைக்கவும். இறால் வெந்தபிறகு அதை தனியாக எடுத்து வைக்கவும்.

பின்பு 8 காஞ்ச மிளகாய் இரண்டு நிமிடம் வறுத்து தனியாக வைக்கவும்.

பின்பு ஒரு பேனில் 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், மற்றும் 4 காஞ்ச மிளகாய் சேர்த்து அனைத்தையும் வறுத்து எடுக்கவும். வறுத்து எடுத்த பிறகு அதில் ஒரு துண்டு இஞ்சி, 2 பல் பூண்டு, எலுமிச்சைச்சாறு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

அரைத்த பிறகு ஒரு பேனில் கால் Cup நெய் சேர்த்து அதில் 200 கிராம் பெரிய வெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும். 2 நிமிடம் கழித்து பிறகு அதில் நாம் மிக்ஸியில் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்க்கவும் அதனுடன் கால் Cup தயிர் சேர்த்து அனைத்தையும் நன்கு Mixed செய்தபிறகு 8 நிமிடத்தில் இருந்து 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.

அனைத்தும் வெந்த பிறகு கடைசியாக கருவேப்பிலை மற்றும் நாம் வேகவைத்திருந்த இறாலை சேர்த்துசேர்த்து 3 லிருந்து 4 நிமிடம் வேக வைக்கவும்.

இதோ நம்மளுடைய சுவையான இறால் வறுவல் தயார்



நன்றி

No comments:

Post a Comment